26 Oct 12 05:45:00 AM
சென்னை, அக். 26-
நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா கதையை மையமாக வைத்து கன்னடத்தில் ஏற்கனவே சத்யானந்தா என்ற பெயரில் படம் தயாரானது. இதில் நித்யானந்தா ஆசிரம நடவடிக்கைகள் டி.வி.யில் வெளியாகி பரபரப்பான படுக்கை அறை காட்சிகள், வழக்குகள் போன்றவை இடம் பெற்று இருந்தன. இந்த படத்தை எதிர்த்து நித்யானந்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றார்.
தற்போது தமிழிலும் நித்யானந்தா, ரஞ்சிதா பற்றிய படம் தயாராகிறது. இப்படத்துக்கு வெண்ணிலாவின் அரங்கேற்றம் என பெயர் வைத்துள்ளனர். ஆர்.முத்துக்குமார் இயக்குகிறார். இதில் புதுமுகங்கள் தினேஷ் நாயகனாகவும், சமஸ்தி, மிதுனாவாலியா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். நடிகைகள் சீதா, ஷகிலாவும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். நித்யானந்தா, ரஞ்சிதா கேரக்டரில் நடிப்பவர்கள் படுக்கை அறையில் அருகருகே இருப்பது போன்றும் கால்களை பிடித்து விடுவது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.
நித்யானந்தா வேடத்தில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற திருநங்கை நடித்துள்ளார். ரஞ்சிதா கேரக்டரில் சமஸ்தி நடித்துள்ளார். நித்யானந்தா பற்றிய கன்னட படம் போலவே இந்த படமும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

http://tamilstorys.com/index.php?page_display=31859&type=Cinema
No comments:
Post a Comment