நித்யானந்தா ஆசிரமத்தை கன்னட அமைப்பினர் முற்றுகை
பெங்களூரு: கர்நாடகாவில் நித்யானந்தா ஆசிரமத்தினை கன்னட அமைப்பினர்முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, பெங்களுரூ ராம்நகரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.இங்கு பகல்கோட் மாவட்டத்தில் உள்ள மடங்களை கையகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு கன்னடஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கன்னட நவநிர்மான் வேதிகே உள்ளிட்ட அமைப்பினர் நித்யானந்தா ஆசிரமத்தினை முற்றுகையிட்டுஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரம வளாகத்தில் லாரி டயர்களை போட்டு தீ வைத்த கொளுத்தியும், பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நி்த்யானந்தா ஆசிரமத்தினை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.அங்கு வந்த போலீசார் சிலரை கைது செய்தனர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=663992
No comments:
Post a Comment