கர்நாடகாவில் திருதிரு நித்தி! ஆசாமியை அங்கிருந்து கிளப்ப அரசின் விறுவிறு உத்தி!!
Viruvirupu, Wednesday 24 October 2012, 03:39 GMT
மதுரை
ஆதீனம், டிஸ்மிஸ் செய்தபின் தமிழகத்தைவிட்டு கர்நாடகா சென்று தங்கியுள்ள
நித்தி சுவாமிகளை, “இங்கிருந்து கிளம்புங்க” என அங்குள்ள அமைப்புகள்
போர்க்கொடி தூக்கிவருகின்றன.
மதுரை ஆதீன பதவியில் இருந்தபோது, சில நாட்களாக திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தா, தமிழகத்தில் நிலைமை சரியில்லாத காரணத்தால், கர்நாடகாவின் ராம்நகரம் மாவட்டம் பிடதியில் உள்ள ஆசிரமத்துக்கு ஓடோடிச் சென்றிருந்தார். அவர் அங்கு செல்லும் விஷயமே தெரியாதபடி வைக்கப்பட்டிருந்தது.
அப்படியிருந்தும், அவர் அங்குதான் செல்கிறார் என்ற தகவல் லீக் ஆகியது.
நித்யானந்தா, கர்நாடகா வந்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலையில் டயர் கொளுத்தியும், நித்யானந்தாவின் படத்துக்கு தீ வைத்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். உடனடியாக நித்தியானந்தா தமது மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்க ஆசிரமத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“நித்யானந்தாவை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேற்றா விட்டால், விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படும்” என்று மாநில அரசுக்கு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து, கன்னட மீடியாக்களில் பேட்டிகள் கொடுத்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நித்தியின் நியமனம் தொடர்பாக தமிழக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அப்படியிருந்தும் தொடர்ந்தும் தெம்பாகவே தமிழகத்தில் நடமாடிவந்த நித்தி, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தம்மை இளைய மடாதிபதி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ததாக அறிவித்தவுடன், மிரண்டு போனார்.
தமிழக அரசின் நடவடிக்கைகள் செல்லும் பாதையையும், வேகத்தையும் பார்த்தால், தமிழகத்தில் இருந்தால் தாம் கைது செய்யப்படுவோம் என்பது நித்திக்கு புரிந்த காரணத்தாலேயே, தமிழகத்தை விட்டு அவர் எஸ்கேப் ஆனார் என்று கூறப்படுகிறது. கர்நாடகாவில் உடனடி ஆபத்து ஏதும் கிடையாது என்று அவர் நினைத்திருக்க, அங்கும் சிக்கலாக உள்ளது.
அங்குள்ள அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக, அந்த மாநில அரசு நித்தியை கைது செய்ய முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது.
காரணம் சட்ட ரீதியாக, நித்தியை தமது மாநிலத்தைவிட்டு கிளம்புமாறு மாநில அரசால் சொல்ல முடியாது. இந்தியப் பிரஜையான அவர், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் (மத்திய அரசால் நடமாட்டங்கள் தடைசெய்யப்பட்ட மாநிலப் பகுதிகள் தவிர்ந்த) சுதந்திரமாக தங்கியிருக்க முடியும்.
இதனால், ஏதாவது விவகாரத்தில் (வன்முறையை தூண்டுகிறார் என்றுகூட வழக்கு பதிவு செய்யலாம்) அவரை கைது செய்யும் முயற்சிகளை மேற்கொண்டால், நித்தி அங்கிருந்து தாமாகவே எஸ்கேப் ,
மொத்தத்தில் நித்திக்கு, ‘பயணங்கள் முடிவதில்லை’
http://tinyurl.com/8c4kybt

No comments:
Post a Comment