என் மனைவியை பிரித்த நித்யானந்தா'' -டக்ளஸ் மெக்கல்லர் பேட்டி!
shockan.blogspot.com
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி நடப்ப தால், தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பித்து விடலாம் என்று நித்யானந்தர் கணக்கு போடுகிறார். 40-க்கும் மேற்பட்டவர்கள் நித்யானந்தர் மீது புகார் தெரிவித்திருக்கும் நிலையில், வலுவான ஆதாரங்களைத் தேடுகிறது போலீஸ் தரப்பு. நித்யானந்தர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களை வைத்திருப்பவர்களில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த அவரது முன்னாள் பக்தர் டக்ளஸ் மெக்கல்லர். அங்குள்ள கலிபோர்னியா மாநில அட்டர்னி ஜெனரலிடம் நித்யானந்தாவின் வயது மோசடியிலிருந்து பாலியல் மோசடி வரை பலவற்றுக்கும் ஆதாரங்களை அளித்திருக்கிறார் டக்ளஸ் மெக்கல்லர். தனது புகார்கள் குறித்து விரிவாக இதுவரை பேசாமல் இருந்த மெக்கல்லர் நக்கீரனுக்கு ஆன்லைன் மூலமாக அளித்த பேட்டி.. ..
அமெரிக்காவில் நித்யானந்தரின் புகழ் பரப்பும் பக்தராக இருந்துவிட்டு, தற்போது அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறீர்களே... இதற்கு என்ன பின்னணி?
டக்ளஸ் மெக்கல்லர் : என்னைப்போன்ற பக்தர்கள் பலரும் நித்யானந்தரின் உண்மை சொரூபத்தை லேட்டாகத்தான் தெரிந்துகொண்டோம். அவர் மோசடிப் பேர்வழி மட்டுமல்ல. ஆபத்தான ஆள். உண்மையான குருவாகவும் செயல்படவில்லை. சைக்காலஜிக்கல் முறையில் தன்னுடைய பக்தர்களை அவர் வசப்படுத்தி, மோசடி செய்துவிட்டார். அவரால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பாதிப்பு என்றால், எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட விவாகரத்து, என்னுடைய வேலை இழப்பு, என் வாழ்நாள் உழைப்பில் சேமித்து வைத்திருந்த 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1 கோடியே 80 லட்ச ரூபாய்)காலியானது என சொல்லிக் கொண்டே போகலாம். என்னையும் என்னைப்போல பலரையும் ஏமாற்றிய நித்யானந்தரிடம் இனியும் யாரும் ஏமாறக் கூடாது என்றுதான் ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தேன்.
நித்யானந்தர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் பக்தர்கள்கூட அவருடைய ஹீலிங், மெடிடேஷன் உள்ளிட்ட பயிற்சிகளை உயர்வாகச் சொல்கிறார்களே?
டக்ளஸ் மெக்கல்லர் : ஹீலிங், மெடிடேஷன் இவற்றில் அவர் வல்லவர் தான். அதையெல்லாம் பக்தர்களை ப்ரெய்ன் வாஷ் செய்து மடக்குவதற்குத்தான் பயன் படுத்தினார். பெண் பக்தர்களை கட்டி லுக்குத் தள்ளுவதற்குத்தான் இதையெல்லாம் பயன்படுத்தினார். ஆசிரமத்தில் சேர்பவர்களை வேலை, வேலை, வேலை என்று தூங்கவிடாமல் வேலையிலும் பயிற்சியிலும் ஈடுபடுத்துவார். தூங்காமல் அசதியாகவும் மயக்கமாகவும் இருக்கும் பக்தர்களை தன் விருப்பத்துக்கு ஆட் படுத்துவது எளிது. அவருடைய ஹீலிங், மெடிடேஷன் இத்யாதி களெல்லாம் இதற்குத் தான் பயன்பட்டன. சார்லஸ் மேன்சன், ஜிம் ஜோன்ஸ் போன் றவர்கள் மேலை நாடுகளில் இதே டெக்னிக்கைத்தான் கடைப்பிடித்தார் கள். பிறர் மனதை அசதியடையவைத்து- குழம்பச்செய்து அவர்களைத் தன் வயப்படுத்துதல் என்பதுதான் நித்யானந்தர் கடை பிடித்த வழிமுறை. ஒருவித போதைக்கு ஆட்பட்டது போன்ற நிலையை ஏற்படுத்தி, அவர்கள் ஆன்மீக சக்தியைப் பெற்றுவிட்டதாக சர்டிபிகேட் கொடுத்து விடுவார். அதன்பிறகு குடும்பம், சொத்து, வேலை எல்லாவற்றையும் நாசப்படுத்திவிடுவார். இது மிகப் பெரிய மோசடி.
இந்த விஷயத்தில் உங்களுக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவங்களைச் சொல்ல முடியுமா?
