Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Monday, March 18, 2013

Kannada groups protest against Nithyananda, "24 மணி நேரத்திற்குள் நித்யானந்தாவை வெளியேற்றுங்க!' கர்நாடக அரசுக்கு கன்னட அமைப்புகள் கெடு

மார்ச் 18,2013,02:28 IST


பெங்களூரு: "கர்நாடகாவிலிருந்து நித்யானந்தாவை, 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும்' என, வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் கெடு விதித்துள்ளன.கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்ற, நித்யானந்தாவுக்கு, எதிரான போராட்டம் வலுத்துள்ளது. தினமும், ஏதாவது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி வரும் நித்யானந்தா, கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்களின் மீது, கண் வைத்துள்ளதால், கன்னட அமைப்பினர் உட்பட, பல்வேறு மடாதிபதிகள் கடும் கோபமடைந்து உள்ளனர்."நித்யானந்தா, கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்' என, கன்னட அமைப்புகளான, நவ நிர்மாண கன்னடம், கஸ்தூரி கன்னடம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன.இந்நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர். "அவரை கர்நாடகாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்' என, மாநில அரசை வலியுறுத்தினர். பின், நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அதன் முன், இறப்பின் போது செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.போராட்டக்காரர்கள் கூறியதாவது:நித்யானந்தா, ஆன்மிகப் போர்வையில், கலாசார சீர்கேடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மிக விஷயங்களில் அக்கறை காட்டும் பெண்களை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி வருகிறார்.பிடதி தியான பீடத்தில், எந்த விதமான ஆன்மிக நிகழ்வும் நடப்பதில்லை. இந்த தியான பீடம், ஐந்து நட்சத்திர ஓட்டல் போல செயல்படுகிறது. நித்யானந்தாவை, கர்நாடகாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என, கன்னட அமைப்புகள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனாலும், எந்தப் பயனுமில்லை.கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா கண் வைத்துள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க, அரசோ, மாவட்ட நிர்வாகமோ முன்வரவில்லை. தமிழகத்தில், மதுரை ஆதீனத்தை கைப்பற்ற முயன்று தோற்றவர். அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால், கர்நாடகாவில் மடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இனிமேல், எங்களின் போராட்டம் ஆவேசமாக இருக்கும்.கர்நாடகாவிலிருந்து அவரை வெளியேற்ற, 24 மணி நேரம் அரசுக்கு "கெடு' விதிக்கிறோம். அதற்குள் நித்யானந்தாவை வெளியேற்றாவிட்டால், ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியது நேரிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த நித்யானந்தா போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இப்போராட்டங்களால் பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=669481&Print=1



நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு !

பெங்களூரூ : கர்நாடகாவில் நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு செய்து வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்றதாக நித்யானந்தா மீது புகார் எழுந்தது. இதனால் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டம் கர்நாடாவில் வலுத்து வருகின்றது.
இந்த நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.
பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர்.
பின்பு, நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அந்த படத்தின் முன்பு, இறந்தவர்களுக்கு செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.
இதனால், பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகளின் இந்த போராட்டத்திற்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
http://www.arasiyaltoday.com/archives/13183

Pro-Kannada activists protest aginst Nithyananda


Huge Protest against Nithyananda in Karnataka- by Lingayats and Kannada

Tuesday, March 12, 2013

Pro-Kannada activists protest Nithyananda plan to take over mutt






Published: Sunday, Mar 10, 2013, 15:43 IST 
Place: Ramanagara (Karnataka) | Agency: PTI




