Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Showing posts with label மதுரைஆதீனம். Show all posts
Showing posts with label மதுரைஆதீனம். Show all posts
Tuesday, December 3, 2013
How MindControl (in a cult) Works!
Labels:
ashram,
Cult,
Godmen,
LeninKaruppan,
rape victim,
Victim,
Women Complaint,
நித்தியானந்தா,
மதுரைஆதீனம்,
ನಿತ್ಯಾನಂದ
Madurai Law college students protest outside Aatheenam mutt
Thursday2013-11-28
இந்த 33 ஆண்டுகளில் இதுவரை பல நூறு கோடி வருமானத்தைப் பெற்றுள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற அனுமதி பெறாமல் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை உத்தரவு உள்ளது. அதையும் மீறி கோவையில் ரூ.55 லட்சத்துக்கு அருணகிரி நாதர் என்ற பெயரில் ஆதீனம் சொத்து வாங்கியுள்ளார்.
மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் 26-10-2012 அன்று ஒரே நாளில் இரு தவணையாக வைஷ்ணவி னீ50 லட்சம் எடுத்துள்ளார். அதிலும் மோசடி நடந்துள்ளது. இதனால், அருணகிரி நாதரை மடாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரி அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். மனு மீது விசாரணை நடந்து வருகிறது. எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மனு குறித்து துணை கமிஷனர் தமிழ்ச்சந்திரன் விசாரிக்க போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=69565
Wednesday, July 3, 2013
Nithyananda's Secret camp at Karaikudi TN !!!
Labels:
Arthi Rao,
Nithyananda,
Swami Nithyananda,
TAMILNADU,
நக்கீரன்,
நித்யானந்தா,
மதுரைஆதீனம்,
ನಿತ್ಯಾನಂದ
Saturday, June 8, 2013
அமெரிக்க வழக்குகளை உடைத்த ஆர்த்தி ! விடாது துரத்தும் நித்தி...
Labels:
Aarthi Rao,
GODMAN,
Inner awakening,
Lenin Karuppan,
news,
Nithiyananda,
sex swamy,
நித்தியானந்தா,
மதுரைஆதீனம்,
ನಿತ್ಯಾನಂದ
Friday, June 7, 2013
என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 6
எல்லாத் தவறுகளையும் நிவர்த்தி செய்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் மதுரை ஆதீனம். ஆனால், அவரது பதவிக்கு வேட்டு வைப்பதற்கான நடவடிக்கையில் சிலர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான நித்தியோ குஜாலாக இருக்கிறார்.
வழக்குகள்:
மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆரம்பத்தில் நிறைய வழக்குகள் தாக்கல் ஆனாலும் கூட, இப்போது 3 வழக்குகள் தான் நிலுவையில் இருக்கின்றன.
1. "நித்தியானந்தாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மீனாட்சிப்பிள்ளைகள் அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு.
2. "அருணகிரிநாதர் இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன்னுடைய சுயலாபத்துக்காக ஆதீனச் சொத்துக்களை விற்று இருக்கிறார். ஆதீனத்தின் நிதியையும் சுயவிளம்பரத்துக்காக செலவு செய்திருக்கிறார். அதனால், அவரை ஆதீனப் பொறுப்பில் இருந்து விடுவித்து மடத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்" - என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு.
3. "மதுரை ஆதீனத்திற்குள் செல்லவும், பூஜைகள் செய்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும்" என்று நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு.
இவை அனைத்துமே மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தான் விசாணையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் மீதான விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. வாய்தா...வாய்தா... என்று போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்குகள் போதாது என்று, "நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழையக் கூடாது" என்று மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கும் இதே கோர்ட்டில் தான் விசாரணையில் இருக்கிறது. கடைசியாக கடந்த 3ம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதன் மீதான விசாரணையை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.
ஜெயலலிதாவுக்கு ஐஸ்:
தனக்கு எதிரான 3 வழக்குகளில் ஆதீனம் மிகவும் பயப்படுவது, இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கைப் பார்த்துத் தான். "அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. ஆதீனச் சொத்து, நிதி தொடர்பான விஷயங்களில் சந்நிதானத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது" என்று அவர் தாக்கல் செய்த மனுவை ஆரம்பத்திலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆக, அரசாங்கத்தை ஐஸ் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஆதீனம்.
