நித்தி மீது எப்.ஐ.ஆர். - விரைவில் கைதாகிறார்
நித்தியானந்தா மீது கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட பிடதி போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் கைதாகவிருக்கிறார்.
நித்தி மீது பிடதி காவல் நிலையத்தில் பீமா சங்கர் பாட்டீல் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், ’’தமிழ்நாட்டில் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக ஆவதற்கு முயற்சி செய்தது மாதிரி கர்நாடகாவில் இருக்கும் ஒரு மடத்தில் இளைய ஆதீனமாக ஆவதற்கு முயற்சி செய்கிறார் நித்தியானந்தா. அவர், அப்படி இளைய ஆதீனமாக மாறிவிட்டால், மக்கள் ஒரு போது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும். பொதுச்சொத்துகளுக்கு பங்கம் நேரிடும். ஆகவே, அவர் இளைய ஆதீனமாக மாறுவதை தடுத்து கைது செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த புகார் மனுவை அடுத்து நித்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விரை வில் கைதாகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=93557
No comments:
Post a Comment