Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label TAMIL NADU. Show all posts
Showing posts with label TAMIL NADU. Show all posts

Saturday, August 2, 2014

நித்யானந்தாவின் உண்மை தெரிந்துவிடும்: 6ம் தேதி !!

நித்யானந்தா அளித்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பிடதியில் ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா, அங்கிருக்கும் பெண்களை கற்பழித்துள்ளதாகவும், நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் புரிந்ததாகவும் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன்பின் இவ்வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அந்த சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் நித்யானந்தாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தொடர்பான வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனை எதிர்த்தும் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ராம்நகர் நீதிமன்றத்தில் வரும் 7ம் திகதி ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
எனவே நித்யானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் அவர் 7ம் திகதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது
http://indru.todayindia.info/nithyananda-to-know-the-truth-6th/

கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறு: நித்யானந்தாவை திருவண்ணாமலைக்குள் நுழைய விடமாட்டோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜன், மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன் மற்றும் பலர் பேசினர். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு வகுப்புகள்
அப்போது ஏழை குழந்தைகளின் கல்விக்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1411 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையே கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு காரணம். 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்பு மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
காத்திருப்பு போராட்டம்
பெற்றோர்களிடத்தில் ஆங்கில மோகம் அதிகரித்து விட்டதால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்களை நியமிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவக் குமார், குமரேசன், பலராமன், வக்கீல் அபிராமன், ஜெயபால் மற்றும் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நுழையவிட மாட்டோம்
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் ‘நித்தியானந்தா சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவர் திருவண்ணாமலைக்கு வந்தால் அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/2014/08/01191742/Communist-Party-About-Defamation-Nithyananda-Tiruvannamalai.vpf

Monday, July 28, 2014

நித்யானந்தாவிற்கு ஜாமினல் வெளிவரமுடியாத கைது ஆணை: கர்நடாக நீதிமன்றம் உத்தரவு

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து  கர்நாடக  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த வாரம் கர்நாடக உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்யானந்தா ஆஜராகவில்லை. இதனையடுத்து நித்யானந்தாவிற்கு  ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

MORE TAMIL NEWS .ABT NITHYANANDA  


நித்யானந்தாவைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை நடத்த, கர்நாடக நீதிமன்றம் உத்தரவு


nithyananda
நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த வாரம் கர்நாடக உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்யானந்தா ஆஜராகவில்லை.

இதனையடுத்து நித்யானந்தாவிற்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
முன்னதாக, 2013 டிசம்பரில் நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று, சந்நியாசி ஆனார். அவர் பெயர், மா ஆனந்தமயி என மாற்றப்பட்டது. 
 
37 வயதாகும் நித்யானந்தா உருவாக்கிய அறக்கட்டளைக்குப் பல்லாயிரம் கோடி சொத்து உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகும், தமது வழக்கமான ஆன்மீகப் பணிகளைக் கவனித்து வருகிறார். 
 
நான் ஆண் அல்ல. என்னால் எதுவும் நடைபெற்றிருக்க முடியாது. வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என 2010ஆம் ஆண்டு, நித்தியானந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/arrest-warrant-against-nithyananda-case-masculinity-test-karanataka-court-114072800026_1.html
நித்தியானந்தாவைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை நடத்துங்க - கர்நாடக கோர்ட் அதிரடி உத்தரவு!

பெங்களூர்: ஆண்மைப் பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாமியார் நித்தியானந்தா வராத காரணத்தால் அவரைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை செய்து, அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கர்நாடக போலீஸாருக்கு, ராம்நகர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டையும் ராம்நகர் கோர்ட் பிறப்பித்துள்ளது. கர்நாடாவில் உள்ள பிடதியில் ஒரு ஆசிரமத்தை வைத்திருக்கிறார் நித்தியானந்தா். அங்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகஒரு சர்ச்சை எழுந்தது. மேலும் நடிகை ரஞ்சிதாவுடனும் அவர் அந்தரங்கமாக இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அவ்வாறு சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் நித்தியானந்தா. பல வருடங்களாக இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நித்தியானந்தாவின் வேண்டுகோளை கோர்ட் நிராகரித்தது. மேலும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று நித்தியானந்தா தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/arrest-warrant-against-nithyanantha-207147.html
http://news.vikatan.com/article.php?module=news&aid=30693

http://tamil.oneindia.in/news/india/arrest-warrant-against-nithyanantha-207147.html
http://tamilkurinji.net/news_
http://www.newindianews.com/mobiview.php?22yMM303lOI4e2DmKcb240Mdd304Ibc2mDXe43Olx0226AK3

