நித்தியானந்தாவின் 'டபுள் காட்' கட்டில், பஞ்சு மெத்தையை மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பிய சிஷ்யர்கள்!
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2012, 11:09 [IST]
மதுரை: நித்தியானந்தாவை ஆதீன மடத்திலிருந்து அருணகிரிநாதர் விரட்டி விட்டதைத் தொடர்ந்து அவரது பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு 3 லாரிகளில் மடத்தை முழுமையாக காலி செய்துள்ளனர் அவர்களது ஆதரவாளர்கள்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவைப் போய் நியமித்தார் அருணகிரிநாதர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, போராட்டங்களும் வெடித்தன. ஆனால் அருணகிரிநாதர் மனம் மாறவில்லை. தொடர்ந்து நித்தியானந்தா புகழ் பாடி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு சட்ட ரீதியாக நெருக்குதல்கள் கிளம்பின. தமிழக அரசும் நெருக்க ஆரம்பித்தது. இதையடுத்து தன்னையும், தனது மடத்தையும் காத்துக் கொள்ள நித்தியானந்தாவைக் காவு கொடுத்து விட்டார் அருணகிரிநாதர். நித்தியானந்தாவை பதவியை விட்டுத் துரத்தினார். மேலும் அவரது பொருட்களை மடத்திலிருந்து தூக்கிச் சென்று விடும்படியும், தனது பொருட்களை கொடுத்து விடும்படியும் உத்தரவிட்டார். போலீஸிலும் நித்தியானந்தா தரப்பால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு புகாரையும் கொடுத்து வைத்தார்.
இதையடுத்து தலைமறைவான நித்தியானந்தா கர்நாடகாவுக்கு ஓடி விட்டார். இந்த நிலையில் ஆதீன மடத்தில் உள்ள தனது சொகுசு கட்டில், பஞ்சுமெத்தை உள்ளிட்ட பொருட்களை அள்ளிக் கொண்டு வருமாறு நித்தியானந்தா தனது சீடர்களைப் பணித்தார். அவர்களும் 3 லாரிகளைப் பிடித்துக் கொண்டு ஆதீன மடத்திற்கு புறப்பட்டு வந்தனர்.
அவர்களை முதலில் ஆதீனம் உள்ளே விடவில்லை. மேலும் விளக்குத்தூண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வர வைத்தார். அவர்களது முன்னிலையில் பொருட்களை எடுத்துச் செல்லும்படி நித்தியானந்தா ஆட்களைப் பணித்தார். அதன்படி போலீஸார் முன்னிலையில் பொருட்களை பேக்கப் செய்தனர் நித்தியானந்தா ஆட்கள். அனைத்துப் பொருட்களின் பட்டியலும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நித்தியானந்தா தரப்பினர் அள்ளிச் சென்ற பொருட்களில், அவர் பயன்படுத்தி படு ஆடம்பரமான பெரிய கட்டில் (இரண்டு பேருக்கும் மேலாக படுக்கக் கூடிய வகையில் பெரிய கட்டிலாம்), பஞ்சு மெத்தை உள்ளிட்டவையும் அடக்கமாம்.
பெண்களை மீட்கக் கோரி மனு
இதற்கிடையே, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள பெண்களை மீட்கக் கோரி மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்ற ஆணையம், நித்தியானந்தா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த புலவர் மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா பிடியில் இருக்கும் பெண்களை மீட்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் தள்ளிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து புலவர் மகாதேவன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி நித்யானந்தா மீது புகார் மனு சமர்ப்பித்தார்.
அதில், பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் பிடியில் ஏராளமான பெண்கள் உள்ளனர். அவர்களை வசியம் செய்து நித்தியானந்தா தனது ஆசிரமத்தில் வைத்துள்ளார். அங்கு தன்னை மறந்த நிலையில் உள்ள பெண்களை மீட்கக் கோரி நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். நித்தியானந்தாவின் பிடியில் உள்ள பெண்களை மீட்க வேண்டும்.
பெண்களிடம் தந்திரி செக்ஸ் என்ற ஒப்பந்த அடிப்படையில் உறவு வைத்து கொள்ளும் முறையை கையில் எடுத்து கொண்டு பெண்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பெண்களால் அங்கிருந்து மீள முடியவில்லை. பாலியல் உறவு வைத்து கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளனர். உண்மையை கூறியிருந்தால் ஒப்பந்தத்திற்கு எந்த பெண்களும் சம்மதித்து இருக்க மாட்டார்கள். பெண்களை ஏமாற்றி மோசடி ஒப்பந்ததை நித்தியானந்தா போட்டுள்ளார். பெண்களை அடிமைகளாக வைத்துள்ளார்.
இதற்கான ஆவணங்களை கர்நாடக போலீசார் வசம் உள்ளது. பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். உண்மைநிலையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மகளிர் ஆணைய தலைவர் சரஸ்வதி, எப்பொழுது நித்தியானந்தா நேரில் ஆஜராவார் என்று கேட்டு ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனால் கோர்ட்டுகளுக்கே கடுக்காய் கொடுக்கும் நித்தியானந்தா இந்த சம்மனை ஏற்று வருவாரா என்பது தெரியவில்லை.
http://tamil.oneindia.in/news/2012/10/26/tamilnadu-supporters-take-away-nithyanatha-properties-163688.html

No comments:
Post a Comment