நித்யானந்தா
கட்டுப்பாட்டில் உள்ள இளம் பெண்கள், இளைஞர்களை மீட்க அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீன மீட்பு குழு தலைவர் நெல்லை கண்ணன்
கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர்
கூறியதாவது:மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை
நீக்கியது எங்களுக்கு முழு வெற்றியை தரவில்லை. ஐகோர்ட் நடவடிக்கையை
தொடர்ந்தும், தனது பதவிக்கு ஆபத்து வந்து விட கூடாது என்ற பயத்திலும் மதுரை
இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை, மதுரை ஆதீனம் அருணகிரி
நாதர் நீக்கியுள்ளார்.இதனை தொடர்ந்து உடனடியாக தர்மபுரம் அல்லது
திருப்பனந்தாள் மடத்தில்இருந்து பயிற்சி பெற்ற கட்டளை தம்பிரானை மதுரை
ஆதீனத்தில் இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட வேண்டும்.பின்னர்
இப்பிரச்னைகளுக்கு காரணமாக மதுரை ஆதீனம் பதவியில் இருந்து அருணகிரி நாதர்
விலக வேண்டும். மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் இணைந்து தொடங்கிய
டிரஸ்ட்டை உடனடியாக கலைக்க வேண்டும்.நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக அரசு அவரை கைது செய்து சிறையில் அடைக்க
வேண்டும். நித்யானந்தா கட்டுப்பாட்டில் உள்ள இளம் பெண்கள், இளைஞர்களை
மீட்டு மருத்துவ பரிசோதனை நடத்தி போதை பழக்கங்களில் இருந்து அவர்களை
விடுவித்து பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்த கூடாது. இதுகுறித்து
கருத்து தெரிவித்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு நன்றி
தெரிவிக்கிறோம். தமிழக முதல்வர் முழுமையாக தலையிட்டு அனைத்து
கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
http://tamil.yahoo.com

இனி வரும் காலங்களில் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எவனும் ஆசிரமம் தொடங்ககூடாது என்று சட்டம் வர வேண்டும்
ReplyDeleteசாமியார் சந்தேகத்திற்கு அப்பார்ப்பட்டவராக இருக்க வேண்டும் - இல்லயேல் இந்த கதி தான்
ReplyDelete