கர்நாடகா மடாதிபதியாக நித்யானந்தாவை நியமிக்க எதிர்ப்பு
கர்நாடகாவின் லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா, "கண்' வைத்துள்ளதால், லிங்காயத்து சமூகத்தினரும், கன்னட அமைப்புகளும் கொந்தளித்துள்ளனர். பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தாலுகாக்களில், லிங்காயத்து மடங்கள் இயங்கி வருகின்றன. இந்த மடங்களுக்கு, மாநிலத்தை ஆளும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு தேவையான நிதியுதவிகளை செய்து வருகிறது. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நித்யானந்தாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், கர்நாடகாவில் பலம் வாய்ந்த, லிங்காயத்து மடங்கள் மீது, "கண்' வைத்தார். இதில், பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மீது, ஆர்வம் காட்டினார். இதையறிந்த மற்ற லிங்காயத்து மடாதிபதிகள் அதிர்ச்சிஅடைந்தனர். நித்யானந்தாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். உதாரணமாக, சித்ரதுர்கா மடாதிபதி முருக ராஜேந்திர சுவாமிகள், தொலைபேசி மூலம், நித்யானந்தாவை தொடர்பு கொண்டு, "மதுரை ஆதீனம் போன்று நினைத்து, மகாலிங்கேஸ்வரர் மடத்துக்குள் நுழையக் கூடாது. அப்படி ஏதாவது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படும்' என, எச்சரித்துள்ளார்.
மார்ச் 05,2013,23:20 IST
பெங்களூரு: கர்நாடகாவில், மகாலிங்கேஸ்வரர் மகா பீடத்துக்கு, நித்யானந்தாவை மடாதிபதியாக நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. கடைகளை அடைத்து, மக்கள் போராட்டம் நடத்தியதால், மடாதிபதி ராஜேந்திர சுவாமிகள் மடத்திலிருந்து வெளியேறினார்.
மகாலிங்கேஸ்வரர் மகா பீடம் என்ற சித்த சமஸ்தான மடம், 700 ஆண்டு பழமை வாய்ந்தது. 100 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை உடைய, இந்த மகா பீடத்தின், மடாதிபதியாக, தற்போது, ராஜேந்திர சுவாமிகள் உள்ளார். இவர், சமீபத்தில், பெங்களூருவில் உள்ள, நடிகை ரஞ்சிதா புகழ், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு நித்யானந்தாவிற்கு சால்வை அணிவித்து, ஆசிவழங்கி கவுரவித்தார். அப்போது, மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமனம் செய்வது தொடர்பாக அவர், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வரும், ஆகஸ்ட்டில், மகாலிங்கபுரத்தில் நடக்கவுள்ள, மகாலிங்கேஸ்வரர் விழாவின் போது, புதிய மடாதிபதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என, முடிவு செய்ததாகவும், செய்திகள் வெளியாகின. இதனால், மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜேந்திர சுவாமிகளின் முடிவுக்கு எதிராக, மடத்தின் பக்தர்களும், மகாலிங்கபுரம் பொதுமக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மகாலிங்கபுரத்தில், கடைகளை அடைத்து போராட்டமும் நடத்தினர். உடன், மடத்திலிருந்து வெளியேறிய ராஜேந்திர சுவாமிகள், முக்கிய பிரமுகர்களுடன், ரகசிய இடத்தில், ஆலோசனை நடத்தியுள்ளார். பின், அனைவரின், நெருக்கடிக்கு பணிந்து, நித்யானந்தாவை மடாதிபதியாக்கும் முடிவை, அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ராஜேந்திர சுவாமிகளிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது, "பிரச்னை முடிந்து விட்டது. இது தொடர்பான விரிவான விபரங்களை, ஊர் முக்கியஸ்தர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என்று மட்டும் கூறினார். அதேநேரத்தில், நித்யானந்தா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "நான், மகாலிங்கேஸ்வரர் மடாதிபதியாக ஆர்வம் காட்டவில்லை. மடத்துக்கு வரும்படி, ஒரு முறை ராஜேந்திர சுவாமிகள் அழைப்பு விடுத்தார்; அங்கு நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றேன். மடாதிபதியாகும் எண்ணம் எனக்கில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.

