மார்ச் 18,2013,02:28 IST
பெங்களூரு: "கர்நாடகாவிலிருந்து நித்யானந்தாவை, 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும்' என, வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் கெடு விதித்துள்ளன.கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்ற, நித்யானந்தாவுக்கு, எதிரான போராட்டம் வலுத்துள்ளது. தினமும், ஏதாவது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி வரும் நித்யானந்தா, கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்களின் மீது, கண் வைத்துள்ளதால், கன்னட அமைப்பினர் உட்பட, பல்வேறு மடாதிபதிகள் கடும் கோபமடைந்து உள்ளனர்."நித்யானந்தா, கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்' என, கன்னட அமைப்புகளான, நவ நிர்மாண கன்னடம், கஸ்தூரி கன்னடம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன.இந்நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர். "அவரை கர்நாடகாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்' என, மாநில அரசை வலியுறுத்தினர். பின், நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அதன் முன், இறப்பின் போது செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.போராட்டக்காரர்கள் கூறியதாவது:நித்யானந்தா, ஆன்மிகப் போர்வையில், கலாசார சீர்கேடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மிக விஷயங்களில் அக்கறை காட்டும் பெண்களை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி வருகிறார்.பிடதி தியான பீடத்தில், எந்த விதமான ஆன்மிக நிகழ்வும் நடப்பதில்லை. இந்த தியான பீடம், ஐந்து நட்சத்திர ஓட்டல் போல செயல்படுகிறது. நித்யானந்தாவை, கர்நாடகாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என, கன்னட அமைப்புகள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனாலும், எந்தப் பயனுமில்லை.கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா கண் வைத்துள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க, அரசோ, மாவட்ட நிர்வாகமோ முன்வரவில்லை. தமிழகத்தில், மதுரை ஆதீனத்தை கைப்பற்ற முயன்று தோற்றவர். அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால், கர்நாடகாவில் மடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இனிமேல், எங்களின் போராட்டம் ஆவேசமாக இருக்கும்.கர்நாடகாவிலிருந்து அவரை வெளியேற்ற, 24 மணி நேரம் அரசுக்கு "கெடு' விதிக்கிறோம். அதற்குள் நித்யானந்தாவை வெளியேற்றாவிட்டால், ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியது நேரிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த நித்யானந்தா போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இப்போராட்டங்களால் பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=669481&Print=1

நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு !
பெங்களூரூ : கர்நாடகாவில் நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு செய்து வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்றதாக நித்யானந்தா மீது புகார் எழுந்தது. இதனால் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டம் கர்நாடாவில் வலுத்து வருகின்றது.
இந்த நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.
பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர்.

பின்பு, நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அந்த படத்தின் முன்பு, இறந்தவர்களுக்கு செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.
இதனால், பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகளின் இந்த போராட்டத்திற்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
http://www.arasiyaltoday.com/archives/13183
No comments:
Post a Comment