டக்ளஸ் மெக்கல்லர் : நித்யானந்தாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரமத்தில் முதல் பேட்ச்சாக 2007-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நான் உள்ளிட்டவர்கள் சந்நியாசம் பெற்றோம். எங்கள் முடிகளை மழித்து, நித்யானந்தர் மூட்டியிருந்த தீயில் போட்டோம். கடைசி நாள் நிகழ்ச்சியில், நாங்கள் மண்டியிட்டிருக்க, எங்கள் தலை மீது காலை வைத்தார் நித்யானந்தர். அதன்பிறகு காவி உடையை எங்களுக்கு அணிவித்தார். நான் சந்நியாசம் பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டேன். ஆனால், நான் முழு சந்நியாசம் பெறவில்லை என்று ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களிடம் நித்யானந்தர் ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தது என் காதுக்கு வந்தது. அதற்கு காரணம், நான் திருமணமானவன் என்பதுதான். நான் ஆசையாகத் திருமணம் செய்த மனைவியை விட்டுப் பிரியவேண்டும் என்பதற்கான ப்ரெய்ன்வாஷ் வேலையை அவர் ஆரம்பித்தார். என்னிடம் இதுபற்றி பேசியதோடு மட்டுமில்லாமல், என் மனைவியையும் ப்ரெய்ன்வாஷ் செய்தார். ஆசிரம விதிகளுக்குட்பட்ட சந்நியாசியாக தன் கணவர் இருக்க வேண்டும் என விரும்பிய என் அருமை மனைவியும் நித்யானந்தர் சொன்னதற்கு தலை யாட்டினார். இருவரும் ஒரே ஆசிரமத்தில்தான் இருந்தோம். என்னை 400 மைல் தள்ளியுள்ள சான்ஜோஸ் ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு, என் மனைவியை தன்னுடைய லாஸ் ஏஞ்செல்ஸ் ஆசிரமத்திலேயே தங்கவைத்துக் கொண்டார் நித்யானந்தர். நாங்கள் உடனடி விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் எங்களை இப்படி பிரித்து வைத்துவிட்டார்.
எனக்கு அதன்பிறகுதான் நித்யானந்தர் பற்றியும் அவருடைய ஆசிரமம் பற்றியும் கேள்விகள் எழ ஆரம்பித்தன. அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது புரிந்தது. அது பற்றி கேள்விகள் கேட்டதால், என்னை அவருக்குப் பிடிக்கவில்லை. நானும் கிளம்பிவிட முடிவு செய்து என் மனைவியை அழைத்தேன். ஆனால், என் மனைவியோ நித்யானந்தரின் போதனை போதைக்கு முழுமையாக ஆட்பட்டுவிட்டதால் என்னு டன் வர விரும்பவில்லை. தனக்கு டைவர்ஸ் தரவேண்டும் எனக் கேட்டார். கொடுக்கா விட்டால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார். வேறு வழியில்லாமல் 2008-ல் நாங்கள் விவாகரத்தானோம். மனைவியுடன் கணவன் சேர்ந்திருப்பதும், குழந்தைகளுடன் பெற்றோர் சேர்ந்திருப்பதும் நித்யானந்தருக்குப் பிடிக்காது. ப்ரெய்ன்வாஷ் செய்து பிரித்துவிடுவார்.
நித்யானந்தர் மீது பணம் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை நீங்கள் அதிகமாக வைத்திருக்கிறீர்கள். உங்களின் தனிப்பட்ட இழப்பை காரணமாக வைத்து இப்படிச் சொல்கிறீர்களா?
டக்ளஸ் மெக்கல்லர் : தனது ஆசிரமத்தை அவர் ஒரு பண இயந்திரமாக மாற்றி வைத் திருந்தார் என்பது மறுக்க முடியாத குற்றச் சாட்டு. அமெரிக்காவில் உள்ள ஒரு பக்தர், அவரை இங்குள்ள ஆசிரமத்தில் சந்திக்க வேண்டுமென்றால் 250 டாலர் கட்டணமாக செலுத்தவேண்டும். யார் வீட்டுக்காவது அவரை வரவழைத்தால் 5000 டாலர். அவ ருடைய காலைக் கழுவி பாதபூஜை செய்ய வேண்டுமென்றால் 2000 டாலர். இந்த கணக்கில், அவர் இங்கே வரும்போதெல்லாம் ஒருநாளைக்கு ஒரு லட்சம் டாலர் சம்பாதித்துவிடுவார். அதாவது, 41 லட்ச ரூபாய். ஒரு சந்நியாசிக்கு ஒரு நாளில் இந்தளவுக்கு வருமானம் தேவையா? அதுபோல, தன்னுடைய பக்தர்களெல்லாம் தங்கள் ஆண்டு வருமானத்தில் பத்து சதவீதத்தையாவது ஆசிரமத்திற்கு தரவேண்டும் என நிர்பந்தித்து வாங்கிவிடுவார். இவ்வளவு வருமானத்துக்கும் முறைப்படியான கணக்கு கிடையாது. நன் கொடையாக கிடைக்கும் பணத்தை ஏழைகளுக் கும் தேவையுள்ளவர்களுக்கும் கொடுத்து உதவுவதும் கிடையாது.
