சென்னை:
நித்தியானந்தா விவகாரத்தில் அரசு மவுனம் காத்ததற்கு உயர்நீதி மன்றம்
அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நித்தியானந்தா விவகாரத்தில் கடந்த அரு
மாதத்தில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அரசு நடவடிக்கை எடுத்திருந்தால்
இத்தனை வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்திருக்காது என்று நீதிபதிகள்
பானுமதி, சுப்பையா உள்ளிட்ட ஐகோர்ட் அமர்வு நீதி மன்ற பெஞ்ச் கேள்வி
எழுப்பியுள்ளது.
மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். மேலும், ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும் என்றும் ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர் என்றும் ஏராளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர் என்றும், எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை என்றும் மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தி துளியும் தகுதி இலாதவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளை சட்ட விரோதமானது
மதுரை ஆதீனம் அருணகிரி மற்றும் நித்தி உருவாக்கிய அறக்கட்டளை சட்டவிரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அறக்கட்டளை மூலம் மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் சார்பில் ஜெகதலபிரதாபன் மனு மீதான விசாரணையின் பொது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28226

No comments:
Post a Comment