Pro-Kannada activists on Sunday staged a protest in front of controversial self-styled godman Nithyananda's ashram, against his proposed move to take over a mutt in Bagalkot district, police said.
They said 30 activists of Karnataka Navanirmana Vedike protested in front of the ashram, burnt tyres and shouted slogans against Nithyananda and his proposed plan to take over the mutt. All of them were taken into preventive custody.
The activists also demanded that Nithyananda, who is facing various criminal cases, including rape, leave Karnataka. Nithyananda is facing a CID probe into charges of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of the self styled godman in a compromising position with an actress.
The godman is already embroiled in some criminal cases, including rape and physical assault. His ashram was raided in June 2011 by police in the wake of a US-based woman alleging she was sexually abused by him over a five year period.
On October 19 last year, he was sacked by the senior pontiff as his successor of a 1,500-year old Saivaite mutt in Madurai, an appointment which had attracted widespread condemnation from various quarters including the Tamil Nadu Government.
http://www.dnaindia.com/india/report_pro-kannada-activists-protest-nithyananda-plan-to-take-over-mutt_1809502


Other sources:

http://zeenews.india.com/news/karnataka/pro-kannada-activists-protest-nithyanandas-plan-to-take-over-mutt_834319.html
http://english.samaylive.com/regional-news/others-news/676525629/pro-kannada-activists-protest-nithyananda-s-plan-to-take-over-mutt.html

http://news.webindia123.com/news/Articles/India/20130310/2170183.html



Kannada groups protest against Nithyananda


நித்யானந்தா ஆசிரமத்தை கன்னட அமைப்பினர் முற்றுகை

பெங்களூரு: கர்நாடகாவில் நித்யானந்தா ஆசிரமத்தினை கன்ன‌ட அமைப்பினர்முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, பெங்களுரூ ராம்நகரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.இங்கு பகல்கோட் மாவட்டத்தில் உள்ள மடங்களை கையகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு கன்னடஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கன்னட நவநிர்மான் வேதிகே உள்ளிட்ட அமைப்பினர் நித்யானந்தா ஆசிரமத்தினை முற்றுகையிட்டுஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரம வளாகத்தில் லாரி டயர்களை போட்டு தீ வ‌ைத்த கொளுத்தியும், பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நி்த்யானந்தா ஆசிரமத்தினை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.அங்கு வந்த போலீசார் சிலரை கைது செய்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=663992

Sunday, March 10, 2013

Protests in Bidadi at Shivaratri




Pro Kannada activists protest Nithyananda's plan to take over mutt


PTI | 02:03 PM,Mar 10,2013
Ramanagara (Kar) Mar 10 (PTI) 
Pro-Kannada activists today staged a protest in front of controversial self-styled godman Nithyananda's ashram, against his proposed move to take over a mutt in Bagalkot district, police said. They said 30 activists of Karnataka Navanirmana Vedike protested in front of the ashram, burnt tyres and shouted slogans against Nithyananda and his proposed plan to take over the mutt. All of them were taken into preventive custody. 

The activists also demanded that Nithyananda, who is facing various criminal cases, including rape, leave Karnataka. 

Nithyananda is facing a CID probe into charges of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of the self styled godman in a compromising position with an actress. The godman is already embroiled in some criminal cases, including rape and physical assault. His ashram was raided in June 2012 by police in the wake of a US-based woman alleging she was sexually abused by him over a five year period. 

On October 19 last year, he was sacked by the senior pontiff as his successor of a 1,500-year old Saivaite mutt in Madurai, an appointment which had attracted widespread condemnation from various quarters including the Tamil Nadu Government. PTI BH APR DV MVV

http://ibnlive.in.com/generalnewsfeed/news/pro-kannada-activists-protest-nnanda-plan-to-take-over-mutt/1212696.html

Nithyananda's sudenly discovers he is Lingayat: Leaders condemn











Friday, March 8, 2013

Nithyananda's game exposed


Nithyananda has been playing hide and seek with the Lingayat leaders who have demanded an explanation of his statements. Press notes have been sent, but Nithyananda refuses to meet the laeders in person and clarify. 

 Nithyananda also demonizes those ex-devotees and critics who speak out against him, making effigy of victims and critics, making his devotees burn it... while claiming to be destroying negativity as an avatar, his behavior hardly fits a sanyasi or a paramahamsa who should be helping his devotees become more peaceful, not making them violent or full of vengeance!! 

