மதுரை ஆதீன மடத்தில் இருந்து
நித்தி பொருட்கள் வெளியேற்றம் 3 லாரிகளில் ஏற்றிச் சென்றனர்
02:39:18.Friday2012-10-26
மதுரை : மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தா ஆடம்பர கட்டில் சொகுசு மெத்தை உள்ளிட்ட பொருட்கள் போலீசார் முன்னிலையில் மூட்டை கட்டி 3 லாரிகளில் சீடர்கள் தூக்கிச் சென்றனர். இளைய ஆதீனமாக நித்யானந்தா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பெங்களூரில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட கட்டில், சொகுசு இருக்கை மற்றும் ஆடம்பர பொருட்கள் மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டு வரப்பட்டு குவிக்கப்பட்டன. கடந்த 19,ந் தேதி நித்யானந்தாவை நீக்கப்பட்டவுடன், அவரது சீடர்களும் வெளியேற் றப்பட்டனர். ஆடம்பர பொருட்களை ஒரு வாரத்தில் எடுத்து செல்லும்படி நித்யானந்தாவுக்கு பெரிய ஆதீனம் கெடு விதித்தார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=29001
No comments:
Post a Comment