மதுரை ஐகோர்ட் கிளையில் இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைகண்ணன் தாக்கல்செய்த மனுவில், ‘’ மதுரை ஆதீனம் மடம் 1500 ஆண்டுகள் பழமையானது. பக்தர்கள் தங்க, நன்கொடைகள் மூலம் மடம் அருகே மண்டபம் மற்றும் அறைகள் கட்டப்பட்டன. ராஜா பாஸ்கர சேதுபதி தானமாக ஒரு பங்களாவை, ஆதீனத்திற்கு வழங்கினார்.
அதை தற்போதைய 292 வது ஆதீனம் அருணகிரிநாதர், "சிமாப்' என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டார். பங்களாவை தற்போது விடுதியாக மாற்றியுள்ளனர். மதுரை கலெக்டர் மற்றும் விளக்குத்தூண் போலீசில் புகார்செய்தேன். விசாரணை நிலுவையில் உள்ளது. மடத்தின் வரவு- செலவு கணக்குகளை, ஆதீனம் முறையாக பராமரிப்பதில்லை. இந்து மதத்தை வளர்க்க, பக்தர்கள் தரும் நன்கொடையையும், மடத்தின் நிதியையும், சுயலாபத்திற்காக ஆதீனம் பயன்படுத்துகிறார்.
மடத்திற்கு சொந்தமாக தமிழகத்தில் உள்ள சொத்துக்கள், மாத வருவாய், செலவு எவ்வளவு? அடுத்த ஆதீனமாக யாராவது அறிவிக்கப்பட்டுள்ளனரா? என்பன உட்பட 17கேள்விகளை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ், அறநிலைய இணை கமிஷனரிடம் கோரினேன். அவர், ஆதீனத்திற்கு அனுப்பினார்.
ஆதீனம், "இது பொது அதிகார அமைப்பு அல்ல. மடத்திற்கு, தகவல் உரிமைச் சட்டம் பொருந்தாது,'' என மறுத்து, அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பினார். மாநில தகவல் கமிஷனர்கள், "யூகத்தின் அடிப் படையில், திசை திருப்பும் வகையில், அதிக கேள்விகள் கேட்டு உள்ளீர்கள். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என பிப்.,13ல் உத்தரவிட்டனர்.
மாநில தகவல் ஆணையத்தில் ஆஜராகுமாறு, எனக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. மாநில தகவல் கமிஷனர்களின் உத்தரவை ரத்து செய்து, விபரங்கள் தர உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=113224

No comments:
Post a Comment