 Many more such games and lies of Nithyananda and his followers come to light through Suvarna News, TV9  and other channels.






Watch minutes 6:00 - 8:00 of the news for an overview



Setback for Nithyananda: HC restores show-cause notice

TNN | Mar 8, 2013, 02.28 AM IST

CHENNAI: Spelling trouble for godman Nithyananda, a division bench of the Madras high court has stayed a single judge order quashing the state government's show-cause notice to take over his ashram at Tiruvannamalai

A bench comprising Justice Elipe Dharma Rao and Justice M Venugopal stayed the single judge order dated January 30, on a writ appeal filed by the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department, and issued notices on Thursday. 

On October 11, 2012, the department issued a show-cause notice asking the administrators of Nithyananda Dhyanapeetam why the ashram should not be taken over in view of violation of trust conditions and other issues such as collection of donations from devotees. 

Assailing the notice, the ashram approached the high court saying it was not a Hindu religious institution, as it taught yoga and meditation, besides having Buddha idols inside the premises. 

On January 30, Justice Chandru allowed the petition of the dhyanapeetam manager Nithya Prananada, saying, "The fact that some Hindu idols were found in the trust would not make it a Hindu institution, since for its consecration, no agamas were followed. The mere presence of the flagpost does not make it a Hindu religious institution." 

In its appeal, the department said the single judge should not have entertained the petition as it was only a show-cause notice calling for explanation from the ashram authorities. It said, "Taking advantage of the order, the ashram may continue to perform activities of religious nature and conduct rituals". 

The department has to remain a mute spectator to the illegalities at the ashram, it said, adding that following the footsteps of Nithyananda Dhyanapeetam, there is every chance that other similar institutions throughout the state will flout rules and the department will not be able to take action against them, the appeal said. 

http://timesofindia.indiatimes.com/city/chennai/Setback-for-Nithyananda-HC-restores-show-cause-notice/articleshow/18856388.cms

Protests against Swami Nithyananda go on in Hubli

Published: Thursday, Mar 7, 2013, 9:08 IST | Updated: Thursday, Mar 7, 2013, 9:09 IST 
By DNA Correspondent | Place: Hubli | Agency: DNA
Tension gripped towns including Mahalingpur, Mudhol, Jamkhandi and Badami in Bagalkot district on Wednesday in the wake of the alleged takeover of the Mahalingeshwara mutt by the controversial Swami Nithyananda of Bidadi. Thousands of devotees from all over Karnataka and Maharashtra rushed to the mutt and condemned the take over by Nithyananda.
Allaying the fears of his devotees, Shivayogi Rajendra Swami assured that he would not hand over the mutt to Nithyananda. However, this assurance failed to convince devotees, who continued to protest. Devotees like Prabhu Hatti, Yellappa Bhavikatti and Mallanagouda Budihal warned the swami not to do any further transactions without their 
consent.
Meanwhile, a group of protesters foiled an escape attempt of the swami by stopping his car as he tried to leave the mutt premises. A board was installed at the entrance of the mutt warning people of a fine of `25,000 if they attempted to meet the swami. Devotees of the mutt are worried that the followers of Nithyananda may try and sneak into the mutt to meet the swami. Further, reports claim that a few followers of Nithyananda, who had come to Mahalingpur to meet the swami, had returned, scared by the protests.
Plaint against Nithya
Bidadi police have received a complaint against Nithyananda, accusing him of trying to ‘buy’ the Mahalingeshwara mutt.
The police are yet to take cognizance of the complaint, filed by a devotee of the Mahalingeshwara Mutt, Ramanagaram DySP Ramalingappa said.
@DNA

http://www.dnaindia.com/bangalore/report_protests-against-swami-nithyananda-go-on-in-hubli_1808343

