திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள
நித்தி ஆசிரமத்தை அரசு ஏற்கிறது
02:12:35Tuesday2012-10-30
TN Govt (HR&CE) sends Takeover Notice to Nithyananda’s Tiruvannamalai Ashram. 15 days time given for filing reply
Nithyananda Dhyanapeetam ashram, nearly 5 years old, is situated adjoining the path used by public for the “Girivalam” (circumambulation around the holy hill). It is located between the highly used Girivala path and the mountain base. The 2.5 acre land claimed to have been donated by a local devotee is said to have encroached the adjoining forest land.
The ashram being close to the public path, housing many “Murthys” ( idols of various Gods and Godesses) and conducting poojas, it is visited by the pilgrims lacs of whom perform the holy circumambulation (pradakshina) around the mountain during Pournami (full moon days) days. Many such temples on the Girivala path, though started and run by private parties have been taken over by HR&CE as per the provisions in the HR&CE act.
திருவண்ணாமலை : நித்யானந்தாவுக்கு மகுடம் சூட்டியதற்காக மதுரை ஆதீனத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, அடுத்த கட்டமாக திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான 2.6 ஏக்கர் ஆசிரமத்தையும் கைப்பற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, பல ஊர்களில் ஆசிரமம் அமைத்துள்ளார். கர்நாடக மாநிலம் பிடதியில் தலைமை நிலையம் அமைத்து அங்கிருந்தபடி எல்லா ஆசிரமங்களையும் நிர்வகித்து வந்தார்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமம் ஆரம்பித்தார். கிரிவல பாதைக்கும் மலைக்கும் இடையே அமைந்துள்ள ஆசிரமத்துக்கான இடத்தை உள்ளூர் பக்தர் ஒருவர் தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இடத்தை ஒட்டியுள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தையும் நித்யானந்தா ஆக்கிரமித்துள்ளதாக ஏற்கனவே புகார் உள்ளது.
நடிகையுடன் நித்யானந்தா இடம் பெற்ற அந்தரங்க காட்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகி ஆன்மிக உலகம் அவருக்கு எதிராக திரும்பிய சூழ்நிலையில் நித்யானந்தா திடீரென பழம்பெரும் மதுரை ஆதீனத்தின் உதவியை நாடினார். மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரி வரப்போகும் ஆபத்தை உணராமல் நித்தியை தனது வாரிசாக நியமனம் செய்தார். இதனால் மதுரை ஆதீனத்துக்கு எதிராக இந்துக்கள் கொதித்தெழுந்தனர். பல வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து விவகாரத்தில் தலையிட்ட தமிழக அரசு, Ôநித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது செல்லாது. அவர் எந்த மடத்துக்கும் தலைமை வகிக்க தகுதியற்றவர்Õ என அறிவித்தது. அதே சூட்டில், மதுரை ஆதீனத்தையும் அதன் சொத்துக்களையும் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இதனால் நித்யானந்தாவை உடனடியாக டிஸ்மிஸ் செய்த அருணகிரிநாதர், நித்தியால் தன் உயிருக்கு ஆபத்து என மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதும், திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்து நித்யானந்தா தன் முக்கிய சீடர்களுடன் தப்பிவிட்டார். ஊழியர்கள் மட்டுமே இப்போது அங்கு தங்கியிருக்கின்றனர்.
நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலைய துறை இறங்கியுள்ளது. அதற்காக உதவி ஆணையர் எம்.ஜோதி கையெழுத்திட்ட நோட்டீஸ் நித்யானந்தாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்லும் பாதையை ஒட்டி பொது இடத்தில் நித்தி ஆசிரமமும் அதனுள் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. ஏராளமான சாமி சிலைகளை வைத்து தினசரி வழிபாடு நடக்கிறது. பொதுமக்களும் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் வழிபடும் கோயில்களை தனி நபர்கள் சொந்த செலவில் உருவாக்கி நிர்வகித்தாலும், அறநிலையத்துறை அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டத்தில் இடமுள்ளது. அந்த அடிப்படையில் நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜோதி தெரிவித்தார்.
கிரிவல பாதையில் தனி நபர்கள் மற்றும் டிரஸ்ட்டுகள் நிர்வகித்து வந்த காமாட்சியம்மன் கோயில், காளியம்மன் கோயில், தட்சிணாமூர்த்தி கோயில், பழனியாண்டவர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், மகா சக்தி மாரியம்மன் கோயில், ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களை, ஏற்கனவே அறநிலையத்துறை கையகப்படுத்தி தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. நித்யானந்தா ஆசிரமம் கையகப்படுத்தப்பட்ட பின்னரும் பூஜைகள் தொடர்ந்து நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நோட்டீசுக்கு பதில் அளிக்க 15 நாள் அவகாசம் அளிக்க்கப்பட்டுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=29354
TN Govt (HR&CE) sends Takeover Notice to Nithyananda’s Tiruvannamalai Ashram. 15 days time given for filing reply
ReplyDeleteNithyananda Dhyanapeetam ashram, nearly 5 years old, is situated adjoining the path used by public for the “Girivalam” (circumambulation around the holy hill). It is located between the highly used Girivala path and the mountain base. The 2.5 acre land claimed to have been donated by a local devotee is said to have encroached the adjoining forest land.
The ashram being close to the public path, housing many “Murthys” ( idols of various Gods and Godesses) and conducting poojas, it is visited by the pilgrims lacs of whom perform the holy circumambulation (pradakshina) around the mountain during Pournami (full moon days) days. Many such temples on the Girivala path, though started and run by private parties have been taken over by HR&CE as per the provisions in the HR&CE act.