Chennai,Oct 16, 2012 (PTI):
The Advocate General submitted that two persons cannot be head of the Mutt and appointment of Nithyananda as the next successor was in violation of the Act.
He also contended that petitions relating to this case cannot be considered as a PIL, since no fundamental right has been violated as well as not against government machinery.
He said the successor must be a disciple of the Mutt, be competent enough and must follow rituals and procedures being followed right from the days of Thirugnanasambandar.
"Any prudent person will not accept Nithyananda as the head of a religious institution, even to a secular institution," he said.
The department was taking steps to take action under section 59 of the HRCE Act, he said.
The matter has been posted for tomorrow.
Nithyananda is facing charges of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of him in a compromising position with an actress.
http://www.deccanherald.com/content/285827/steps-being-taken-against-adheenam.html
"நித்தி நியமனம் சட்ட விரோதமானது: விரைவில் நீக்கப்படுவார்'
அக்டோபர் 16,2012,23:46 IST
சென்னை:"மதுரை ஆதீனத்தின், இளைய சன்னிதானமாக, நித்யானந்தாவை நியமித்தது, இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை மீறியது' என, சென்னை ஐகோர்ட்டில், அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார்.
மதுரை ஆதீனகர்த்தாவாக, அருணகிரிநாதர் உள்ளார். ஆதீனத்தின், இளைய சன்னிதானமாக, நித்தியானந்தா, நியமிக்கப்பட்டார். இவரது நியமனம், சர்ச்சையை ஏற்படுத்தியது.நித்யானந்தா நியமனத்தை எதிர்த்தும், மதுரை ஆதீனத்தை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், எனக் கோரியும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள், நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது.
அரசு தரப்பில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வாதாடியதாவது:இந்து சமய அறநிலையத் துறைச் சட்டப்படி, ஒரு மடத்தின் தலைவராக, இருவர் செயல்பட முடியாது. ஒருவர் மட்டுமே, மடத்தின் தலைவராக இருக்க முடியும். வாரிசாக, நித்யானந்தா நியமிக்கப்பட்டது, இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தை மீறியது.இந்தப் பொதுநல மனுக்கள், விசாரணைக்கு உகந்ததல்ல. அரசுக்கு எதிராக, இம்மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. அருணகிரி நாதர், நித்யானந்தாவுக்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொது நல மனுக்களாக, இதை கருத முடியாது.வாரிசாக நியமிக்கப்படுபவர், மடத்தின் சீடராக இருக்க வேண்டும். சீடர்களில் ஒருவர், வாரிசாக நியமிக்கப்படும் அளவுக்கு, தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
திருஞானசம்பந்தர் காலம் முதல், பின்பற்றப்படும் சடங்குகள், நடைமுறைகளை, அவர் பின்பற்ற வேண்டும். நித்யானந்தா, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் மீது, பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. குணநலனும் சரியல்ல. ஒரு மத சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவராக, அவரை, அறிவார்ந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அவரை வாரிசாக அறிவித்தது, சட்டத்துக்கு எதிரானது. ஆதீனத்தின் மறைவுக்குப் பின், அடுத்த வாரிசு வர முடியும். ஆதீனத்தின் சொத்துக்களை எடுக்கும் நோக்கம் உள்ளதாக தெரிகிறது.இவ்வாறு, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடினார்.
வாதத்தின் போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்தப் புகார்கள் மீது, நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?' என, கேள்வி எழுப்பினர். அதற்கு, அட்வகேட்-ஜெனரல், "மதுரை ஆதீனத்தின் அறங்காவலரில் இருந்து, அருணகிரிநாதரை நீக்க, நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். விரைவில் நீக்கப்படுவார்' என்றார்.உடனே, நீதிபதிகள், "புகார்களின் மீது, நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தனை மனுக்கள், எங்கள் முன் வந்திருக்காது' என்றனர்.
இதையடுத்து, மதுரை ஆதீனம் தரப்பில் பதிலளிக்க, விசாரணையை, இன்றைக்கு, தள்ளி வைத்தனர்.இதற்கிடையில், சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த, புலவர் மகாதேவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு, யோகா பயிற்சிக்கு வரும், இளம் பெண்கள், மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். நித்யானந்தாவிடம் இருந்து, இளம் பெண்களை மீட்க வேண்டும். மகளிர் கமிஷன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனுவை, விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக, மகளிர் கமிஷனுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, டிசம்பர், 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=566976
No comments:
Post a Comment