Thursday, March 7, 2013

Nithyananda to be arrested, NEW FIR filed

நித்தி மீது எப்.ஐ.ஆர். - விரைவில் கைதாகிறார்


நித்தியானந்தா மீது கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட பிடதி போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.  இதையடுத்து அவர் விரைவில் கைதாகவிருக்கிறார்.
நித்தி மீது பிடதி காவல் நிலையத்தில் பீமா சங்கர் பாட்டீல் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், ’’தமிழ்நாட்டில் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக ஆவதற்கு முயற்சி செய்தது மாதிரி  கர்நாடகாவில் இருக்கும் ஒரு மடத்தில் இளைய ஆதீனமாக ஆவதற்கு முயற்சி செய்கிறார் நித்தியானந்தா.   அவர்,  அப்படி இளைய  ஆதீனமாக மாறிவிட்டால், மக்கள் ஒரு போது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும்.  பொதுச்சொத்துகளுக்கு பங்கம் நேரிடும். ஆகவே, அவர் இளைய ஆதீனமாக மாறுவதை தடுத்து கைது செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த புகார் மனுவை அடுத்து நித்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் விரை வில் கைதாகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=93557

Wednesday, March 6, 2013

Bangalore: Godman Nithyananda in controversy, yet again

March 6: It seems that controversies and self-styled godman Nithyananda share a good rapport with each other. He has landed in an another controversy, yet again. 

This time the swami made headlines with his statement where he claimed that he would become the in-charge of Mahalingeshwara Mutt in Jamakhandi, Bagalkot in Karnataka. However, sources from the century-old mutt refused to accept such reports calling it a mere "rumour".Shivayogi Rajendra Swamiji, the head of the mutt which was established in the 11th century, slammed Nithyananda for spreading such "rumours". 

The controversial swami Nithyananda earlier was sacked as the successor of the mutt head of Madurai Aadheenam, a 1500-year-old Saivite mutt. His appointment as junior pontiff of the mutt invited criticism from across the country including Tamil Nadu government. Putting an end to all controversies, Madurai Aadheenam chief Sri Arunagirinathar, the 292nd head of mutt, on Oct 19 announced Nithyananda's removal from the post. Arunagirinathar, who had faced tremendous criticism over his decision of appointing the self-styled controversial godman as his successor, seems to have learnt a lesson from deeds. 

Tamil Nadu Hindu Religious and Charitable Endowment department on Thursday moved a court seeking removal of Arunagirinathar himself for violating the tradition of the mutt. This move compelled Madurai Aadheenam chief to sack Nithyananda. However, while informing about his latest decision, Arunagirinathar was quoted as saying, "You know better. I have sought police help because I feel my life is threatened due to the stay of the disciples of Nithyananda (in the mutt here)." 

The head of the Madurai mutt was opposed as Nithyanada has been embroiled with controversies including rape and abduction charges. The self-styled godman hogged limelight worldwide for the first time when a video allegedly featuring him along with a South Indian actress in a compromising position went viral on the internet and TV. Soon several rape charges and forgery cases were slapped against him. OneIndia News

Read more at: http://news.oneindia.in/2013/03/06/bangalore-fresh-controversy-haunting-godman-nithyananda-1164953.html