நித்யானந்தரின் பெங்களூரு பிடதி ஆசிரமத்தி லிருந்து பல செக்ஸ் புகார்கள் வெளிப்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேல்நாடுகளில் உள்ள நித்யானந்தர் ஆசிரமங்கள் எப்படி?
டக்ளஸ் மெக்கல்லர் : லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரமத்தில் நித்யானந்தர் இருக்கும்போது அவரைச் சுற்றி நிறைய பெண்கள் இருப்பதைப் பார்த் திருக்கிறேன். அவர்களில் சிலர் திருமணமான பெண்கள். எங்களை உள்ளே அனுமதிக்கமாட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் மட்டும் உணவு பரிமாறுவதற்கும் பணிவிடை செய்வதற்கும் அனுப்பி வைக்கப்படு வார்கள். நைட்டு 2 மணி, 3 மணி வரையெல்லாம் அவரது அறைக்குள் பெண்கள் இருப்பார்கள். என்ன நடக்கிறதென்று பலருக்கும் தெரி யாமலேயே இருந்தது. ரஞ்சிதா வீடியோ மூலமாகத்தான் உள்ளே நடப்பது என்ன என்பது எல்லோருக்கும் தெரியவந்தது.
அதுபோல, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் இரண்டு நாள் பயிற்சி நடந்தது. அப்போது, கோயிலுக்குள்ளேயே நித்யானந்தருக்கு ஒரு ரூம் உண்டு. அதில் பெட் போடப்பட்டிருந்தது. தனக்கு விருப்பமான பெண்ணைத் தேர்வு செய்து அவருடன் அந்த அறையில் தங்கியிருந்த நித்யானந்தா, என்னை வெளியே காவலுக்கு நிற்கச் சொல்லிவிட்டார். தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த் துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நித்யானந்தர் எனக்குப் போட்ட உத்தரவு. இன்னொருமுறை, மான்ட்க்ளேர் என்ற இடத்தில் உள்ள கோயிலில் நித்யானந்தர் இருந்தார். அவருடைய இருப்பிடத்தில் ஒரு பெட் உண்டு. அந்த அறைக்கு ஒரு பூட்டு உண்டு. அதன் சாவியை கோபிகாதான் வைத்திருப்பார். ஒவ்வொரு உணவு நேரத்துக்கும் ஒவ்வொரு பெண் வந்து பரிமாறவேண்டும் என நித்யானந்தர் சொல்லியிருந்ததால், அதுபோலவே பெண்களை உள்ளே அனுப்பி கதவைப் பூட்டிவிடுவார் கோபிகா.
ஆசிரமத்தில் சேரும் பெண்களிடம் இதுபற்றியெல்லாம் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் நித்யானந்தர் சேர்த்தார் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அவரது தரப்பினர் சொல்கிறார்களே?
டக்ளஸ் மெக்கல்லர் : இந்திய நாட்டின் சட்டப்படி இந்த ஒப்பந்தம் எப்படி செல்லும் என்று தெரியவில்லை. அமெரிக்காவிலும் இதற்கு சட்ட அங்கீகாரம் இருக்காது என்றே வல்லுநர்கள் சொல்கிறார்கள். ரஞ்சிதா போன்ற பெண்களின் சம்மதத் துடன்தான் அவர் கட்டிலில் இருந்தார் என்று சொல்வதும் அபத்தம்.
மனிதர்களின் -குறிப்பாக பெண்களின் பலவீனங்களையும் பிரச்சினை களையும் அவர் தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டார். கணவன்-மனைவிக் கிடையிலான சிக்கல்களையும் அவர் இப்படித்தான் கையாண்டார். பெண் பக்தர்களை கவர்வதற்காக பல ட்ரிக்குகளை தந்த்ராஸ் என்ற பெயரில் அவர் செயல்படுத்தித் தான் கட்டிலில் தள்ளினார். இது கடவுளுக்கு செய்யும் சேவை என ஏமாற்றினார். அதனால் இது சம்மதத்துடன் நடந்த உறவுகள் அல்ல. ஆன்மீக வன்முறை. அப்பட்டமான கற்பழிப்பு.
-இப்படி நித்யானந்தரின் அத்தனை மோசடிகளையும் ஆதாரப்பூர்வமாகவும் அனுபவம் வாயிலாகவும் வெளிப்படுத்தும் டக்ளஸ் மெக் கல்லர், தன் வசமுள்ள ஆதாரங்களை இந்திய நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க முன்வந்திருப்பதால், நித்யானந்தர் மீதான வழக்குகளின் பிடி இறுகுகிறது.
http://shockan.blogspot.in/2010/04/blog-post_2176.html
pls translate to english
ReplyDeleteOm Namah Shivaya,
ReplyDeleteYes, that story was very close to my experience. Nithyananda has caused many divorces. A true, evil home-wrecker.
Jai Maa.