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102703

http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=126059

http://m.vikatan.com/tiny/index.php?module=news&aid=30693




Tuesday, December 3, 2013

Madurai Law college students protest outside Aatheenam mutt

மதுரை: மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் சோலை கண்ணன். இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர். இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் அளித்த புகார் மனு: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 33 ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடி வரை கையாடல் செய்து மடத்துக்கு வர வேண்டிய வருமானத்தை அபகரித்துள்ளார். தற்போது மடத்தில் உள்ள உதவியாளர் வைஷ்ணவி, அருணகிரிநாதருடன் சேர்ந்து மோசடி செய்து வருகிறார்.மடத்துக்கு முன்னோர்கள் கொடுத்த ஆபரணங்களை வைஷ்ணவி தனது சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தி வருகிறார். ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள 200 கடைகளில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாடகைக்கு விட்டதில் மாதம் ரூ.10 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

இந்த 33 ஆண்டுகளில் இதுவரை பல நூறு கோடி வருமானத்தைப் பெற்றுள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற அனுமதி பெறாமல் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை உத்தரவு உள்ளது. அதையும் மீறி கோவையில் ரூ.55 லட்சத்துக்கு அருணகிரி நாதர் என்ற பெயரில் ஆதீனம் சொத்து வாங்கியுள்ளார்.

மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் 26-10-2012 அன்று ஒரே நாளில் இரு தவணையாக வைஷ்ணவி னீ50 லட்சம் எடுத்துள்ளார். அதிலும் மோசடி நடந்துள்ளது. இதனால், அருணகிரி நாதரை மடாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரி அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். மனு மீது விசாரணை நடந்து வருகிறது. எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மனு குறித்து துணை கமிஷனர் தமிழ்ச்சந்திரன் விசாரிக்க போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=69565
Madurai Law college students protest outside Aatheenam mutt Students of the Madurai Law College, alleging that the Madurai Aatheenam Mutt is being held under the control of Vaishnavi and family, were involved in protests outside the mutt. This created tensions in the locality, following which police were posted in large numbers to prevent mishap. There have been interesting news and hot controversy ever since the announcement that Nithyananda would be nominated as the junior Aatheenam of the Maduari aatheenam mutt. Nithyananda was removed from the post, after the mutt received flak from various organizations condemning the nomination. Meanwhile, protests have broken out alleging that the mutt is held under the control of Vaishnavi and family. A complaint of the allegation has been registered with the Madurai commissioner’s office by the Hindu People’s party. Following the complaint, the students demanding for the mutt be taken over and run by the government were involved in siege and protest outside the mutt. This created heightened tensions in the locality. Following the agitations, the police were posted in huge numbers considering the safety of the mutt. http://sathiyam.tv/english/featured/madurai-law-college-students-protest-outside-aatheenam-mutt

Wednesday, September 18, 2013

நித்தியானந்தா வழங்கும் நித்திய தர்மம்!!

நித்தியானந்தா வழங்கும் நித்திய தர்மம்!!

நித்தியானந்த   சுவாமிகளுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.., அதையெல்லாம் தாண்டி,  இப்போ..  மற்றைய  குடும்பங்களிடையே  ஏற்படும்  பிரச்சனைகளை  கேட்டு  ‘தீர்வு’  வழங்கி வருகின்றார்.  அதற்கு  பெயர்  ‘நித்திய தர்மமாம்’.  என்ன மாதிரியான  பிரச்சனைகள், என்ன மாதிரியான   தீர்வுகள்  வழங்குகிவருகிறார்  என்பதை  நீங்களும்  கொஞ்சம்  கேட்டுப்பாருங்களேன்.. (உங்களுக்கும்  இப்படிபட்ட பிரச்சனைகள்  இருக்கலாம்) - (வீடியோ இணைப்பு)

