நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று, சந்நியாசி ஆனார். அவர் பெயர், மா ஆனந்தமயி என, மாற்றப்பட்டது. நித்யானந்தாவின், 37வது பிறந்த நாள் விழா, பெங்களூரு அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில், நேற்று நடந்தது. ஆசிரமத்தின், லிங்கம் அமைந்துள்ள குளத்தில் குளித்த ரஞ்சிதா, காவி உடையணிந்து, கையில், தடி ஒன்றை பிடித்தபடி, சந்நியாசம் பெறும் மந்திரங்களை ஓதினார்.
அவருக்கு, நித்யானந்தா தீட்சை அளித்து, சந்நியாசம் வழங்கினார். இனிமேல், அவர், மா ஆனந்தமயி என, அழைக்கப்படுவார் என, அப்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரஞ்சிதா பேசினார்.
"சத்யம், அஹிம்சை, ஆசை, அபரிகிரஹம், பிரம்மச்சரியம் என, ஐந்தையும் புரிந்து கொண்டுள்ளேன். சாகும் வரை, நித்யானந்தா, நித்யானந்தம், நித்யானந்தா சங்கத்திலேயே இருப்பேன்,சு என்றார்.
சந்நியாசி ஆன பிறகு, ரஞ்சிதா, மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்க
வந்திருந்த, பத்திரிகை கேமராமேன்களின் கேமராக்களை பறித்த, ஆசிரம சீடர்கள்,
நிருபர்கள் மீது, கற்களை வீசி தாக்கினர். ரஞ்சிதாவுடன், மேலும், 40 பெண்களுக்கு, நித்யானந்தா நேற்று தீட்ஷை அளித்தார்.
தேரில் ஊர்வலம் : வழக்கமாக, ஜனவரி, 1ம் தேதி, நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாடப்படும். ஆனால், நேற்று, அவர் பிறந்த நட்சத்திரம் வந்ததால், பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தேர் ஒன்றில், நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதற்காக, தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து நித்யானந்தா பக்தர்கள், வாகனங்களில் வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் தாக்கப்பட்டது மற்றும் பெண்களுக்கு தீட்ஷை அளிக்கப்பட்டதை, கஸ்தூரி கர்நாடகா வேதிகே உள்ளிட்ட, பல கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அந்த அமைப்பினர், ஆசிரம நுழைவு வாயில் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தார்வாட் அக்கம்மா தேவி அனுபவ பீடம், மாதே மகாதேவி கூறியதாவது: ரஞ்சிதா, சந்நியாசம் பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. அவரது, கடந்த கால அத்தியாயம், இன்னும் மனதில் உள்ளது. இது, விளம்பரத்துக்காக செய்யப்பட்ட நிகழ்ச்சி. பல ஆண்டு வேதங்களை பாராயணம் செய்து, பிரம்மச்சரியத்தை கடைபிடித்த பின்,
சன்னியாச தீட்ஷை பெற வேண்டும்.
பெண்களுக்கு தீட்ஷை : ஆனால், நித்யானந்தா, அவ்வாறு செய்யாமல், பெண்களுக்கு தீட்ஷை
அளித்துள்ளது, ஆன்மிகத்துக்கு எதிரானது. தீட்ஷை என்பது சமூக சேவையை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். மனதை ஒருநிலைபடுத்தியவர் மட்டுமே, சன்னியாச தீட்ஷை பெற தகுதியானவர். நித்யானந்தா, விவேகமின்றி, தானாக விரும்பி அழைத்து, அவருக்கு விருப்பமானவர்களுக்கு தீட்ஷை கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
பசவ கீதா மாதா, நாகூரு மாதா கூறியதாவது: சந்நியாசம் பெறுவதாக, ரஞ்சிதா அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர், உண்மையான சந்நியாசி ஆக முடியாது. சந்தியாசம் பெற, பல ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். மனதளவில் சந்நியாசம் பெற தயாராக இருக்க வேண்டும். அவர், சந்நியாசத்தின் அர்த்தம் புரியாதவர். இவ்வாறு, அவர் கூறினார்.
ரஞ்சிதா யார்? : நாடோடி தென்றல் என்ற, தமிழ் சினிமா படம் மூலம், தமிழ் சினிமா உலகில் அறிமுகமான ரஞ்சிதா, மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். தன் தாயுடன், கேரளா மற்றும் சென்னையில் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் காணப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரஞ்சிதா - நித்யானந்தா, ஆபாச, சிடி காட்சிகள், டிவி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=883003
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=113709
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=73397
http://sathiyam.tv/tamil/
http://tamil.yahoo.com/

இனி என்ன ஜல்சா தான் . நீங்கல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டீங்களா ?