ஏற்கெனவே, முதல்வர் ஜெயலலிதாவை 'நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம்', 'தங்கத்தாரகை' என்று வார்த்தைக்கு வார்த்தை புகழும் ஆதீனம், இப்போது அம்மாவின் ஒவ்வொரு திட்டத்தையும் வரவேற்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கும் ஜெயலலிதாவின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தமிழறிஞர்களே கூட அதை எதிர்த்தார்கள். ஆனால், ஆதீனமோ "ஆகா... அற்புதம்" என்று புகழ்ந்தார். 2 நாட்களுக்கு முன்பு அம்மா உணவகம் திறக்கப்பட்டதைப் பாராட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் போல, "வாழ்நாளெல்லாம் போதாதே அம்மாவின் புகழ் பாட... வளர்க அம்மாவின் உணவகங்கள்" என்று நெக்குறுகி இருந்தார்.
துரிதப்படுத்தும் அமைப்புகள்:
இதுபற்றி மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபனிடம் கேட்டோம். "மதுரை ஆதீனத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் இன்னமும் உறுதியாக இருக்கிறோம். 1994ல் தன்னுடைய சொந்த அத்தை மகன் சுவாமிநாதனை இளைய ஆதீனமாக நியமித்தார் அருணகிரி. பிறகு, பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு எந்தத் தகுதியுமே இல்லாத நித்தியை நியமித்தார். சமீபத்தில் ஒரு சாதித்தலைவரை, அதுவும் கொடும் குற்றப்பின்னணி கொண்டவரை மடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இப்போது வைஸ்ணவி குடும்பத்தினருக்கு வாரி வழங்குகிறார். வைஸ்ணவி நிச்சயதார்த்தத்தின் போது, அருணகிரிநாதர் கொடுத்த 5 லட்சம் யாருடைய பணம்? மடத்தின் வருமானத்தை நற்காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் இப்படி ஆசைப்பட்டவர்களுக்கு எல்லாம் வாரி இறைப்பதன் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்று நிரூபித்திருக்கிறார். எனவே ஆதீன மடத்தை அவரது பிடியில் இருந்து மீட்பதற்காக இந்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அதற்கு அரசும், அறநிலையத்துறையும் உதவ வேண்டும். தன்னைப் புகழந்து ஆதீனம் வாரந்தோறும் வெளியிடும் அறிக்கைகளை நம்பி முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் ஏமாற மாட்டார் என்று நம்புகிறோம்" என்றார்.

இதே மனநிலையில் தான் அவருக்கு எதிரான மற்ற அமைப்புகளும் இருக்கின்றன. நேற்று (5ம் தேதி) கூட மதுரை ஆதீனத்திற்கு எதிரான மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த போஸ்டரில் வைஸ்ணவிக்கும், ஆதீனத்துக்கும் என்ன உறவு? என்று கேட்டிருக்கிறார்கள் மாணவர்கள்.
என்ன செய்கிறார் ஆதீனம்?
இதுபற்றி ஆதீனத் தரப்பில் பேசினோம். "மதுரை ஆதீனத்தில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் தினமும் 3 வேளை பூஜை செய்கிறார் சந்நிதானம். பகல் 11.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதற்காக ஒடுக்கத்தில் காத்திருக்கிறார். பிரச்னைக்கு உரியவர்களையும், பத்திரிகையாளர்களையும் தவிர வேறு யார் வந்தாலும் சந்திக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்ட தம்பிரான் சுவாமி, அவருக்குத் தேவையான பணிவிடைகள் எல்லாவற்றையும் செய்கிறார்.
தருமை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், குன்றக்குடி ஆதீனம் ஆகியோருடனான நட்பை புதுப்பித்திருக்கிறார். மதுரை ஆதீனத்தில் நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜையின் நிறைவாக கடந்த 31ம் தேதி கூட அவர் திருவாடுதுறை, தருமை ஆதீனங்களுக்குச் சென்றார். செய்த தவறுகளை எல்லாம் அவர் உணர்ந்துவிட்டார். சிவ பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறார்" என்கிறார்கள்.