Friday, February 15, 2013

கும்பமேளாவின் யோக்கியதை இதுதான்! பட்டத்தைப் பணம் கொடுத்து வாங்கினார் நித்யானந்தா


அலகாபாத், பிப்.14- அலகாபாத்தில் நடை பெற்றுவரும் கும்ப மேளாவில் நித்தியானந் தாவுக்கு மகா மண்ட லேசுவரர் பட்டம் வழங் கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை பணம் கொடுத்து வாங்கியதாக சாதுக்களின் உயர் அமைப்பான அகாரா பரிஷத் குற்றம் சாட்டி யுள்ளது.
கும்பமேளா விழா உத்தரப்பிரதேச மாநி லம் அலகாபாத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கி யது.
பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் தியான பீடம் நடத்தி வரும் நித்தியானந்தாவும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார். திரி வேணி சங்கமம் அருகே நடந்து வரும் கும்ப மேளா விழாவில் மகா நிர்வாணி அகாரா என்ற அமைப்பு நித்தியானந் தாவுக்கு மகாமண் டலேசுவரர் என்ற பட் டத்தை வழங்கியுள்ளது. இந்த பட்டம் வழங்கிய தற்கு சாதுக்கள் மற்றும் மடாதிபதிகளின் உயர் அமைப்பான அகாரா பரிஷத் கண்டனம் தெரி வித்திருக்கிறது. மேலும் இந்த விருது வழங்கி இருப்பதில் பணப் பரி மாற்றம்-ஊழல் நடந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறது. இது பற்றி அகாரா பரிஷத் தின் தலைவர் மகந்த் ஞானதாஸ் கூறியதா வது:-
நித்தியானந்தாவுக்கு மகா மண்டலேசுவரர் விருது வழங்கி இருப்ப தில் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக் கிறது. திரிவேணி சங்க மத்தில் நடந்த விழாவில் மகா நிர்வாணி அகாரா, நித்தியானந்தாவை மகா மண்டலேசுவராக பட் டம் சூட்டி இருக்கிறது. இந்த விழாவை ஏராள மான சாதுக்கள், மடா திபதிகள் புறக்கணித் துள்ளனர். நித்தியானந் தாவுக்கு மகா மண்டலே சுவரர் பட்டம் கொடுப் பது கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக் கப்பட்டு இருந்தது.
மகா மண்டலேசுவரர் பட் டம் பெறுவது என்பது மிக நீண்ட ஆன்மிக நடவடிக்கை. ஆனால் சிலர் அதனை பணத் தால் அடைய முயற்சிக் கிறார்கள். இதுபோன்ற நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கடந்த 2010 ஆம் ஆண்டு ஹரித்துவாரில் நடை பெற்ற கும்பமேளாவில் நித்தியானந்தாவின் கூடாரம் சாதுக்களால் சேதப்படுத்தப்பட்டது.
ஆனால் அதுபோன்ற சம்பவம் இங்கு நடை பெறவில்லை. காரணம் மகா மண்டலேசுவரர் பட்டம் பணப் பரி மாற்றத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. சாதுக்கள், மடாதி பதிகள் அடங்கிய உயர் நிலைக்குழு கூட்டம் கூட்டப்படும். இந்த கூட் டத்தில் மகா மண்டலே சுவரர் பட்டத்தை முறை கேடாகப் பெற்றிருப் பது உறுதியானால் நித் தியானந்தா நீக்கப்படு வார்.
- இவ்வாறு மகந்த் ஞானதாஸ் கூறினார்.
http://www.viduthalai.in/component/content/article/42-other-news/54778-this-is-the-merit-of-kumpamela-nithyanada-purchased-with-money-title.html
மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நித்தி, வட மாநிலங்களில் செல்வாக்குள்ள அகாடாக்களில் இடம் பெற்று, மகா மண்டலேசுவரராக உருவெடுத்திருக்கிறார். இது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கும்பமேளாவிற்காக, கடந்த, 6ம் தேதி, அலகாபாத் வந்தார் நித்தியானந்தா. மறுநாளான, 7ம் தேதி, வட மாநிலங்களில் செயல்படும் துறவிகள் அமைப்பான அகாடாக்களில், முதன்மையானதும், முக்கியமானதுமான, "மகா நிர்வாணி அகாடா'வின், மகா மண்டலேசுவரர் ஒருவர், அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.அதே நாளில் தான், ஜெயேந்திரரும், நித்தியை நேரில் சந்தித்தார். இதையடுத்து, கடந்த, 12ம் தேதி, மகா மண்டலேசுவரராக, நித்தியை, மகா நிர்வாணி அகாடா அங்கீகரித்தது. ஆனால், அதற்கான சம்பிரதாய முன் அனுமதியை பெறவில்லை என்ற பேச்சு, எழுந்திருக்கிறது. அத்துடன், ரஞ்சிதா, "சிடி' விவகாரத்தில், நித்தியின் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவரை, மகா மண்டலேசுவரராக ஏற்றுக் கொண்டது எப்படி என்பதே, இப்போது எழும் வாதம்.இது தொடர்பாக, மகா நிர்வாணி அகாடாவின், அமைப்புச் செயலர், ரவீந்திர புரி கூறியதாவது:கும்பமேளாவில், தென் மாநிலங்களை சேர்ந்த துறவிகள், கணிசமான அளவில் பங்கேற்கவில்லை. நித்யானந்தா, தென் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானவை. அவற்றுக்கும், 
அகாடாவில் அவர் சேர்வதற்கும் சம்பந்தமில்லை.தென் மாநில சாதுக்களை, கும்பமேளாவில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் தான், நித்யானந்தாவை சேர்த்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆனால், "இந்த நடவடிக்கை, நியாயமானதல்ல. நியமனத்திற்கு முன், மற்ற அகாடாக்களின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும்' என, நிரஞ்சனி அகாடா என்ற மற்றொரு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த அமைப்பை சேர்ந்த ஹரிகிரி என்பவர் கூறுகையில், ""ஒருவரை மகா மண்டலேசுவரராக நியமிப்பதற்கு முன், அவரது நடத்தை, பின்னணி பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நித்யானந்தாவை எப்படி நியமித்தனர் என, தெரியவில்லை,'' என்றார்.மகா மண்டலேசுவரராக நியமிக்கப்பட்ட பின், தன், 220 சீடர்களுடன் நித்தி, நேற்று முன்தினம் காசிக்கு வந்தார். கங்கையில் படகில் சென்று, சில கட்டங்களை பார்த்து விட்டு, பின், 60 சீடர்களுடன் விசுவநாதர், அன்னபூரணி மற்றும் விசாலாட்சியை தரிசித்தார்.மதுரை ஆதினகர்த்தவாக ஆக முயன்று, சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா, வடமாநிலங்களில் காலூன்ற முதல் கட்டமாக, மகா மண்டலேசுவரராக நியமனம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