லிங்காயத்து மடங்கள் மீது நித்திக்கு, "கண்':
கர்நாடகாவின் லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா, "கண்' வைத்துள்ளதால், லிங்காயத்து சமூகத்தினரும், கன்னட அமைப்புகளும் கொந்தளித்துள்ளனர். பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தாலுகாக்களில், லிங்காயத்து மடங்கள் இயங்கி வருகின்றன. இந்த மடங்களுக்கு, மாநிலத்தை ஆளும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு தேவையான நிதியுதவிகளை செய்து வருகிறது. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நித்யானந்தாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், கர்நாடகாவில் பலம் வாய்ந்த, லிங்காயத்து மடங்கள் மீது, "கண்' வைத்தார். இதில், பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மீது, ஆர்வம் காட்டினார். இதையறிந்த மற்ற லிங்காயத்து மடாதிபதிகள் அதிர்ச்சிஅடைந்தனர். நித்யானந்தாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். உதாரணமாக, சித்ரதுர்கா மடாதிபதி முருக ராஜேந்திர சுவாமிகள், தொலைபேசி மூலம், நித்யானந்தாவை தொடர்பு கொண்டு, "மதுரை ஆதீனம் போன்று நினைத்து, மகாலிங்கேஸ்வரர் மடத்துக்குள் நுழையக் கூடாது. அப்படி ஏதாவது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படும்' என, எச்சரித்துள்ளார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=661012
கர்நாடக லிங்காயத்து மடத்திற்கு நித்தியானந்தா குறி? - கடும் எதிர்ப்பு, போராட்டம்!
பெங்களூர்: சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீண்டும் ஒரு மட சர்ச்சையில் சிக்கியுள்ளார். மதுரை ஆதீனத்திற்குள் இளைய ஆதீனமாக புகுந்து பின்னர் வெளியேற்றப்பட்ட அவர் தற்போது கர்நாடக மடம் ஒன்றைக் கைப்பற்றக் கிளம்பியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து அவருக்கு எதிராக லிங்காயத்து சமூக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தனக்கென ஒரு தனி மடம் அமைத்து டிவிகளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, நடிகையுடன் அந்தரங்கமாக இருந்ததாக வீடியோவில் சிக்கி பெரும் சர்ச்சைக்குள்ளானார். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் பாய்ந்தன. நித்தியானந்தா கர்நாடகாவிலிருந்து தப்பி ஓடினார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் பெயிலில் வெளியே வந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். இடையில் மதுரை ஆதீனத்தின் நட்பைப் பெற்று மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக அறிவிக்கச் செய்து அனைவரையும் அதிர வைத்தார். ஆனால் இந்தப் பதவி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அரசுத் தரப்பிலிருந்து நெருக்கடி வந்ததும், நித்தியானந்தாவை பொறுப்பிலிருந்து நீக்கி விட்டார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். இதையடுத்து தற்போது அமைதி காத்து வரும் நித்தியானந்தா, கர்நாடகத்தில் உள்ள ஒரு லிங்காயத்து சமூகத்தின் மடத்திற்கு மடாதிபதியாக முயற்சிப்பதாக பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், ஜமகண்டி என்ற இடத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரா மடம். 100 ஆண்டு பழமையான மடம் இது. இந்த மடத்தின் மடாதிபதி பொறுப்புக்கு வர முயற்சிக்கிறார் நித்தியானந்தா என்பதுதான் பரபரப்புச் செய்தியின் சுருக்கம். இந்த மடத்தின் மடாதிபதியாக தற்போது சிவயோகி ராஜேந்திர சுவாமிஜி என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் பிடதி ஆசிரமத்திற்குப் போனதாகவும், அங்கு நித்தியானந்தாவுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது மகாலிங்கேஸ்வரா மடத்தின் தலைவராக நித்தியானந்தாவை நியமிக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாகல்கோட்டில் போராட்டங்கள் வெடித்தன. மடம் உள்ள பகுதியில் கடையடைப்பு நடத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களில் குதித்தனர். நித்தியானந்தாவை மடத்துக்குள்ளும், ஊருக்குள்ளும் விட மாட்டோம் என்று மிரட்டினர். அதேபோல லிங்காயாத்து மடாதிபதிகள் பலரும் ராஜேந்திர சுவாமிஜியை போனில் தொடர்பு கொண்டு கடுமையாக கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திர சுவாமிஜி கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இது வெறும் வதந்தியே. அப்படிப்பட்ட எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. நித்தியானந்தாதான் இதுபோன்ற வதந்தியைப் பரப்புகிறார் என்றார். அதேபோல நித்தியானந்தாவும் இந்த செய்தியை மறுத்துள்ளார். உண்மை என்னவோ தெரியவில்லை..!
Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/06/india-bangalore-nithyananda-controversy-yet-again-171051.html