பெங்களூரு:தன் மீது அவதூறாக குற்றம் சாட்டிய, சாமியார் நித்யானந்தா உட்பட,
18பேர் மீது, ஆர்த்தி ராவ், பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார்
செய்துள்ளார்.பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா மீது,
முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ், பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இது
குறித்த வழக்கு விசாரணை, கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து
வருகிறது,இதற்கிடையில், கடந்த 2ம் தேதி, ஆர்த்தி ராவ் குறித்து
நித்யானந்தா, கன்னட, டிவி ஒன்றில் பேட்டி அளித்தார். இதையறிந்த ஆர்த்தி
ராவ், நித்யானந்தா மீது, பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார்
செய்தார்.புகாரில், நித்யானந்தாவிடம், நான் சீடராக இருந்த போது, என்னை
ஏமாற்றி பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக,
நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கன்னட,
டிவி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது, என்னைப் பற்றி அவதூறாகக்
கூறியுள்ளார்.நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் போது, என் பெயருக்கு
களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நித்யானந்தா உட்பட, 18 பேர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.இதன் மீது போலீசார்,
நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
http://tamil.yahoo.com/
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=565592
http://tamil.yahoo.com/
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=565592
No comments:
Post a Comment