அகாடா என்றால்...?

வட மாநிலங்களில் உள்ள துறவிகள், "அகாடா' என்ற பெயரில் அமைப்புகளை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். தென் மாநிலங்களில் பல்வேறு மடங்கள் இருந்தாலும், அகாடா போன்ற அமைப்பு கிடையாது.தென் மாநில மடங்களில் எதுவும், இந்த அகாடா அமைப்பில் சேரவில்லை. இந்த அகாடாக்களில், துறவிகள் குழுவுக்கு தலைவராக இருக்கும் துறவி, மகா மண்டலேசுவரர் எனப்படுவார். இது அதிகாரமும், செல்வாக்கும் மிக்க பதவி. இதில், சைவ, வைணவ மற்றும் தனியான பிரிவாக, "உதாசீன்' என்ற பிரிவும் உள்ளது. இம்மாதிரி, மொத்தம், 13 அகாடா பிரிவுகள் உள்ளன.



நூறு பேருக்கு கிடைத்த பதவி

மகா மண்டலேசுவரராக ஒருவர் வரவேண்டும் என்றால், அவர் வேதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை, முறையாக படித்திருக்க வேண்டும். முறையான குரு பரம்பரையில், சன்னியாச தீட்சை பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக பாரம்பரியத்தில், யோக சாதனைகள் கற்றிருக்க வேண்டும்.இந்த கும்பமேளாவில், இதுவரை, 100க்கும் மேற்பட்டோர், மகா மண்டலேசுவரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கும்பமேளா போன்ற முக்கிய விழா நிகழ்ச்சிகளில், இவர்களுக்கு முதலிடம் வழங்கப்படுவது பாரம்பரியம்.கடந்த, 2007ம் ஆண்டு, நித்தியை மகா மண்டலேசுவரராக நியமிப்பதற்கான முயற்சிகள் நடந்தன.நியமனத்திற்காக அவர், 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2010 வரை அவர், அதை செலுத்தவில்லை என , கூறப்படுகிறது. 2010ல், நித்தி செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய போது, கும்பமேளாவில் இருந்தார். அகாடாக்கள் அங்கிருந்து அவரை வெளியேற்றி விட்டனர் என, கூறப்படுகிறது.-நமது சிறப்பு நிருபர்-
http://www.dinamalar.com/news_detail.asp?id=648287

