மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தா டிஸ்மிஸ்
செய்யப்பட்டதையடுத்து திருவண்ணாமலையில் தங்கியிருந்த அவர் பிடதி ஆசிரமம்
வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்றுகாலை பிடதி மடத்தில்
கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம், கர்நாடக ரக்ஷண வேதிகே, கன்னட பாதுகாப்பு
அமைப்பினர் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் பிடதி மடத்துக்குள் புகுந்து
ரகளையில் ஈடுபட்டனர்.
ஆசி ரம வாசலில் நித்யானந்தாவின் கொடும்பாவியை கன்னட அமைப்பினர் எரித்து
ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே, நித்யானந்தா ஆசிரமத்தில் இல்லை. தசரா
பண்டிகை காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் கன்னட அமைப்பினர் ஈடுபட
வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிடதி
ஆசிரமத்திலும் நித்யானந்தா இல்லை என்பதால் தலைமறைவாகியுள்ள அவர் எங்கு
சென்றார் என்பது மர்மமாக உள்ளது.Protest against Nithyananda in Bidadi - Disappeared from Bidadi Also?
http://tamilmedia24.com/news/index.php?option=com_tamilportalnews&view=tamilportalnewsindia&id=1526
No comments:
Post a Comment