"வைஸ்ணவி ஆதீனப்பணிகளை தொடர்வது உண்மைதான். ஆனால், அவருக்கும், சந்நிதானத்துக்கும் தந்தை- மகள் உறவு தான் இருக்கிறது. அவரது தங்கை கஸ்தூரியும் கூட எல்லா நாட்களும் இங்கே தங்கி இருப்பதில்லை. அவர் கும்பகோணத்தில், எம்.எஸ்சி. ஐ.டி. படித்துக் கொண்டிருக்கிறார்" என்கிறார்கள்.
நித்தியானந்தா என்ன செய்கிறார்?
நித்தியானந்தாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. பாதிக்கப்பட்டது அவர் இல்லையே? இழந்த மதுரை ஆதீனப்பதவிக்குப் பதிலான வடநாட்டுச் சாமியார்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து 'மகாமண்டலேஸ்வரர்' பதவியைப் பெற்றுவிட்டார் நித்தி. இது மாவட்ட செயலாளர் பதவி போலத் தானாம். இந்தியாவில் மட்டும் நாற்பது, ஐம்பது 'மண்டலேஸ்வரர்கள்' இருக்கிறார்கள். தன் பெயரிலேயே (நித்தியானந்தா) ஒரு 'மண்டலேஸ்வரர்' மகாராஷ்டிராவில் இருப்பது நித்திக்கு தாமதமாகத் தான் தெரியுமாம்.
இதனால், உலகம் முழுக்க இருக்கும் தனது பக்தர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மட்டுமே இப்போது முழு மூச்சாகச் செய்து கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. 'இன்னர் அவேக்னஸ்' என்ற பயிற்சி தான் அவருக்கு வருமானம் கொழிக்கும் தொழில். அதை சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். பிடதி ஆசிரமம், ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் என்று ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் பயிற்சி நடக்கிறது. தற்போது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால், சிறுவர்கள் கூட மொட்டையும், கொட்டையுமாக வந்து அவரிடம் பயிற்சி பெறுகிறார்கள்.
ஃபிரஷ் சீடர்கள்:
நித்தியானந்தாவின் சீடர்களாக இப்போதும், டாக்டர், என்ஜினீயர், கணினி வல்லுனர்கள் என்று புதிதாக நிறைய இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு பாத பூஜை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சின்னஞ்சிறு பையன்கள் எல்லாம் நித்தியின் காலணிகளுக்கு பூஜை செய்யும் காட்சியை அவரது இணைய தளத்தில் காண முடிகிறது. தினமும் காலையில் அருளாசி வழங்கும் நித்தி, அதன் வீடியோ காட்சியை அன்றைய தினமே இணையத்தில் பதிவேற்றம் செய்கிறார். (அவரது லேட்டஸ்ட் வீடியோவைப் பார்க்க இதைச் சொடுக்கவும்:
http://www.youtube.com/watch?v=TS6VadZUeeo&feature=player_embedded#! )
இதைப் போலவே அவரது அன்றாட ஆன்மீகப் பணிகள் பற்றிய புகைப்படங்கள் குறைந்தது பத்தாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்தப் படங்களைப் பார்க்கும் போது, இவ்வளவு திறமையான புகைப்படக் கலைஞர்கள் இவரிடம் போய் சிக்கியிருக்கிறார்களே என்று தோன்றுகிறது. சில தனியார் டி.வி.களிலும், தனது பிரத்யேக டி.வி. சேனல், ரேடியோ, இ-மேகஸின் போன்றவற்றிலும் இடைவிடாது அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் நித்தி. நீண்ட காலம் வாழ்வது எப்படி? இளமையை நீட்டிப்பது எப்படி? ஜீவமுக்தி பெறுவது எப்படி என்று இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் பேசுகிறார்.
பெண்களிடம் 'தாந்திரிக செக்ஸ் காண்ட்ராக்ட்' செய்தது சர்ச்சை ஆனதால், அதை மாற்றி அமைத்திருக்கிறாராம் நித்தி. அதில் கையெழுத்திட்டுவிட்டு, 16, 18 வயது பெண்கள் எல்லாம் அவருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு பெண்களுக்கு அவர் ஜீவமுக்தி வழங்கும் காட்சிகள் புகைப்படமாக பதிவேற்றப்பட்டது. இப்போது ஆண்கள் படத்தை மட்டுமே பதிவிடுகின்றனர். நித்தி பெண்களுடன் இருக்கும் போட்டோவை தரவிறக்கம் செய்து, பத்திரிகைகள் மிஸ்யூஸ் செய்துவிடுவதால் தான் இந்த நடவடிக்கை என்று சொல்கிறார்கள் நித்தியின் சீடர்கள்.

