மதுரை: இளைய ஆதீன பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நித்யானந்தாவின்
சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் மதுரை ஆதீனம் புகார்
கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா கைது
செய்யப்படலாம் என்ற தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,
திருவண்ணாமலையில் வக்கீல்களுடன் நள்ளிரவில் நித்யானந்தா ரகசிய ஆலோசனை
நடத்தியுள்ளார். திருஞானசம்பந்தரால் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு
தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர்
இருக்கிறார். இவர், 32 ஆண்டுகளாக ஆதீனமாக உள்ளார். ஆதீனத்தின் வாரிசாக
பெங்களூர் பிடதி ஆசிரம தலைவர் நித்யானந்தாவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி
அறிவித்தார். தருமபுரம் ஆதீனம் தலைமையில் 17 ஆதீனங்கள், மடாதிபதிகள் கூடி
நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்யும்படி அருணகிரிநாதரை கேட்டுக் கொண்டனர்.
இந்து அமைப்புகள் தீவிர போராட்டங்களும் நடத்தின. கீழ்கோர்ட்,
ஐகோர்ட்களிலும் நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், ஏற்கனவே நித்யானந்தாவை நீக்கக் கோரி சென்னை ஐகோர்ட் கிளையில்
தாக்கல் செய்த மனுவுக்கு, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நித்யானந்தா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியது. மதுரை
ஆதீன வாரிசாக நித்யானந்தா நியமிக்கப்பட்டது சட்டவிரோதம். எந்த மடத்துக்கும்
தலைமை வகிக்கும் அருகதை அவருக்கு இல்லை என அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மதுரை கோர்ட்டில், ஆதீனம் அருணகிரி, சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்துள்ளார். அவருக்கு அந்த பதவியில் நீடிக்க தகுதி கிடையாது. எனவே, மடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆதீனம் பதிலளிக்க உத்தரவிட்ட கோர்ட், விசாரணையை அக். 29-ம் தேதிக்கு நேற்று மாலை ஒத்திவைத்தது. இந்நிலையில், மதுரை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தாவை நேற்றிரவு அதிரடியாக டிஸ்மிஸ் செய்வதாக அருணகிரிநாதர் அறிவித்தார். மேலும், நித்யானந்தா தன்னை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும், அவரது சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் போலீசில் ஆதீனம் புகார் கொடுத்தார். இதையடுத்து, ஆதீனத்துக்கு சென்ற போலீசார், அங்கிருந்த நித்யானந்தா சீடர்களை வெளியேற்றினர். இதற்கிடையே, நித்யானந்தாவை அருணகிரிநாதர் திடீரென நீக்கியது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது பதவிக்கு அரசால் ஆபத்து வரப்போகிறது என அச்சப்பட்ட அருணகிரிநாதர், இதற்கெல்லாம் காரணம் நித்யானந்தாவின் நியமனம்தான் என்பதை உணர்ந்தார். நித்யானந்தா வெளியேறிவிட்டால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என கருதினார். உடனடியாக திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தாவுடன் போனில் பேசி, உங்களால்தான் இவ்வளவு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளது. நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள். ராஜினாமா கடிதத்தை எனக்கு அனுப்புங்கள். அதை வெளியிடுகிறேன் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நித்யானந்தா சம்மதம் தெரிவித்தார். இதை மதுரை ஆதீனமே, பத்திரிகையாளர்களிடம் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தார். இதுபற்றி திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தாவை பத்திரிகையாளர்கள் சந்தித்து கேட்டபோது, ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.
நித்யானந்தா இன்று மதுரை ஆதீன மடத்துக்கு வருவதாக இருந்தது. அவர் வந்தால் தன் செயல்பாடுகளை முழுமையாக தடுத்து விடுவார். அதற்குள் சுதாரிக்க வேண்டும் என அருணகிரிநாதர் முடிவு செய்தார். அதன் பிறகே நித்யானந்தாவை நீக்குவதாக அறிவித்தார். அவரது சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். நித்யானந்தா நீக்கப்பட்டதை ஆதீன மீட்பு குழுவும், இந்து அமைப்புகளும் வரவேற்றுள்ளன. ஏராளமான பக்தர்கள் ஆதீன மடத்துக்கு வரத் துவங்கினர். திருஞானசம்பந்தர் சிலை முன்பு வழிபாடு நடத்தினர். நேற்றிரவு முழுவதும் ஆதீன மடத்துக்குள் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்று காலை இந்து இளைஞர் பேரவை சார்பில் நித்யானந்தா நீக்கத்தை வரவேற்று தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆதீன மடத்தின் முன்பு நடந்தது. இந்நிலையில், மதுரை ஆதீனம் கொடுத்த மிரட்டல் புகாரின் பேரில் நித்யானந்தா கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன. இதனால், அவரது சீடர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். கைது நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து நேற்று நள்ளிரவில் திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் வக்கீல்களுடன் நித்யானந்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அருணகிரிநாதர் கொடுத்துள்ள புகாரின் பேரில் மதுரை விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த வருகின்றனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28628

TOO LITTLE. TOO LATE
ReplyDeleteHe is no Swami.He should be charged for pretending to be some one he is not. His rightful place is in Prison .
ReplyDeleteGr8 decision. But i still wonder why that maniac was made pontiff of a mutt with rich heirtage. May be goad opened the eyes of old mutt head now ?
ReplyDeleteThe very act of unilaterally appointing Nityananda as the head of the Adheenam was deplorable. Good the Adheenam realised the mistake and rectified it without wasting any time. It is dignifying to note that the Adheenam refrained from casting any aspersions on the ousted swami.
ReplyDeleteGood thing
ReplyDelete