ReplyDeleteஅப்படி என்றால் அவர் இனிமேல் மா.ஆனந்த மயன் என்று அழைக்கபடுவாரா?
ReplyDeleteஎன்னடா நடக்குது இங்கே மக்களை முட்டாள் ஆக்கும் இவர்களின் கூத்துக்கு அளவே கிடையாதா ? இவன புடிச்சி உள்ள போட எவனுக்காவது தில் இருக்கா பாரேன் ,?
ReplyDeleteநித்யானந்தாவை நம்பியும் ஒரு கூட்டம் கூடுதே...என்ன உலகமடா...
ReplyDeleteஇவன சொல்லி குற்றமில்ல இவன் பின்னாடியே ஒரு பக்தகேடி கூட்டம் போகுதே அவனுகள திருத்தணும்.
ReplyDeleteபோலி சாமியார்கள் விளம்பரம் வேண்டுமென்றால், லட்சங்கள் செலவு செய்து சில நடிகைகளை வைத்துகொண்டு வியாபாரம் செய்கின்றனர். ஆன்மீகத்தின் மதிப்பே போய்விடும் போல் உள்ளது இந்த மாதிரி சாமியார்கள் மூலம்.
ReplyDeleteகலி காலம் என்பது இதுதான். இக்காலத்தில் தான் போலி சாமியார்கள் காவி உடுத்தி , எல்லா அநியாயங்களும் செய்வார்கள். இதை தமிழ் சைவ மடாதிபதிகளும் கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள். காலத்தின் கொடுமை .
ReplyDeleteசாமியாரை முறைப்படி திருமணம் செய்து வாழ முடியாது. தவிர சாமி முகமூடியை கழற்றி விட்டு ஆசாமியாகிப் போனால் கோடிக் கணக்காண பணமும் சொத்தும் அனுபவிக்க முடியாமல் போய் விடும். அதற்காக பெண்ணையும் சாமியாராக மாற்றி விட்டால் வேலை சுலபமாகி விடும். ரெண்டு பேரும் அரியாசணத்தில் அமர்ந்திருக்க மண்டி போட்டு வணங்கும் கும்பலும் கூடி விடும். சினிமாவையே மிஞ்சி விடும் வாழ்க்கை. கண்டதெல்லாம் கடவுள் என்று வழிபடும் வழி கேடர்கள் நிறைந்த உலகத்தில் காலம் கடக்க இவையெல்லாம் மறக்கப் பட்டு கோவில் கட்டி கும்பிடப் படலாம்.
ReplyDeleteஅசுத்தம் பிடித்த மனிதர்கள். இப்படிப்பட்டவர்களையும் நம்பும் மடையர்கள். பக்தி கிறுக்கு பிடித்தவர்கள். என்று திருந்துவார்களோ. நடந்த அனைத்தையும் பார்த்தும் கேட்டும் திருந்தாத கிறுக்கர்கள்.
ReplyDeleteநமது இந்தியத் திரு நாட்டில் இதும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும்!
ReplyDeleteதற்போது ஆன்மிகமும் வியாபாரமாகி விட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உண்மையான பிரம்மாச்சர்யம் என்பது எப்போதும் கடவுளையே நினைத்து இருக்க வேண்டும். இல்லற வாழ்கையில் இருக்க கூடாது. ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையினை வாழ கூடாது. சாதாரணமாகவே உண்ண வேண்டும். பசிக்கு மட்டும் தான் உண்ண வேண்டும். ருசிக்கு உண்ண கூடாது. தற்போது ஆடம்பரம் தனி மனித புராணம் போன்றவை அரசியல் போல ஆன்மிகத்திலும் இடம் பெற்று விட்டது உண்மையான ஆன்மிக வாதிகளுக்கு மன வருத்தம் கொடுக்கும்.
ReplyDeleteஇந்த ஆள் அடங்க மாட்டார் போல,,சாமியார்கள் இல்லற வாழ்க்கையை சட்டப்படி அனுபவிக்க இப்படி ஒரு வழி உள்ளதா? அனுபவி ராஜா, அனுபவி. சாமியார்கள் என்ன செய்தாலும் ஙேன்னு வாயைப் பொளக்கிற கூட்டம் இருக்கும் வரை உங்களுக்கு வாழ்வுதா.
