செவ்வாய், 23 அக்டோபர் 2012( 10:20 IST
இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கிவிட்டாலும், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மீதான நடவடிக்கைகள் தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஆதீனம் உயிரோடு இருக்கும்போது இளைய ஆதீனத்தை நியமிக்க முடியாது என்றும், அவ்வாறு நியமித்தது தவறு என்றும் கூறினார்.
அவ்வாறு நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தனது சீடர்களில் ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும் என்றும், அவர் எந்தவித சட்டரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவராக இருக்க வேண்டும் என்றும் நவநீத கிருஷ்ணன் கூறினார்.
நித்யானந்தா நியமனத்தால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி இந்து அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நித்யானந்தா இளைய ஆதினம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் மதுரை ஆதீனம் மீதான நடவடிக்கை தொடரும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1210/23/1121023007_1.htm

No comments:
Post a Comment