ராம்நகரம்: தமிழகத்தில் கைதாவதிலிருந்து தப்பிப்பதற்காக கர்நாடகத்திற்கு
வந்து விட்ட நித்தியானந்தாவை, அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று
போராட்டங்கள் வெடித்துள்ளன.
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டு சில மாத சர்ச்சைகளுக்குப் பின்னர் சில நாட்களுக்கு முன்பு அப்பதவியிலிருந்து விரட்டப்பட்டார் நித்தியானந்தா. மேலும் அவர் மீது மதுரை ஆதீனம், மதுரை போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட போலீஸார் முயலலாம் என்று செய்தி பரவியது. இதையடுத்து நித்தியானந்தா திருவண்ணாமலையிலிருந்து பிடதி ஆசிரமத்திற்கு ஓடி விட்டார்.
அவர் பிடதிக்கு வந்துள்ளதால் கர்நாடகத்தில் ஏற்கனவே அவர் மீது கடும் கோபத்தில் உள்ள கன்னட அமைப்புகள் மேலும் கோபமடைந்துள்ளன. நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி, நேற்று இரவு முதல் கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சாலையில் டயர்களைப் போட்டுக் கொளுத்தியும், நித்தியானந்தாவின் படத்துக்கு தீ வைத்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஆசிரமத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டு வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளதால், நித்தியானந்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
http://tamil.oneindia.in/news/2012/10/23/india-kannada-organisations-protest-against-nithyanantha-163605.html

No comments:
Post a Comment