Tuesday, December 18, 2012

SUN TV Saxena's Police Complaint: NO TALK of Nithyananda CD Morphing

First Published: Mon, Dec 17 2012. 06 15 PM IST

Chennai: Ayyappan R., a former Sun Pictures associate and film distributor, on Monday filed a police petition against Kalanithi Maran, promoter of Sun TV Network Ltd, alleging that he hadn’t been paid dues of Rs.35 crore. The petition was filed with the Chennai police commissioner.
Sun Pictures is the movie producing and distributing arm of Sun TV Network
“I had given Rs.400 crore cash for 19 movies to Maran,”Ayyappan said in an interview. Ayyappan distributed Sun Pictures movies in Chennai city, Madurai, South Arcot and North Arcot, and also helped the company rope in other distributors.
“The 2% commission and the 10 movies that failed out of all the movies which I had bought from Sun Pictures need to be compensated by Maran,” he said.
Ayyappan was accompanied by Hansraj Saxena, former chief operating officer of Sun Pictures, when he filed the petition.
Saxena was arrested on 4 July 2011 on cheating and intimidation charges following a case filed by a Salem-based film distributor. Two more cases were filed against him by Tamil film producers for alleged intimidation after that. Saxena was then relieved of his position in the company.
“I went to prison and am not responsible for all what happened at Sun Pictures,” Saxena said. “Let the truth come out as to what happened to Rs.400 crore.”
Maran could not be reached for comment. Calls and emails sent to his office and personal phones didn’t elicit a response.
Saxena currently produces and distributes Tamil movies through his new company, Sax Pictures.
Sun TV Network closed at Rs.407.80, up 0.83%. The benchmark Sensex dropped 0.38% to 19,244.42 points
 
http://www.livemint.com/Companies/BXuJN28WJGArBvcnJHcUlM/Former-Sun-Pictures-associate-files-petition-against-Maran.html 

Sunday, December 16, 2012

மதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி

:12/16/2012 12:24:24 AM

மதுரை: மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அறநிலையத் துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 
மதுரை ஆதீன மடம் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, ஆதீன மடம் நிர்வாகம் தொடர்பாக அருணகிரிநாதரும், நித்தியானந்தாவும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு தடை விதிக்க வேண்டும். ஆதீன மட சொத்துக்களில் அருணகிரிநாதர் மற்றும் அவரது ஆட்களால் வில்லங்கம் ஏற்படுத்த கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அருணகிரிநாதர் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், ‘ஆதீன மடத்தை அரசு ஏற்பது தொடர்பாக 1994ல் சப்-கோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 2001ல் தள்ளுபடியானது. அந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி அரசு சார்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே கோரிக்கைக்காக இந்த மனுவை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ளார். கீழ் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணை முடியும் வரையில் தற்போது அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி குருவையா விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.இந்நிலையில், அருணகிரிநாதர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், “கீழ்கோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த மனு விசாரணைக்கு தடை விதிக்க அருணகிரிநாதர் உரிமை கோர முடியாது“ என குறிப்பிட்டிருந்தார்.இதே கோர்ட்டில் அருணகிரிநாதர் மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:  இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இளைய ஆதீனமா இருந்தபோது நானும், அவரும் சேர்ந்து ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினோம்.

அதை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது நித்தியானந்தா நீக்கப்பட் டுள்ள நிலையில், அந்த அறக்கட்டளையும் கலைக்கப்பட்டு விட்டது. இதனால் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளரிடம் மனு அளித்தோம். அவர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது
.நித்யானந்தா மனு: இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவில் அறநிலையத்துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குருவையா நேற்று உத்தரவிட்டார். பின்னர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதிக்கு தள்ளி வைத்தார்.


 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=34024

Sunday, October 28, 2012

Nithyananda-Ranjitha episode in a movie?

Friday, October 26, 2012

படமாகும் நித்யானந்தா ரஞ்சிதா கதை

26 Oct 12 05:45:00 AM

 

சென்னை, அக். 26-

நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா கதையை மையமாக வைத்து கன்னடத்தில் ஏற்கனவே சத்யானந்தா என்ற பெயரில் படம் தயாரானது. இதில் நித்யானந்தா ஆசிரம நடவடிக்கைகள் டி.வி.யில் வெளியாகி பரபரப்பான படுக்கை அறை காட்சிகள், வழக்குகள் போன்றவை இடம் பெற்று இருந்தன. இந்த படத்தை எதிர்த்து நித்யானந்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றார்.