Veera Shaiva Lingayat Leaders condemn Nithyananda's appointment: Big Debate
























Nithyananda eyes Karnataka Mutt: Strong Opposition and protests

கர்நாடகா மடாதிபதியாக நித்யானந்தாவை நியமிக்க எதிர்ப்பு


 மார்ச் 05,2013,23:20 IST

பெங்களூரு: கர்நாடகாவில், மகாலிங்கேஸ்வரர் மகா பீடத்துக்கு, நித்யானந்தாவை மடாதிபதியாக நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. கடைகளை அடைத்து, மக்கள் போராட்டம் நடத்தியதால், மடாதிபதி ராஜேந்திர சுவாமிகள் மடத்திலிருந்து வெளியேறினார்.
மகாலிங்கேஸ்வரர் மகா பீடம் என்ற சித்த சமஸ்தான மடம், 700 ஆண்டு பழமை வாய்ந்தது. 100 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை உடைய, இந்த மகா பீடத்தின், மடாதிபதியாக, தற்போது, ராஜேந்திர சுவாமிகள் உள்ளார். இவர், சமீபத்தில், பெங்களூருவில் உள்ள, நடிகை ரஞ்சிதா புகழ், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு நித்யானந்தாவிற்கு சால்வை அணிவித்து, ஆசிவழங்கி கவுரவித்தார். அப்போது, மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமனம் செய்வது தொடர்பாக அவர், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வரும், ஆகஸ்ட்டில், மகாலிங்கபுரத்தில் நடக்கவுள்ள, மகாலிங்கேஸ்வரர் விழாவின் போது, புதிய மடாதிபதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என, முடிவு செய்ததாகவும், செய்திகள் வெளியாகின. இதனால், மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜேந்திர சுவாமிகளின் முடிவுக்கு எதிராக, மடத்தின் பக்தர்களும், மகாலிங்கபுரம் பொதுமக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மகாலிங்கபுரத்தில், கடைகளை அடைத்து போராட்டமும் நடத்தினர். உடன், மடத்திலிருந்து வெளியேறிய ராஜேந்திர சுவாமிகள், முக்கிய பிரமுகர்களுடன், ரகசிய இடத்தில், ஆலோசனை நடத்தியுள்ளார். பின், அனைவரின், நெருக்கடிக்கு பணிந்து, நித்யானந்தாவை மடாதிபதியாக்கும் முடிவை, அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ராஜேந்திர சுவாமிகளிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது, "பிரச்னை முடிந்து விட்டது. இது தொடர்பான விரிவான விபரங்களை, ஊர் முக்கியஸ்தர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என்று மட்டும் கூறினார். அதேநேரத்தில், நித்யானந்தா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "நான், மகாலிங்கேஸ்வரர் மடாதிபதியாக ஆர்வம் காட்டவில்லை. மடத்துக்கு வரும்படி, ஒரு முறை ராஜேந்திர சுவாமிகள் அழைப்பு விடுத்தார்; அங்கு நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றேன். மடாதிபதியாகும் எண்ணம் எனக்கில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.
லிங்காயத்து மடங்கள் மீது நித்திக்கு, "கண்':

கர்நாடகாவின் லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா, "கண்' வைத்துள்ளதால், லிங்காயத்து சமூகத்தினரும், கன்னட அமைப்புகளும் கொந்தளித்துள்ளனர். பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தாலுகாக்களில், லிங்காயத்து மடங்கள் இயங்கி வருகின்றன. இந்த மடங்களுக்கு, மாநிலத்தை ஆளும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு தேவையான நிதியுதவிகளை செய்து வருகிறது. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நித்யானந்தாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், கர்நாடகாவில் பலம் வாய்ந்த, லிங்காயத்து மடங்கள் மீது, "கண்' வைத்தார். இதில், பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மீது, ஆர்வம் காட்டினார். இதையறிந்த மற்ற லிங்காயத்து மடாதிபதிகள் அதிர்ச்சிஅடைந்தனர். நித்யானந்தாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். உதாரணமாக, சித்ரதுர்கா மடாதிபதி முருக ராஜேந்திர சுவாமிகள், தொலைபேசி மூலம், நித்யானந்தாவை தொடர்பு கொண்டு, "மதுரை ஆதீனம் போன்று நினைத்து, மகாலிங்கேஸ்வரர் மடத்துக்குள் நுழையக் கூடாது. அப்படி ஏதாவது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படும்' என, எச்சரித்துள்ளார்.



http://www.dinamalar.com/news_detail.asp?id=661012



கர்நாடக லிங்காயத்து மடத்திற்கு நித்தியானந்தா குறி? - கடும் எதிர்ப்பு, போராட்டம்!

