மதுரை, அக். 19-
மதுரை ஆதீனம் சார்பில் மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. இது இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளுக்கும், ஆதீன மடத்தின் நிர்வாகத்திற்கும் எதிரானது.
இதன் மூலம் அருணகிரிநாதர் மதுரை ஆதீன மடாதிபதியாக நீடிக்க தகுதியற்றவர் ஆகிறார். எனவே அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என மதுரை கோர்ட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது மதுரை ஆதீனம் தரப்பில் காலஅவகாசம் கேட்டதால் 19-ந்தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி நீதிபதி குருவையா முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தமிழ்செல்வன் வாதிட்டதாவது:-
மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனம் அருணகிரிநாதர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது செல்லாது. 23.4.2012 அன்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மற்றும் நித்யானந்தா பத்திர பதிவு அலுவலகத்தில் மதுரை ஆதீன அறக்கட்டளையை பதிவு செய்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்தக்கூடாது. மற்றும் அதை சார்ந்த பிரமான (அபிடவிட்) பத்திரங்களை நடைமுறைப்படுத்த கூடாது.
மேற்கண்ட காரணங்களால் மதுரை ஆதீனத்தை நிர்வகிக்க அருணகிரிநாதருக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதனை தொடர்ந்து அருணகிரிநாதர் சார்பில் வழக்கறிஞர் நாகேந்திரன் ஆஜரானார். அப்போது பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை தர உத்தரவிடவேண்டும் என கூறினார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த அரசு வக்கீல் தமிழ்செல்வன், இங்கு தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் மதுரை ஆதீனத்தில் இருந்து பெறப்பட்டதுதான். அதற்கான நகல் அவர்களிடமே உள்ளது என்றார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி குருவையா அறிவித்தார்.
http://www.maalaimalar.com/2012/10/19153052/Madurai-aadheenam-arunagiri-na.html
பல கோடி ரூபாய் நிலத்தை ரூ.64 ஆயிரத்துக்கு விற்றார் ஆதீனம்: அரசு அறிக்கையில் தகவல்
மதுரை, அக். 19-
மதுரை ஆதீனத்தில் இருந்து மூத்த ஆதீனம் அருணகிரிநாதரை வெளியேற்ற மதுரை கோர்ட்டில் இந்து அறநிலையத்துறை ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அருணகிரிநாதர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை ஆதீனமாக இருப்பவர் ஆதீன சொத்துக்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவுமே உரிமை உடையவர். ஆனால் 292-வது ஆதீனம் அருணகிரிநாதர் 1995 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆதீன சொத்துக்களை சொற்ப விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
1995-ம் ஆண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 7.36 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.44 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்துள்ளார். 1997-ம் ஆண்டு 5 ஏக்கர் நிலத்தை ரூ.20 ஆயிரத்து 700-க்கு விற்பனை செய்துள்ளார். இப்படி சொற்ப விலைக்கு இடம் விற்கப்பட்ட விவகாரத்தில் பல லட்சம் ரூபாய் கைமாறி இருக்கலாம் என அரசு தரப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பான ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த விவரங்கள் மற்றும் மதுரை ஆதீனம் சன்னியாசி என்ற நிலைக்கு அப்பாற்பட்டு தனது சுயவிளம்பரம் தேடும் வகையில் லட்சக்கணக்கான பணத்தை பல்வேறு நபர்களுக்கு நன்கொடையாக வழங்கியதையும் அரசு தரப்பில் பட்டியல் சேகரித்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் மதுரை ஆதீன மடத்தில் நித்யானந்தா சீடர்கள் குவிந்துள்ளனர். மேலும் ஆதீன மடத்தில் இருந்து வெளியே எதையும் கொண்டு செல்கிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
http://www.maalaimalar.com/2012/10/19160022/adheenam-many-crore-lands-sale.html

No comments:
Post a Comment