தற்போது தமிழிலும் நித்யானந்தா, ரஞ்சிதா பற்றிய படம் தயாராகிறது. இப்படத்துக்கு வெண்ணிலாவின் அரங்கேற்றம் என பெயர் வைத்துள்ளனர். ஆர்.முத்துக்குமார் இயக்குகிறார். இதில் புதுமுகங்கள் தினேஷ் நாயகனாகவும், சமஸ்தி, மிதுனாவாலியா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். நடிகைகள் சீதா, ஷகிலாவும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். நித்யானந்தா, ரஞ்சிதா கேரக்டரில் நடிப்பவர்கள் படுக்கை அறையில் அருகருகே இருப்பது போன்றும் கால்களை பிடித்து விடுவது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

நித்யானந்தா வேடத்தில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற திருநங்கை நடித்துள்ளார். ரஞ்சிதா கேரக்டரில் சமஸ்தி நடித்துள்ளார். நித்யானந்தா பற்றிய கன்னட படம் போலவே இந்த படமும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். 
 http://tamilstorys.com/index.php?page_display=31859&type=Cinema
 
 

Petition to Women's Commission - Rescue Women Trapped in Bidadi Ashram from Nithy's Spell

பிடதி ஆசிரமத்தில் உள்ள பெண்களை மீட்கக் கோரி மகளிர் ஆணையத்தில் மனு

 02:35:42,Friday2012-10-26

சென்னை : பிடதி ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை மீட்கக் கோரிய வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நித்யானந்தாவுக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த புலவர் மகாதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா பிடியில் இருக்கும் பெண்களை மீட்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் தள்ளிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து புலவர் மகாதேவன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி நித்யானந்தா மீது புகார் மனு சமர்ப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் பிடியில் ஏராளமான பெண்கள் உள்ளனர். அவர்களை வசியம் செய்து நித்யானந்தா தனது ஆசிரமத்தில் வைத்துள்ளார். அங்கு தன்னை மறந்துள்ள பெண்களை மீட்கக் கோரி நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். நித்யானந்தாவின் பிடியில் உள்ள பெண்களை மீட்க வேண்டும்.

பெண்களிடம் தந்திரி செக்ஸ் என்ற ஒப்பந்த அடிப்படையில் உறவு வைத்து கொள்ளும் முறையை கையில் எடுத்து கொண்டு பெண்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பெண்களால் அங்கிருந்து மீள முடியவில்லை. பாலியல் உறவு வைத்து கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளனர். உண்மையை கூறியிருந்தால் ஒப்பந்தத்திற்கு எந்த பெண்களும் சம்மதித்து இருக்க மாட்டார்கள். பெண்களை ஏமாற்றி மோசடி ஒப்பந்ததை நித்யானந்தா போட்டுள்ளார். பெண் களை அடிமைகளாக வைத்துள்ளார்.

இதற்கான ஆவணங்களை கர்நாடக போலீசார் வசம் உள்ளது. பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். உண்மைநிலை கண்டுபிடிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மகளிர் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி, எப்பொழுது நித்யானந்தா நேரில் ஆஜராவார் என்று கேட்டு ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.


 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28997

 

3 Truckloads of Nithyananda's Bag and Baggage Thrown Out of Madurai Adheenam

 நித்தியானந்தாவின் 'டபுள் காட்' கட்டில், பஞ்சு மெத்தையை மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பிய சிஷ்யர்கள்!