பெங்களூர்: சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீண்டும் ஒரு மட சர்ச்சையில் சிக்கியுள்ளார். மதுரை ஆதீனத்திற்குள் இளைய ஆதீனமாக புகுந்து பின்னர் வெளியேற்றப்பட்ட அவர் தற்போது கர்நாடக மடம் ஒன்றைக் கைப்பற்றக் கிளம்பியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து அவருக்கு எதிராக லிங்காயத்து சமூக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தனக்கென ஒரு தனி மடம் அமைத்து டிவிகளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, நடிகையுடன் அந்தரங்கமாக இருந்ததாக வீடியோவில் சிக்கி பெரும் சர்ச்சைக்குள்ளானார். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் பாய்ந்தன. நித்தியானந்தா கர்நாடகாவிலிருந்து தப்பி ஓடினார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் பெயிலில் வெளியே வந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். இடையில் மதுரை ஆதீனத்தின் நட்பைப் பெற்று மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக அறிவிக்கச் செய்து அனைவரையும் அதிர வைத்தார். ஆனால் இந்தப் பதவி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அரசுத் தரப்பிலிருந்து நெருக்கடி வந்ததும், நித்தியானந்தாவை பொறுப்பிலிருந்து நீக்கி விட்டார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். இதையடுத்து தற்போது அமைதி காத்து வரும் நித்தியானந்தா, கர்நாடகத்தில் உள்ள ஒரு லிங்காயத்து சமூகத்தின் மடத்திற்கு மடாதிபதியாக முயற்சிப்பதாக பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், ஜமகண்டி என்ற இடத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரா மடம். 100 ஆண்டு பழமையான மடம் இது. இந்த மடத்தின் மடாதிபதி பொறுப்புக்கு வர முயற்சிக்கிறார் நித்தியானந்தா என்பதுதான் பரபரப்புச் செய்தியின் சுருக்கம். இந்த மடத்தின் மடாதிபதியாக தற்போது சிவயோகி ராஜேந்திர சுவாமிஜி என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் பிடதி ஆசிரமத்திற்குப் போனதாகவும், அங்கு நித்தியானந்தாவுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது மகாலிங்கேஸ்வரா மடத்தின் தலைவராக நித்தியானந்தாவை நியமிக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாகல்கோட்டில் போராட்டங்கள் வெடித்தன. மடம் உள்ள பகுதியில் கடையடைப்பு நடத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களில் குதித்தனர். நித்தியானந்தாவை மடத்துக்குள்ளும், ஊருக்குள்ளும் விட மாட்டோம் என்று மிரட்டினர். அதேபோல லிங்காயாத்து மடாதிபதிகள் பலரும் ராஜேந்திர சுவாமிஜியை போனில் தொடர்பு கொண்டு கடுமையாக கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திர சுவாமிஜி கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இது வெறும் வதந்தியே. அப்படிப்பட்ட எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. நித்தியானந்தாதான் இதுபோன்ற வதந்தியைப் பரப்புகிறார் என்றார். அதேபோல நித்தியானந்தாவும் இந்த செய்தியை மறுத்துள்ளார். உண்மை என்னவோ தெரியவில்லை..!

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/06/india-bangalore-nithyananda-controversy-yet-again-171051.html

Saturday, March 2, 2013

Nithyananda is banned to enter Madurai adeenam mutt


Interim order passed by the Madurai district court says that Nithyananda is banned from entering the Madurai Adeenam Mutt.
 Madurai Adeenam Arunagirinathar has filed a petition in the Discrit court-I emphasizing the ban on entering the Madurai adeena mutt by Nithyananda. On hearing this petition, Judge Guruvaiya passed an interim order saying that Nithyananda and his subordinates are banned from entering the Madurai adeena mutt and not to involve in any tasks related with the mutt.
 The judge also ordered, Nithyananda and his subordinates that they are not entitled to sell any property which is in charge of the adeenam mutt
http://sathiyam.tv/english/general/nithyananda-is-banned-to-enter-madurai-adeenam-mutt

Nithyananda restrained from entering Madurai Adheenam

Principal Sub-Judge K. Guruviah, on Tuesday, passed interim orders restraining Nithyananda from entering the mutt of Madurai Adheenam and interfering in the functioning of the mutt.

