Nithyananda removed from ilaya aadhenam
Nithyananda Appointment as 293rd Pontiff Anulled. Nithyananda Removed from Madurai Adheenam by Senior Pontiff Aunagirinathar
இளைய ஆதினம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கம்: உயிருக்கு ஆபத்து என மதுரை ஆதினம் புகார்
அக்டோபர் 19,2012,21:00 IST
மதுரை: மதுரை இளைய ஆதினம் பதவியில் இருந்து நித்யானந்தா
நீக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அறிவித்துள்ளார். மேலும்
நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மதுரை இளைய ஆதினமாக நித்யானந்தாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் நியமித்தார். இவரது அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுரை ஆதினம் நித்யானந்தா நியமன அறிவிப்பில் உறுதியாக இருந்தார்.
நித்யானந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஆதீனத்தை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், அங்கு நடக்கும் வழிபாடுகளுக்கு சென்று வர, போலீஸ் பாதுகாப்பு கேட்டும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், வழக்கறிஞர் கண்ணன், மதுரை ஆதீனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், வழக்கறிஞர் பாலா டெய்சி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கந்தசாமி, போலீஸ் தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, ஆஜராகினர்.
இவ்வழக்கில், இன்று , அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், "மதுரை ஆதீனத்தை நீக்குவதற்கு, மதுரையில், சிவில் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதீனத்தின் சொத்துக்களை, அறநிலையத் துறை கமிஷனரின் அனுமதியில்லாமல், விற்கக் கூடாது, என, கோரியுள்ளோம். மதுரையில் உள்ள வழக்குக்கும், இங்குள்ள வழக்குக்கும் சம்பந்தமில்லை' என்றார்.இதையடுத்து, இந்த வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்துள்ளது. நித்யானந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும் விரைவில் அவர் நீக்கப்படுவார் எனவும் தமிழக அரசு ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் கூறியிருந்தது.

நித்யானந்தா நீக்கம்:
இந்நிலையில் இளைய ஆதினம் பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதினம் அறிவித்துள்ளார்,
இது குறித்து மதுரை ஆதினம் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மதுரை இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை முதல் இளைய ஆதினம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு யார் தூண்டுதலின் பேரிலோ, வற்புறுத்தலின் பேரிலோ எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் ஆதினத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொண்டு ஆதினத்தை வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.
நித்யானந்தா நீக்கப்பட்டதை தொடர்ந், அவரது ஆதரவாளர்கள் மடத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்து:
மதுரை ஆதினம் சார்பில் நித்யானந்தா போலீசில் புகார் கூறியிருந்தார். அந்த மனுவில் அவர், நித்யானந்தா வாரிசு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மடத்திலிருந்து என்னை கண்காணித்து வருகின்றனர். அவர்களது எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து மதுரை ஆதின மடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=568975
No comments:
Post a Comment