தவிடு பொடியான வழக்குகள்:
நித்தி-ரஞ்சிதா படுக்கைக் காட்சிகளை வீடியோ எடுத்தவர் வினய் பரத்வாஜ். தன்னை ஹோமோசெக்ஸுக்குக் கட்டாயப்படுத்தியதாக நித்தி மீது பரபரப்பு புகார் கூறியவரும் இவரே. நித்தியின் பிரதான எதிரியான இவர், தற்போது சிறையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் நித்தி ஆதரவாளர்கள். அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வினய் பரத்வாஜுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 57 மாதம் (சுமார் நான்கரை ஆண்டு) சிறை தண்டனை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தன் மற்றொரு எதிரியான லெனின் கருப்பன் மீது, ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய பெண் சீடர் ஒருவர் மூலம் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கொடுத்திருந்தார் நித்தி. அந்த வழக்கை போலீஸார் பதிவு செய்யவில்லை. தற்போது கோர்ட் மூலம் லெனின் கருப்பன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பெற்றிருக்கிறார் நித்தி. இதேபோல ஆர்த்தி ராவை மிரட்டும் நடவடிக்கையிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள் நித்தியின் வழக்கறிஞர்கள்.
நித்தியானந்தா தன்னைத் தாக்கியதாக கர்நாடக செய்திச் சேனல் சுவர்ணா டி.வி. நிருபர் அஜித் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடகா நவ நிர்மாண் என்ற அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் நித்தி மீது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறாராம் நித்தி. தன் பண பலத்தால் தன் மீதான வழக்குகள் பலவற்றை நித்தி உடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
மதுரைக்கு வருகிறார் நித்தி!
இந்தக் கொடுமைகளுக்கு மத்தியில், நித்தியானந்தா மீண்டும் மதுரைக்கு வர இருப்பதாக அவரது சீடர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "மதுரை ஆதீனப் பதவிக்காக அவர் வர மாட்டார். வரவும் விரும்பவில்லை. தன்னை எதிர்த்து, விரட்டியடித்தவர்கள் மத்தியில் எதையாவது செய்ய வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருக்கிறது. எனவே, அழகர்கோவில் அல்லது திருப்பரங்குன்றம் போன்ற ஊர்களில் ஒன்றில் தனது நித்யானந்தா தியான பீடத்தின் கிளையை அமைக்கவிருக்கிறார்" என்கிறார்கள்.
ஆக, ஆதீனம் ஓய்ந்துவிட்டார். மீண்டும் அடிவாங்குவதற்குத் தயாராகி வருகிறார் நித்தியானந்தா!
(தொடர் நிறைவடைந்தது)

Wednesday, June 5, 2013
என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 5
நித்தியை பதவியில் இருந்து நீக்கிய பிறகும் கூட ஆதீனத்திற்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவசர அவசரமாக சில கடமைகளைச் செய்து முடித்தவர், இப்போது வெப்சைட் ஒன்றை புதிதாக தொடங்கியிருக்கிறார்.
கிரீடமும், செங்கோலும் யாருக்கு?
தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மதுரை ஆதீனத்தை அரசே எடுத்துக் கொள்வதை தடுப்பதற்காகவும் 2012 அக்டோபர் 19 ஆம் தேதி, நித்தியானந்தாவை அவசரமாக பதவியில் இருந்து நீக்கினார் மதுரை ஆதீனம். கோர்ட்டை ஏமாற்றுவதற்காகவே இந்த நாடகம் என்று சர்ச்சை எழுந்ததால், அப்படி இல்லை என்று காட்டுவதற்காக, நித்தியின் ஆட்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீஸில் கொடுத்தார் ஆதீனம்.