The Sub-Judge passed the order on hearing the petition filed by Adheenam Arunagirinatha Desikar to restrain Nithyananda and his followers from entering the 1500-year-old Saivaite mutt and to direct the sub-registrar of Madurai South to cancel the registration of the trust he formed in collaboration with Nithyananda.

In yet another interim order, the Sub-Judge also instructed the Adheenam not to sell or transfer the properties of the mutt until final orders are pronounced in a case filed by the Department of Hindu Religious and Charitable Endowments (HR and CE) seeking the removal of the incumbent Madurai Adheenam.
The HR and CE’s case has been posted for further hearing on March 22.

http://www.thehindu.com/todays-paper/tp-national/nithyananda-restrained-from-entering-madurai-adheenam/article4457180.ece


 மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய இடைக்காலத் தடை: மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.28- 
 
தமிழக இந்து அறிநிலையத்துறை ஆணையர் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும் வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 
இந்த முக்கிய மனு நிலுவையில் இருக்கும் வரை, மதுரை ஆதீனம் அறக்கட்டளை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அறக்கட்டளை மூலமோ அல்லது தனிப்பட்ட வகையிலோ ஆதீனத்துக்கு சொந்தமான சொத்துக்களை மதுரை ஆதீனமோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபர்களோ விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதற்கிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது.
 
அதன் பதிவினை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவோ அவரது தரப்பினரோ நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். அத்துடன் மடத்தின் பணிகளில் அவர்கள் குறுக்கீடு செய்யாமல் இருக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 
இந்த மனுக்கள் நீதிபதி குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில் 2 இடைக்காலத் தடை உத்தரவுகளை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதன்படி இந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை மதுரை ஆதீனத்தின் பொறுப்பில் உள்ள சொத்துக்களை அவரோ, அவரால் நியமிக்கப்பட்டவர்களோ வேறு யாருக்கும் விற்பனை செய்வது, குத்தகைக்கு வழங்குவது உள்பட எந்தவித வில்லங்கமும் செய்யக்கூடாது.
 
அதேபோல நித்தியானந்தாவும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைவதற்கும், ஆதீன பணிகளில் ஈடுபடுவதற்கும் இடைக்காலத்தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்து அறநிலையத்துறை மற்றும் ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


http://www.maalaimalar.com/2013/02/28090954/madurai-adheenam-madam-nithiya.html


Friday, March 1, 2013

"நித்தி' ஆஸ்ரமத்தில் 1,008 லிங்கம் அகற்றம்

மார்ச் 01,2013,06:04 IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டிருந்த, 1,008 லிங்கங்கள் அகற்றப்பட்டது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அன்னதானம், மீண்டும் துவங்கப்பட்டது.
திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 1,008 லிங்கம் அமைக்கப்பட்டு, தினந்தோறும் சிறப்பு பூஜை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை நடந்தது.


இதை, அறநிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டது. தகவல் அறிந்த ஆஸ்ரம நிர்வாகம், உடனடியாக அங்கிருந்த, லிங்கங்கள் முழுவதும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டன. அங்கிருந்த சிலைகளை அகற்றி, அங்குள்ள ராட்சத கன்டெய்னரில் அடுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.


போலீஸார், "வழக்கு நடப்பதால், அங்கிருந்து லிங்கங்களை அகற்றக்கூடாது' எனக்கூறி, தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தற்போது, நித்தியானந்தா ஆஸ்ரமத்தை, அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்த, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.


அதையடுத்து, லிங்கம் முழுவதும், பூஜை செய்யப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட லிங்கங்கள், ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளதா, அல்லது, வெளியில் எடுத்து செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.


http://www.dinamalar.com/news_detail.asp?id=657932