:
மதுரை ஆதீன மடத்தில் உள்ள நித்யானந்தா பொருட்களை இரண்டு நாட்களில்
எடுத்து செல்ல மதுரை ஆதீனம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மதுரை ஆதீனம்
கூறியதாவது: இளைய ஆதீனமாக நித்யானந்தா இருந்த போது, அவருடன் இணைந்து மதுரை
ஆதீனம் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இது இந்து சமய
அறநிலையத்துறை விதிப்படி செயல்படக்கூடாது என்பதால் கலைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்தில் உள்ள நித்யானந்தா பொருட்களை இரண்டு நாட்களில் எடுத்து
செல்ல உத்தரவிட்டுள்ளேன். மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக உள்ள 4
கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்படும் என நித்யானந்தா கூறியிருந்தார்.
கும்பாபிஷேகத்தை நான் செய்வேன் என கூறினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=570222
நித்யானந்தா விடுவிப்பு: இந்து முன்னணி வரவேற்பு
21 October 2012 09:38 PM IST
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில்
இருந்து நித்யானந்தா விடுவிக்கப்பட்டதற்கு இந்து முன்னணியினர் வரவேற்பு
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன்
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம்
பொறுப்பில் இருந்து நித்யானந்தா விடுவிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி
வரவேற்கிறது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின் மரபுகளை
காப்பாற்றப்பட வேண்டும்.
இந்த நிலையில், மதுரை ஆதீனத்தை தமிழக அரசு எடுத்துக் கொள்ள நினைப்பதாக
வதந்திகள் பரவியுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் இந்து மத நடவடிக்கைகளில்
தலையிட மாட்டார் என இந்து முன்னணி நம்புகிறது. மதுரை ஆதீனத்தில் சில
குளறுபடிகள் நடந்திருந்தாலும் அவை சீர் செய்யப்பட வேண்டியதே. அதற்காக ஆதீன
நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டால் நாட்டின் மதச்சாற்பற்ற தன்மையை
புறக்கணிக்கும் செயலாக அமைந்து விடும்.
எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் அவசரம் காட்டாமல் நிதானமாக நன்கு
ஆராய்ந்து நடுநிலையோடு நல்ல முடிவை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்
கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://dinamani.com/latest_news/article1309375.ece
No comments:
Post a Comment