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2012, 11:09 [IST]
மதுரை: நித்தியானந்தாவை ஆதீன மடத்திலிருந்து அருணகிரிநாதர் விரட்டி விட்டதைத் தொடர்ந்து அவரது பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு 3 லாரிகளில் மடத்தை முழுமையாக காலி செய்துள்ளனர் அவர்களது ஆதரவாளர்கள்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவைப் போய் நியமித்தார் அருணகிரிநாதர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, போராட்டங்களும் வெடித்தன. ஆனால் அருணகிரிநாதர் மனம் மாறவில்லை. தொடர்ந்து நித்தியானந்தா புகழ் பாடி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு சட்ட ரீதியாக நெருக்குதல்கள் கிளம்பின. தமிழக அரசும் நெருக்க ஆரம்பித்தது. இதையடுத்து தன்னையும், தனது மடத்தையும் காத்துக் கொள்ள நித்தியானந்தாவைக் காவு கொடுத்து விட்டார் அருணகிரிநாதர். நித்தியானந்தாவை பதவியை விட்டுத் துரத்தினார். மேலும் அவரது பொருட்களை மடத்திலிருந்து தூக்கிச் சென்று விடும்படியும், தனது பொருட்களை கொடுத்து விடும்படியும் உத்தரவிட்டார். போலீஸிலும் நித்தியானந்தா தரப்பால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு புகாரையும் கொடுத்து வைத்தார்.
இதையடுத்து தலைமறைவான நித்தியானந்தா கர்நாடகாவுக்கு ஓடி விட்டார். இந்த நிலையில் ஆதீன மடத்தில் உள்ள தனது சொகுசு கட்டில், பஞ்சுமெத்தை உள்ளிட்ட பொருட்களை அள்ளிக் கொண்டு வருமாறு நித்தியானந்தா தனது சீடர்களைப் பணித்தார். அவர்களும் 3 லாரிகளைப் பிடித்துக் கொண்டு ஆதீன மடத்திற்கு புறப்பட்டு வந்தனர்.
அவர்களை முதலில் ஆதீனம் உள்ளே விடவில்லை. மேலும் விளக்குத்தூண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வர வைத்தார். அவர்களது முன்னிலையில் பொருட்களை எடுத்துச் செல்லும்படி நித்தியானந்தா ஆட்களைப் பணித்தார். அதன்படி போலீஸார் முன்னிலையில் பொருட்களை பேக்கப் செய்தனர் நித்தியானந்தா ஆட்கள். அனைத்துப் பொருட்களின் பட்டியலும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நித்தியானந்தா தரப்பினர் அள்ளிச் சென்ற பொருட்களில், அவர் பயன்படுத்தி படு ஆடம்பரமான பெரிய கட்டில் (இரண்டு பேருக்கும் மேலாக படுக்கக் கூடிய வகையில் பெரிய கட்டிலாம்), பஞ்சு மெத்தை உள்ளிட்டவையும் அடக்கமாம்.
பெண்களை மீட்கக் கோரி மனு
இதற்கிடையே, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள பெண்களை மீட்கக் கோரி மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்ற ஆணையம், நித்தியானந்தா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த புலவர் மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா பிடியில் இருக்கும் பெண்களை மீட்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் தள்ளிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து புலவர் மகாதேவன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி நித்யானந்தா மீது புகார் மனு சமர்ப்பித்தார்.
அதில், பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் பிடியில் ஏராளமான பெண்கள் உள்ளனர். அவர்களை வசியம் செய்து நித்தியானந்தா தனது ஆசிரமத்தில் வைத்துள்ளார். அங்கு தன்னை மறந்த நிலையில் உள்ள பெண்களை மீட்கக் கோரி நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். நித்தியானந்தாவின் பிடியில் உள்ள பெண்களை மீட்க வேண்டும்.
பெண்களிடம் தந்திரி செக்ஸ் என்ற ஒப்பந்த அடிப்படையில் உறவு வைத்து கொள்ளும் முறையை கையில் எடுத்து கொண்டு பெண்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பெண்களால் அங்கிருந்து மீள முடியவில்லை. பாலியல் உறவு வைத்து கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளனர். உண்மையை கூறியிருந்தால் ஒப்பந்தத்திற்கு எந்த பெண்களும் சம்மதித்து இருக்க மாட்டார்கள். பெண்களை ஏமாற்றி மோசடி ஒப்பந்ததை நித்தியானந்தா போட்டுள்ளார். பெண்களை அடிமைகளாக வைத்துள்ளார்.
இதற்கான ஆவணங்களை கர்நாடக போலீசார் வசம் உள்ளது. பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். உண்மைநிலையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மகளிர் ஆணைய தலைவர் சரஸ்வதி, எப்பொழுது நித்தியானந்தா நேரில் ஆஜராவார் என்று கேட்டு ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனால் கோர்ட்டுகளுக்கே கடுக்காய் கொடுக்கும் நித்தியானந்தா இந்த சம்மனை ஏற்று வருவாரா என்பது தெரியவில்லை.

 http://tamil.oneindia.in/news/2012/10/26/tamilnadu-supporters-take-away-nithyanatha-properties-163688.html

மதுரை ஆதீன மடத்தில் இருந்து

நித்தி பொருட்கள் வெளியேற்றம் 3 லாரிகளில் ஏற்றிச் சென்றனர்

 02:39:18.Friday2012-10-26

மதுரை : மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தா ஆடம்பர கட்டில் சொகுசு மெத்தை உள்ளிட்ட பொருட்கள் போலீசார் முன்னிலையில் மூட்டை கட்டி 3 லாரிகளில் சீடர்கள் தூக்கிச் சென்றனர். இளைய ஆதீனமாக நித்யானந்தா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பெங்களூரில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட கட்டில், சொகுசு இருக்கை மற்றும் ஆடம்பர பொருட்கள் மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டு வரப்பட்டு குவிக்கப்பட்டன. கடந்த 19,ந் தேதி நித்யானந்தாவை நீக்கப்பட்டவுடன், அவரது சீடர்களும் வெளியேற் றப்பட்டனர். ஆடம்பர பொருட்களை ஒரு வாரத்தில் எடுத்து செல்லும்படி நித்யானந்தாவுக்கு பெரிய ஆதீனம் கெடு விதித்தார்.

இதையடுத்து, பொருட்களை எடுத்து வர  சீடர்களை  மதுரைக்கு நித்யானந்தா  அனுப்பி வைத்தார். 3லாரிகளுடன் மதுரைக்கு சீடர்கள் வந்தனர்.  ஆதீன மடத்தில் மதுரை விளக்கு தூண் போலீசார் முன்னிலையில் நித்யானந்தாவின் பொருட்கள் அனைத்தும் மூட்டை கட்டி லாரிகளில் ஏற்றப்பட்டன. நித்யானந்தாவின் எந்தப் பொருளும் மடத்தில் இருக்கக் கூடாது என்று பெரிய ஆதீனம் உத்தரவிட் டிருந்தார்.  அந்த பொருட்களின் பட்டியல் விளக்கு தூண் காவல் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டது. லாரியில் பொருட்களுடன் நித்யானந்த சீடர்கள் ஏறிச் சென்றனர்.

 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=29001

Thursday, October 25, 2012

Nithyananda Absconding 5 days

 Nithyananda absconding suddenly from 21/10/2012  ???  

What happenned suddenly to this "Kalabhairava and Mahakali" ??? 


Whenever any police is searching for Nithyananda, suddenly this so-called KALABHAIRAVA AND MAHAKALI GOES INTO HIDING !!!!

 Mahakali and Kalbhairava should sue Nithyananda for insulting them by claiming to be their avatar!! LOL!!!

ಬಿಡದಿ ಶ್ರೀ ನಿತ್ಯಾನಂದ ಮಹಾತ್ಮೆ - ಕನ್ನಡ ಹಾಸ್ಯ ವೀಡಿಯೊ - ಕನ್ನಡ ಮಲ್ಲಿ ಡಾಟ್ - ಕಾಮ್ - ಬಿಡದಿ ಶ್ರೀ ನಿತ್ಯಾನಂದ ಮಹಾತ್ಮೆ - ಕನ್ನಡ ಹಾಸ್ಯ ವೀಡಿಯೊ - ಕನ್ನಡ ಮಲ್ಲಿ ಡಾಟ್ - ಕಾಮ್


Shri Nithyananda Mahatmey by Malli Sannappanavar



பிடதியில் நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டம் - அங்கிருந்தும் அவர் தலைமறைவு?

News Service மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தா டிஸ்மிஸ் செய்யப்பட்டதையடுத்து திருவண்ணாமலையில் தங்கியிருந்த அவர் பிடதி ஆசிரமம் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்றுகாலை பிடதி மடத்தில் கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம், கர்நாடக ரக்ஷண வேதிகே, கன்னட பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் பிடதி மடத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
  
ஆசி ரம வாசலில் நித்யானந்தாவின் கொடும்பாவியை கன்னட அமைப்பினர் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே, நித்யானந்தா ஆசிரமத்தில் இல்லை. தசரா பண்டிகை காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் கன்னட அமைப்பினர் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிடதி ஆசிரமத்திலும் நித்யானந்தா இல்லை என்பதால் தலைமறைவாகியுள்ள அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=68863&category=IndianNews&language=tamil

Protest against Nithyananda in Bidadi

நித்யானந்தாவிற்கு எதிராக போராட்டம்

  24 அக்டோபர் 2012 14:48

 

பெங்களூரு, அக். 24 பெங்களூருவில் பிடதி ஆசிரமம் வந்திருந்த நித் யானந்தாவிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆசிரமத் தினை விட்டு வெளியே றுமாறு போராட்டம் நடத்தினர்.

மதுரை ஆதீன மடத் தின் இளைய ஆதீனம் பதவியில் இருந்து கடந்த 18ஆம் தேதி நீக்கப்பட் டார் நித்யானந்தா. தற் போது அவர் பெங்க ளூரு பிடதி ஆசிரமத் தில் தங்கியுள்ளார். இதையறிந்த கர்நா டகா நவநிர்மாண் வேதிகா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடதி ஆசிரமத்தினை முற்று கையிட்டனர்.

பின்னர் நித்யானந்தா இங்கு இருக்கக்கூடாது உடன டியாக வெளியேற வேண் டும் எனக் கோரி ஆசிரமம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 http://www.viduthalai.in/component/content/article/35-india-news/46834-the-struggle-against-nithyanandha.html