திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை அரசு ஏற்க முடிவு: இந்து அறநிலையத்துறை நோட்டீஸ்
30 October 2012 03:37 PM IST
மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்த நித்யானந்தா நீக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜகோபால், நித்யானந்தா நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் நித்யானந்தாவுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்.
இதேப்போல, மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்குரைஞரும், ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தா நீக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் மட்டுமே தெரிவித்தார். இது அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த வாதங்களை அடுத்து அரசு வழக்குரைஞர், இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கியதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறநிலையத் துறைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
http://dinamani.com/latest_news/article1320153.ece

No comments:
Post a Comment