ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 11:32 AM IST
திருவண்ணாமலை,அக்.20-
மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவை இளைய ஆதீனமாக அறிவித்து அவருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இந்நிலையில் நித்யானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
மதுரை ஆதீனமாக நீடிக்க நித்யானந்தா தகுதியற்றவர். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன என்று எதிர்ப்பாளர்கள் கூறிவந்தனர். இப்பிரச்சினை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அண்மையில் விசாரணையின் போது நித்யானந்தா எந்த மடத்துக்கும் ஆதீனமாக இருக்கத் தகுதியற்றவர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுரை இளைய ஆதீனமாக இருந்த நித்தியானந்தாவை நேற்று முன்தினம் அந்த பொறுப்பில் இருந்து மதுரை ஆதீனம் அதிரடியாக நீக்கினார். இளைய ஆதீனம் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நித்யானந்தாவின் சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மதுரை ஆதீனம் விளக்குதூண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். கைது நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து நித்யானந்தா தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் இருந்து காரில் நித்யானந்தா வெளியே சென்றார். அவர் இதுவரை ஆசிரமம் திரும்பவில்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் திடீரென தலைமறைவாகி உள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் பெங்களூர் சென்றாரா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? என்பது குறித்து தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2012/10/21113237/thiruvannamalai-AshramNithya.html
நித்யானந்தா கைது ! watch on பாலிமர் டிவி !! பிளாஷ் நியூஸ் !!
ReplyDeleteஇவனை ஏன் எல்லோரும் திட்டுறாங்கன்னு புரியல??? மக்களுக்கு அறிவு வேணும்..பாருங்க இவன் இவ்வளவு கேப்மாரித்தனம் செஞ்சும் இன்னும் இவனுக்கு கூட்டம் கூடுது, சொல்லுறவன் 1000 சொல்லுவான் மக்களுக்கு அறிவு எங்கே போச்சு??? ஒருத்தன் தங்கச்சிய சீண்டினா போதும் கைய கால வெட்ட கிளம்புறான் அதே தங்கச்சிய எதாவது சாமியார் தொட்டு தடவினா பப்பராபான்னு பாக்குறான்....சீட்டு கம்பெனி நடத்தி அவன் அவன் சுருட்டுறது கால காலமா நடக்குது இன்னும் அறிவு கேட்ட மக்கள் சீக்கிரமே ( அண்ணாமலை, சூர்யா வம்சம் படத்துல வர்ற மாதிரி ..ல்) பணக்கார கனவு கண்டு கோழி, தேங்காய்..இப்படி பணத்தை போட்டு கமிசனர் ஆபீச்ல புலம்பிகிட்டு இருக்கானுங்க... முதலில் நீங்க திருந்துங்க...திருடனா பார்த்தெல்லாம் திருந்த மாட்டான் மக்கள் திருந்துங்க...
ReplyDeleteஎப்படியோ , இவரால் மக்களுக்கு தொல்லை வராமல் இருந்தால் ஓகே ....
ReplyDeleteஊர் உலகுக்கே தெரியும் இவன் ஒரு பொம்பள பொரிக்கினு அப்புறம் எப்படி இந்த மொட்ட ... இளைய ஆதீனமாக அறிவித்து அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தது?
ReplyDeleteHe is probably in Bidadi. Please alert Bhimashanker Patil of Karnataka Navanirmana Sene, they will take care of the leech.
ReplyDelete