இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: மதுரை ஆதீனத்தின் மடாபதிபதியாக அருணகிரிநாதர் உள்ளார். இவரும், இவரால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நித்யானந்தாவும் சேர்ந்து 23.4.2012ல் மதுரை ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையை உருவாக்கினர். ஆதீன சொத்துக்களை விற்பனை செய்வது, குத்தகைக்கு விடுவதற்கு முன்பு இந்து அறநிலையத் துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் எந்த சொத்தையும் விற்கக்கூடாது.
மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் இருக்கும்போதே பல ஆண்டுகளாக இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமலேயே ஏராளமான சொத்துக்களை விற்பனை செய்துள்ளார். 1995ம் ஆண்டில் 7.3 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்றுள்ளார். 1999ம் ஆண்டில் ஆதீனத்திற்கு சொந்தமான மேலும் ஒரு சொத்தை விற்றுள்ளார். அரசு விதிகளுக்கு முரணாக செயல்பட்டதன் மூலம் மடாதிபதியாக இருக்க அருண கிரிநாதர் தகுதி அற்றவர். அவர் இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததும் சட்டத்திற்கு புறம்பான செயல். கடந்த 10 ஆண்டுகளாக ஆதீன மடம் சார்பில் மீனாட்சி கோயிலில் நடக்கும் பூஜைகள் நடக்கவில்லை.
சுயவிளம்பரத்திற்காகவும் ஆதீன மடத்தின் வருவாயை அருணகிரிநாதர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் பதிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி குருவையா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் நாகேந்திரன் ஆஜரானார். மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
நித்தியானந்தா இளைய மடாதிபதியாக செயல்பட தகுதியற்றவர் என அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை ஆதீன மடத்தையே அரசிடம் ஒப்படைக்கும்படி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28496
more news link
http://www.dailythanthi.com/article.asp?NewsID=765837&disdate=10/19/2012
http://www.maalaimalar.com/2012/10/19110849/today-nithyananda-resign-Aadhe.html
No comments:
Post a Comment