திருவண்ணாமலை:
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது
செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய்
விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப்
போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தாவை நீக்கியிருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியிருந்தார்.
இதையடுத்து அந்தப் புகாரின் பேரில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட காவல்துறையினர் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை உணர்ந்த நித்தியானந்தா, தனது திருவண்ணாமலை மடத்தை விட்டு வெளியேறி விட்டாராம்.
அவர் தற்போது பிடதி ஆசிரமத்திற்குப் போய் விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை மடத்தின் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சுவாமி தலைமறைவாகவில்லை. ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க அவர் தனது சீடர்களுடன் பிடதி ஆஸ்ரமத்துக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். இத்துடன், அங்கு இம் மாதம் 28-ம் தேதி வரை நித்யானந்தாவே தியானப் பயற்சி நடத்துகிறார். திருவண்ணாமலைக்கு அவர் எப்போது வருவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றனர்.
ஆனால் இப்போதைக்கு அவர் தமிழ்நாட்டுப் பக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏற்கனவே பிடதி ஆசிரமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்தார் நித்தியானந்தா. தற்போது மறுபடியும் அதே பிடதிக்குப் போயுள்ளார். ஏற்கனவே கர்நாடகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் இருப்பது நினைவிருக்கலாம்.
Nithyanantha has rushed to Bidadi ashram to avoid arrest in Tamil Nadu after Madurai Aadheenam Arunagirinathar given a complaint against him in Madurai police station.
http://tamil.oneindia.in/news/2012/10/22/tamilnadu-nithyanantha-rushes-bidadi-ashram-163519.html
----------------------------------------------------------------------------------
தலைமறைவான நித்யானந்தா, பிடதி ஆசிரமத்தில் தஞ்சம்
திங்கட்கிழமை, அக்டோபர் 22, 9:41 AM IST
சென்னை, அக்.22-

மதுரை ஆதீனத்தின் இளைய
ஆதீனமாக நித்யானந்தா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும்
எதிர்ப்பு கிளம்பியது. ஆதீனத்தின் சொத்துக்களை காப்பாற்ற ஐகோர்ட்டில்
பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. ஆதீன சொத்துக்களை மீட்கவும்,
மடத்தை அரசே எடுத்துக் கொள்ளவும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்க
வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையும் மதுரை சிவில் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் கடந்த சில
தினங்களுக்கு முன்பு இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா
நீக்கப்படுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து
இருப்பதாகவும் மதுரை ஆதீனம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து
மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மதுரை
ஆதீனம் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா கைது செய்யப்படலாம் என்று
பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தா
தலைமறைவானார். ஆனால் அவர் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்தில்
தஞ்சம் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் கூறியதாவது:-
நித்யானந்தா
தலைமறைவாகவில்லை. ஆதீன பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்ட பிறகு
திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடி ஏற்பட்டது. இதை தவிர்க்க தனது
சீடர்களுடன் அவர் பிடதி ஆஸ்ரமத்துக்கு சென்றுள்ளார்.http://www.maalaimalar.com/2012/10/22094159/nithyananda-refuge-in-the-bida.html
-----------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment