Thursday2013-11-28
மதுரை: மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் சோலை கண்ணன். இந்து மக்கள்
கட்சியின் மாவட்டத் தலைவர். இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் சஞ்சய்
மாத்தூரிடம் அளித்த புகார் மனு: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 33
ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடி வரை கையாடல் செய்து மடத்துக்கு வர வேண்டிய
வருமானத்தை அபகரித்துள்ளார். தற்போது மடத்தில் உள்ள உதவியாளர் வைஷ்ணவி,
அருணகிரிநாதருடன் சேர்ந்து மோசடி செய்து வருகிறார்.மடத்துக்கு முன்னோர்கள்
கொடுத்த ஆபரணங்களை வைஷ்ணவி தனது சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தி
வருகிறார். ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள 200 கடைகளில் ரூ.3 ஆயிரம் முதல்
ரூ.10 ஆயிரம் வரை வாடகைக்கு விட்டதில் மாதம் ரூ.10 லட்சம் வரை வருமானம்
கிடைக்கிறது.
இந்த 33 ஆண்டுகளில் இதுவரை பல நூறு கோடி வருமானத்தைப்
பெற்றுள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற அனுமதி பெறாமல் சொத்துகளை வாங்கவோ,
விற்கவோ கூடாது என தடை உத்தரவு உள்ளது. அதையும் மீறி கோவையில் ரூ.55
லட்சத்துக்கு அருணகிரி நாதர் என்ற பெயரில் ஆதீனம் சொத்து வாங்கியுள்ளார்.
மதுரை
மத்திய கூட்டுறவு வங்கியில் 26-10-2012 அன்று ஒரே நாளில் இரு தவணையாக
வைஷ்ணவி னீ50 லட்சம் எடுத்துள்ளார். அதிலும் மோசடி நடந்துள்ளது. இதனால்,
அருணகிரி நாதரை மடாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரி அறநிலையத்துறை
ஆணையரிடம் புகார் கொடுத்தேன். மனு மீது விசாரணை நடந்து வருகிறது. எனவே,
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறியுள்ளார். மனு குறித்து துணை கமிஷனர் தமிழ்ச்சந்திரன் விசாரிக்க போலீஸ்
கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=69565
Madurai Law college students protest outside Aatheenam mutt
Students of the Madurai Law College, alleging that the Madurai Aatheenam Mutt is being held under the control of Vaishnavi and family, were involved in protests outside the mutt. This created tensions in the locality, following which police were posted in large numbers to prevent mishap.
There have been interesting news and hot controversy ever since the announcement that Nithyananda would be nominated as the junior Aatheenam of the Maduari aatheenam mutt. Nithyananda was removed from the post, after the mutt received flak from various organizations condemning the nomination.
Meanwhile, protests have broken out alleging that the mutt is held under the control of Vaishnavi and family. A complaint of the allegation has been registered with the Madurai commissioner’s office by the Hindu People’s party.
Following the complaint, the students demanding for the mutt be taken over and run by the government were involved in siege and protest outside the mutt. This created heightened tensions in the locality.
Following the agitations, the police were posted in huge numbers considering the safety of the mutt.
http://sathiyam.tv/english/featured/madurai-law-college-students-protest-outside-aatheenam-mutt
http://sathiyam.tv/english/featured/madurai-law-college-students-protest-outside-aatheenam-mutt
ReplyDelete