பெங்களூரு:நித்யானந்தா விஷயத்தில், தமிழக அரசு விரைந்து
செயல்பட்டது;கர்நாடக அரசோ, அவருக்கு கைப்பொம்மையாகச் செயல்படுகிறது.
நவம்பர் 1ம் தேதிக்குள் கர்நாடகாவை விட்டு வெளியேற்றவில்லை என்றால்,
போராட்டம் வெடிக்கும் என, கன்னட அமைப்பினர் எச்சரித்தனர்.நித்யானந்தாவுக்கு
எதிராக தமிழக அரசு விரைந்து செயல்பட்டதால், மதுரை ஆதீனத்திலிருந்து
நீக்கப்பட்டார். தமிழகத்தில் இருந்தால், தன்னை கைது செய்யக்கூடும் என,
நினைத்து, கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடகா பிடதி ஆசிரமத்தில் தஞ்சம்
புகுந்தார். அவரை கர்நாடகாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என, கன்னட
அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நித்யானந்தா கதையை, சத்தியானந்தா என்ற பெயரில் சினிமா எடுத்த தயாரிப்பாளர் மதன்பட்டேல், ஸ்பந்தன அமைப்பு தலைவி வீணா, கன்னட சேனை அமைப்பு தலைவர் ஆனந்த்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:சத்தியானந்தா படத்தை வெளியிட விடாமல், நித்யானந்தா தொடந்து இடையூறு செய்கிறார். கர்நாடகா சென்சார் போர்டு தலைவர் நாகராஜ், நித்யானந்தாவிடம் பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுக்க மறுத்தார். தற்போது, மத்திய சென்சார் போர்டு அனுமதியளித்துள்ளது. கன்னடம், தெலுங்கில் விரைவில் படம் வெளியாகும்; தமிழிலும் தயாரிக்கப்படும்.
மதுரை ஆதீனம் விஷயத்தில், தமிழக அரசு விரைவாக செயல்பட்டது. தமிழகத்தில் இருந்தால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பீதியில், நித்யானந்தா கர்நாடகாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.கர்நாடகா அரசு நடவடிக்கை எடுக்காமல், நித்யானந்தாவின் கைப்பொம்மையாக செயல்படுகிறது.கர்நாடகா மகளிர் நலவாரியமும் ஆதரவாக உள்ளது. நவம்பர் முதல்தேதிக்குள், நித்யானந்தாவை கர்நாடகாவை விட்டு வெளியேற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்.இவ்வாறு மூவரும் கூறினர்.
http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-181500509.html

http://www.youtube.com/watch?v=0PZsGPP6s_0&feature=plcp
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=QzhjoBVvGyc
ReplyDeleteNithyananda Comedy Show - Season 2