பிடதி ஆசிரமத்தில் உள்ள பெண்களை மீட்கக் கோரி மகளிர் ஆணையத்தில் மனு
02:35:42,Friday2012-10-26
சென்னை
: பிடதி ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை மீட்கக் கோரிய வழக்கில் நேரில்
ஆஜராகி விளக்கம் அளிக்க நித்யானந்தாவுக்கு மகளிர் ஆணையம் சம்மன்
அனுப்பியுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த புலவர் மகாதேவன் சென்னை உயர்
நீதிமன்றத்தில் நித்யானந்தா பிடியில் இருக்கும் பெண்களை மீட்கக் கோரி மனு
தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் பானுமதி, சுப்பையா
ஆகியோர் தள்ளிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து புலவர் மகாதேவன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி நித்யானந்தா மீது புகார் மனு சமர்ப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் பிடியில் ஏராளமான பெண்கள் உள்ளனர். அவர்களை வசியம் செய்து நித்யானந்தா தனது ஆசிரமத்தில் வைத்துள்ளார். அங்கு தன்னை மறந்துள்ள பெண்களை மீட்கக் கோரி நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். நித்யானந்தாவின் பிடியில் உள்ள பெண்களை மீட்க வேண்டும்.
பெண்களிடம் தந்திரி செக்ஸ் என்ற ஒப்பந்த அடிப்படையில் உறவு வைத்து கொள்ளும் முறையை கையில் எடுத்து கொண்டு பெண்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பெண்களால் அங்கிருந்து மீள முடியவில்லை. பாலியல் உறவு வைத்து கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளனர். உண்மையை கூறியிருந்தால் ஒப்பந்தத்திற்கு எந்த பெண்களும் சம்மதித்து இருக்க மாட்டார்கள். பெண்களை ஏமாற்றி மோசடி ஒப்பந்ததை நித்யானந்தா போட்டுள்ளார். பெண் களை அடிமைகளாக வைத்துள்ளார்.
இதற்கான ஆவணங்களை கர்நாடக போலீசார் வசம் உள்ளது. பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். உண்மைநிலை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மகளிர் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி, எப்பொழுது நித்யானந்தா நேரில் ஆஜராவார் என்று கேட்டு ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28997
http://kannada.yahoo.com/%E0%B2%A8-%E0%B2%A4-%E0%B2%AF-%E0%B2%B5-%E0%B2%B0-210842268.html
ReplyDelete