ReplyDeleteஇனி இரண்டு சன்னியாசிகளும் இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,என்னப்பா நடக்குது இங்கே !!!!! இதை கேட்க யாருமே இல்லையா??? நம்ம எல்லோரும் ரொம்ப நல்ல வருவோம்... அடுத்தது யாரு...சன்னி லியோன் ??!!!!! மகா ஆனந்த்ம்...சூப்பர் நேம் ......ஹஹஆஹா..
ReplyDeleteEaanda Punithamana mathatha kevala paduthreenga :). Atharku pesama kalyanam seithu neermyaga valalaam,
ReplyDeleteno one required to wipe out Hinduism,these kind of people
ReplyDeleteபிரம்மச்சாரியமா ??? அதான் கல்யாணம் ஆகி எல்லாம் முடுஞ்சிருச்சே... இனி வயசுக்கு வந்த என்ன வராட்டி என்ன ?
ReplyDeleteமுழுமையான பிரம்மசாரியா..? நித்தி இதெல்லாம் உண்மையா..? பொய்யா..?அட..கொக்கா மக்கா...அப்படியே ... சேர்ந்து அந்த கட்சிக்கு பிரச்சாரம் பண்ணும்மா..நாளைக்கு உன்ன மந்திரியா கூட ஆக்கிடுவாங்க. உன்ன மாதிரி ஆட்களுக்கு பிரச்சினை என்றால் உடனே குரல் கொடுக்கும் கட்சி அது. அங்கேயே செட்டில் ஆனா சட்டசபையில் நீல படம் பார்த்தவுங்க எல்லாம் அந்த கட்சில தான் இருக்கார்கள். உன்னை மனம் உவந்து ஆதரிப்பார்கள்.
ReplyDeleteகலி முத்திடுச்சு,ஒரே ஈஸ்வரன் என்ற ஒரே கடவுள் மந்திரம் என்ற இந்து மதம் இன்று பலரால் கடவுளின் அவதாரமாக ஆக்கிக்கொண்டு வாழும் நிலைக்கு வந்துவிட்டது.. கடவுளின் அவதாரம் என்றார்.. உண்ணுதல் பருகுதல் கழிவில்லாமை நோய்கள் இல்லாமலாவது இருக்கவேண்டும்.மரணத்தை விட்டுவிடுங்கள்.. ஆசைகள் ,ஆடம்பரங்கள்.. எல்லைமீறி போய்விட்டது.. பிறக்கு எப்படி தி,க. போன்றவர்கள் சும்மா இருப்பார்கள்.. மனிதர்கள் கடவுளாக மதிப்பதை ஒருவருக்கொருவர் தடுக்க முடியாது.. தடுக்கவும் கூடாது... மனிதர்களுக்கு பகுத்தறிவு இருந்தும் பகுத்தறிவை உணராமல்,அதன் பலன் இல்லாமல் இருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.ஆனந்தமாய் நித்யமும் ஆனந்தாமாயி இருவரும் இன்று போல் என்றும் வாழ்க......சுவர்க்கம் இருப்பது எங்கே அது இங்கே ,,,,என்று நித்யானந்தர் இனிமேல் எந்நாளும் பாடலாம் ....இறைவனை பாடுவதற்கு பதிலாக .
ReplyDeleteஇந்து மதத்தையும், கோட்பாடுகளையும், இந்து மக்களின் நம்பிக்கைகளையும் கேவலபடுத்தி வரும், இந்த நித்யனந்தாவை தண்டிக்கவே முடியாதா? நிச்சயமாக இவன் மரணதண்டனைக்கு தகுதியானவன். அரபு நாடுகளில் வழக்கத்தில் உள்ள கல்லால் அடித்து கொள்ளும் நிகழ்வு இவனுக்கு கொடுக்கப்பட வேண்டும்
ReplyDeleteபோகம் முழுதும் அனுபவித்த பின் சந்நியாசி ஆனால் என்ன ஆகாவிட்டால் என்ன ? மானமே போனபின் ஆடையே எதற்கு ?காவி ஆடையையும் சேர்த்துத்தான்
ReplyDeleteஇனி ரொம்ப ஆனந்தமாக இருக்கலாம்,மண்ணாந்தை ...................கவலைப்படாதே ...............ஏதாவது பிரச்சனையை என்றால் "மகாமா அமிர்தானந்தமயி"என்று மாற்றிவிடுவார்கள். இதெல்லாம் மதுரை தொடர்பான எதிர்காலப் பிரச்சனையை சமாளிப்பதற்காகத்தான். இத்தனை கேஸ் போட்டும் பல அலம்பல்களை வெளிப்படுத்தியும் இவன் பீடம் அமைக்கிறான் என்றால்............இவனுக்கு துணை நிற்கும் ஊழல் வாதிகள் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். மக்கள் எல்லாம் மொத்தமாகத்திரண்டு கூண்டோடு கீசக வதம் செய்தாலன்றி இவனைப் போன்றவர்கள் தோன்றாமல் இருக்க மாட்டார்கள். இனிமேல் அங்கங்கு இதுபோன்று மாயிக்கள் தோன்றி மற்றவர்களுக்கு நிரந்தர சுரங்கமாக இருப்பார்கள்.
ReplyDeleteநடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று, சந்நியாசி ஆனார்////.தந்தை பெரியார் கூட இந்த அலவுக்கு சாமிகளை கேவல படுத்தியது இல்லை கடவுல் இல்லை என்பதர்க்கு இதை விட ஒரு சாட்சி வேண்டுமா ?
ReplyDeleteபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். நல்ல "சன்யாசிகள்". "வாழ்க புது "சந்நியாசி". கேலிக்கூத்து. ஆன்மிகத்தை கிள்ளுகீரையாக நினைக்கிறார்கள்,இவங்க காமடிக்கு அளவே இல்லை
ReplyDeleteஒரு பெரிய நடிகை பட்டாளமே வரப்போகுதாம்... தமன்ன கூட எப்போ எப்போ என்று இருக்கிறாராம். தொடர்ந்து நமீதா,கூட அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாராம்... ஆயிண்ட்மெண்ட் ரெடியானவுடன் அழைப்பு வருமாம்...
ReplyDeleteசினிமாவில் வேஷம் போடுகிறவர்களுக்கும் இவர்களுக்கு அதிகமாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. இவர்கள் செய்யும் வினைக்கு பலனுண்டு. இவர்களை போன்றவர்கள் செய்யும் செயலை மதத்தின் பெயரால் அன்றி தானே விருப்பப்பட்டு செய்தால் யாரும் தடுக்கப்போவது இல்லை. ஆனால் மதத்தின் பெயரால் இது போன்று செய்வது விஷமத்தனம் மட்டுமல்லாது, அறியாமையும் கூட. குருவிடம் நேரடியாக தீட்ஷதை பெறுவது ஒரு உயரிய சடங்கு அதற்கு நம்மை தாயார்படுத்திக் கொள்ளவே வெகு காலம் ஆகும். இது போல் இன்ஸ்டன்ட் விஷயமெல்லாம் ஆன்மீகத்தில் உண்டா? கலி காலம். இவர் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊருக்கு வந்து இருந்தார் அப்பொழுது இவ்வளவு பிரபலம் இல்லை. இது மாதிரி செட் அப் உண்டு , அதை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்தார். எனக்கும் தீட்ஷதை வழங்கினார். ஆன்மீகம் என்றால் மனிதன் மாறுவது. நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக மாறுவது. அல்லும் பகலும் அதே சிந்தனையில் உறைவது. ஊன் உறக்கமின்றி அதே நினைவாக இருந்து அதுவாகவே மாறுவது. பாம்பு தன்மீது ஊர்ந்தாலும் உணராமல் எதை நினைத்தோமோ அதில் மெய்மறந்து இருப்பது. மெதுவாக இந்த மாயையை விட்டு விலகுவது. சாமியாரை மட்டும் போலி சாமியார் என்று கூறுகிறார்கள் ஏன்?. மற்றவற்றில் வேஷம் போட்டு ஏமாற்றி விடலாம் இதில் அது முடியாது. வேஷம் தானாகவே கலைந்து விடும். சரி இதுவும் மாயாவின் லீலை என்று ஏற்றுக்கொள்வோம்
ReplyDeleteஇனிமேல் பொதுமக்கள் ஆனந்த லீலைகளை திருட்டு விசிடியில் பார்க்காமல் ..ஆசிரமத்தில் விற்கும் ஒரிஜினல் விசிடிகளை வாங்கி ஆன்மீக ஆராட்சி நுட்பங்களை தெரிந்து தெளியுமாறு கேட்டு கொள்கிறோம் ...ஆசிரமத்தை தவிர வேறெங்கும் வாங்கும் சிடிகளுக்கு நிர்வாகம் பொறுப்பு ஆகாது ..
ReplyDeleteஎது எப்படியானால் ஏன்னா தொரெ, இனமே ஆஸ்ரமம், கூட்டம் எல்லாம் ஜில்லுனு இருக்கும்பா. அத்த சொல்லுவியா.
ReplyDelete