திருவண்ணாமலை:மதுரை
ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட
நித்யானந்தா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திருவண்ணாமலையில் உள்ள
அவரது ஆசிரமத்தில் நேற்று ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். போலீசில் புகார்
செய்யப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யப்பட லாம் என்ற அச்சம்
ஏற்பட்டுள்ளதால் ஆசிரமத்தில் பதற்றம் நிலவுகிறது.பாரம்பரியம் மிக்க மதுரை
ஆதீனத்தின் 293வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்
நியமித்தார்.இந்நிலையில், நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்தது
சட்டவிரோதமானது. அந்த பொறுப்புக்கு நியமிக்க அவருக்கு தகுதியும் அருகதை
யும் இல்லை என்று என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தது. மேலும், மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்க அனுமதிக்க வேண்டும் என இந்து
சமய அறநிலையத் துறை ஆணை யர் தனபால், மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளார். இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க, இளைய மடாதிபதி
பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை டிஸ்மிஸ் செய்து, அருணகிரிநாதர் நேற்று
முன்தினம் திடீரென அறிவித்தார்.
மேலும், நித்யானந்தா மற்றும் அவரது சீடர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. என்னை அவர் டெலிபோனில் மிரட்டுகிறார் என அருணகிரிநாதர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நித்யானந்தா தங்கியுள்ள ஆசிரமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய அவருடைய சீடர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நித்யானந்தாவின் சீடர்கள் 13 பேர் நேற்று அதிகாலை திருவண்ணாமலை வந்து சேர்ந்தனர். அவர்களிடம் மதுரையில் நடந்த சம்பவங் களை நித்யானந்தா பதற்றத்துடன் கேட்டு தெரிந்து கொண்டதாக சீடர்கள் தெரிவித்தனர்.மேலும், நேற்று காலை முதல் முக்கிய சீடர்கள் மற்றும் வக்கீல்களுடன் நித்யானந்தா ஆலோசனை நடத்தியுள்ளார். மதுரை ஆதீனம் கொடுத்துள்ள புகார் அடிப்படையில் எந்த நேரத்திலும் நித்யானந்தா கைது செய்யப்படலாம் என்ற பீதியும், அச்சமும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே, கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கேட்பது குறித்து வக்கீல்களிடம் நித்யானந்தா ஆலோசித்து வருவதாக தெரிகிறது.முக்கியமான சீடர்கள், வக்கீல்கள் தவிர நேற்று வேறு யாரையும் நித்யானந்தா சந்திக்கவில்லை.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28692

நித்யானந்தா நீக்கம்: இந்து முன்னணி கொண்டாட்டம்
First Published : 21 October 2012 12:21 PM IST
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28693
ReplyDeleteஆதீன மடத்தில் தலைகீழ் மாற்றம் நித்தி பொருட்கள் மூலையில் வீச்சு
மதுரை: நித்யானந்தா டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தில் தலைகீழ் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நித்யானந்தா குவித்து வைத்திருந்த ஆடம்பரப் பொருட்கள் அகற்றப்பட்டன.மதுரை ஆதீன இளைய வாரிசாக நித்யானந்தா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டபோது பெங்களூர் பிடதி ஆசிரமம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 3 இடங்களில் பட்டமளிப்பு விழா ஆடம்பரமாக நடத்தினார். ஆதீன மடத்தில் மரபுகள் மீறி பல்வேறு மாற்றங்களை செய்தார். இளைய மடாதிபதியாக இருப்பவர், ஆதீனத்தின்கீழ்தான் அமருவது வழக்கம். ஆனால், ஆதீனத்திற்கு நிகராக நித்யானந்தா பீடம் அமைத்து அதில் அமர்ந்தார்
ReplyDeleteதிருஞானசம்பந்தர் முதல் இதுவரை பதவியில் இருந்துள்ள ஆதீனங்களின் உருவ படங்கள், ஓவியங்கள் மடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் நித்யானந்தா அகற்றி மூலையில் தூக்கி போட்டார். தனது படத்தை பெரிதாக வைத்தார்.மடத்தின் மாடியில் உள்ள அறையை தான் தங்குவதற்காக ஆடம்பரமாக வசதிகளுடன் அலங்கரித்துக் கொண்டார். சொகுசு மெத்தையுடன் கட்டில், ஷோபாக்கள் போடப்பட்டன. ஆடம்பர பொருட்கள் பெரும்பாலும் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். சொரூபானந்தாவுக்கு தனி அறை ஏற்படுத்தப்பட்டது. ஆண், பெண் சீடர்கள் தங்குவதற்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டன. நித்யானந்தா டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், மடத்தில் தலை கீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ReplyDeleteநித்யானந்தா குவித்திருந்த ஆடம்பர கட்டில், சொகுசு ஷோபா உள்ளிட்ட பெங்களூர் ஆடம்பர பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, மூலையில் போடப்பட்டன.நித்யானந்தாவால் அகற்றி மூலையில் போடப்பட்ட முந்தைய ஆதீனங்களின் படங்கள், ஓவியங்கள் மீண்டும் பொருத்தப்பட்டன. வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட வாயில் திறந்து வைக்கப்பட்டது.நித்யானந்தாவின் பொருட்களை மடத்திலிருந்து தூக்கிச் செல்ல அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதீனம் அருணகிரிநாதர் முடிவை வரவேற்று பக்தர்கள் மடத்திற்கு திரளாக சென்றனர். அவர்கள் ஆதீனத்திடம், ‘நித்யானந்தாவை நியமித்த போதே, நாங்கள் எதிர்த்து போராட்டம் நடத்தினோம். நீங்கள் அதை உதாசீனப்படுத்திவிட்டீர்கள். இப்போதாவது நல்ல முடிவை எடுத்துள்ளீர்களே என்றனர்.
ReplyDeleteஆதீன மடம் வாசலில் 108 தேங்காய் உடைப்பு: மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து இளைஞர் பேரவை சார்பில் ஆதீன மடத்தின் வாசலில் 108 தேங்காய் உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் நிர்வாகி முத்துராஜா நேற்று காலையில் மடத்துக்குள் செல்ல முயன்றார். மடத்தின் இரு புறமும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். உள்ளே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் முத்துராஜா, போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து இவர் கூறுகையில், ‘நித்யானந்தாவை நீக்கியது வரவேற்கத்தக்கது. அதே போல் அருணகிரிநாதரையும் நீக்கி விட்டு, ஆதீன மடத்தின் பொறுப்புகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்‘, என்றார்.
ReplyDelete