பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2012,00:06 IST
பெங்களூரு: தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட நித்யானந்தா,
மீண்டும் கர்நாடக மாநிலம், பிடதிக்கு வந்ததை அறிந்த கன்னட அமைப்பினர்,
அவருக்கு எதிராக
போராட்டத்தில் குதித்தனர். நித்யானந்தா படத்தை தீ வைத்து கொளுத்தினர்; தியான பீடத்தை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.மதுரை ஆதினத்தின் இளைய ஆதினமாக, நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
"அவரது நியமனம் செல்லாது' என, நீதிமன்றத்தில் வாதிட்டனர். மதுரை ஆதின சொத்துக்களை கைப்பற்ற நித்யானந்தா திட்டமிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நித்யானந்தா, இளைய ஆதினமாக
நியமிக்கப்பட்டதை, மதுரை ஆதினம் ரத்து செய்தார்.
அடைக்கலம்:இதையடுத்து, தன் சொந்த ஊரான திருவண்ணாமலையில் அடைக்கலம் புகுந்த நித்யானந்தாவுக்கு, அங்கும் எதிர்ப்பு அதிகரித்தது. தன் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின், பிடதியிலுள்ள தன் ஆசிரமத்துக்கு, நேற்று முன்தினம் மாலை, 4:30 மணியளவில் வந்தார்.இந்த தகவலறிந்த, கர்நாடகா நவ நிர்மாண சேனை அமைப்பு தலைவர், பீமா சங்கர் பாட்டீல் தலைமையில், 25 பேர், நேற்று முன்தினம் இரவில், ஆசிரமத்துக்கு வந்து, நுழைவு வாயில் முன்பிருந்த, நித்யானந்தா விளம்பர போர்டுகளை அகற்றினர்.டயர்களை எரித்து போராட்டத்தில் குதித்தனர்.
"நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் இருக்க கூடாது; கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்' என, கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தினால், ஆசிரமத்திலுள்ளவர்கள், ஆசிரம வாசலுக்கு பூட்டுப் போட்டனர்.கலைத்தனர்;இதை அறிந்த, ஒரு வேனில் வந்த ரிசர்வ் போலீசார், போராட்டக்காரர்களை கலைத்தனர்.நேற்று காலை, கர்நாடகா ஜனபர வேதிகே அமைப்பின் தலைவர், ரமேஷ் கவுடா தலைமையில், 25 பேர் ஆசிரமம் முன் கூடினர். நித்யானந்தாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். டயர்களை எரித்தும், நித்யானந்தா படத்தை எரித்தும் போராட்டம் நடத்தினர்.ஆசிரமத்துக்குள் செல்ல முற்பட்ட, கன்னட அமைப்பினரை போலீசார் தடுத்தனர். இதனால், ஆசிரம நுழைவு வாயில் முன், மதியம் ஒரு மணி வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாத யாத்திரைரமேஷ் கவுடா கூறுகையில், ""பிடதி ஆசிரமத்திலிருந்து நித்யானந்தா காலி செய்து வெளியேற வேண்டும். அப்படியும் காலி செய்யவில்லை என்றால், எங்களின் போராட்டம் தொடரும். கர்நாடகா முழுவதும் போராட்டம் வெடிக்கும்; ராம்நகரிலிருந்து பிடதி ஆஸ்ரமத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம்,'' என்றார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=571079