நித்யானந்தாவை நீக்கினாலும் மடத்தை கைப்பற்றுவது உறுதி : ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் பானுமதி, சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தா வெளியேற்றப்பட்டாலும், மதுரை ஆதீனம் மீதான சிவில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
மடத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். நித்யானந்தா நீக்கம் தொடர்பாக மதுரை ஆதீனத்திடம் இருந்து தமிழக அரசுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றார். ஆதீனம் சார்பாக மூத்த வக்கீல் ராஜகோபால் ஆஜராகி, நித்யானந்தா நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்றார். நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=35616
No comments:
Post a Comment