பிறகு, நித்தி கொடுத்த பரிசுப் பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்லவும் ஆணையிட்டார் அதன்படி அனைத்துப் பொருட்களையும் லாரி, லாரியாக பிடதிக்கு எடுத்துச் சென்றனர் நித்தியின் ஆட்கள். ஆனால், தங்கக் கிரீடம், செங்கோல் போன்றவற்றைக் கொடுக்க ஆதீனம் மறுத்துவிட்டார். தன் கனகாபிஷேகத்திற்காக வாங்கப்பட்ட 169 கிராம் தங்கக் காசுகளை, நித்தியின் ஆட்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவற்றை திரும்ப ஒப்படைத்தால்தான் கிரீடத்தையும், செங்கோலையும் கொடுப்பேன் என்று அடம்பிடித்தார் ஆதீனம். கடைசியில் தங்கக் காசுகளைக் கொடுத்து, கிரீடத்தையும், செங்கோலையும் மீட்டுச் சென்றார்கள் நித்தியின் ஆட்கள்.
வைஸ்ணவி திருமணம்
நித்தியால் ஏற்பட்ட கறையைத் துடைத்துவிட்டதாகக் கருதிய ஆதீனம், அடுத்ததாக தன் முதன்மைச் செயலாளரும், பிரதான பெண் சீடருமான வைஸ்ணவிக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 16.5.12 அன்று வைஸ்ணவிக்கும், அவரது

சில மாதங்களுக்குப் பிறகு, வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலத்தில் மாப்பிள்ளை இல்லத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் ஆதீனம். நிச்சயதார்த்தத்தின்போது தான் பணம் கொடுத்த விவகாரம் சர்ச்சையானதால், திருமணத்தின் போது எந்தப் பரிசுப் பொருளையும் கொடுக்கவில்லை ஆதீனம். ஆனால், அவர்களுக்கான பரிசுப் பொருட்கள் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டன.
புதிய வாரிசு நியமனம்
நித்தியை பதவியில் இருந்து தூக்கிய சில நாட்களிலேயே, தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் அருணகிரிநாதர். "திருவாடுதுறை ஆதீனத்தில் தம்பிரான் சுவாமிகளாக இருந்து பூஜை பணிவிடைகள் செய்துவந்த ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் சீடராக நியமித்துள்ளோம். இவர் மதுரை ஆதீனத்தின் தம்பிரானாக இருந்து பூஜை, பணிவிடைகள், சமயப்பணிகளை ஆற்றுவார். அவருக்கு இப்போது 36 வயதாகிறது. பால் பதனிடும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றிருக்கிறார்" என்று அறிவித்தார் ஆதீனம். அவரது இந்த அறிவிப்பின் போது, வைஸ்ணவியும் (அப்போது அவருக்கு நிச்சயம் ஆகியிருந்தது), அவரது தங்கை கஸ்தூரியும் உடனிருந்தார்கள்.
மதுரை ஆதீன வரலாற்றில் இதுவரையில் யாரும் தம்பிரானாக நியமிக்கப்பட்டது கிடையாது. இளைய ஆதீனமாக 2004ல் சுவாமிநாதன் என்பவரும், 2012ல் நித்தியானந்தாவும் நியமிக்கப்பட்டு பின்னர் ஓராண்டுக்குள் நீக்கப்பட்டார்கள். புதிய தம்பிரானின் இயற்பெயர் செந்தில்நாதன். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவரான இவர், தாய், தந்தை இருவரையும் இழந்தவர்.
மதுரையில் குடியேறிய வைஸ்ணவி
இதைத் தொடர்ந்து ஆதீனத்தின் வேண்டுகோளை ஏற்று, மார்ச் மாத இறுதியில் தன் கணவர் வேதமூர்த்தியுடன் மதுரை ஆதீனத்திலேயே குடியேறினார் வைஸ்ணவி. தற்போது அவர்களுக்கு மதுரையிலேயே வீடு பார்த்துக் கொடுத்து, கிரகப்பிரவேசத்துக்கும் நேரில் ஆசீர்வாதம் கொடுத்தார் ஆதீனம். இருப்பினும் வைஸ்ணவியும் பொறுப்புகள் பாதியாக குறைக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கள் அவரது தங்கை கஸ்தூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெப்சைட் தொடங்கிய ஆதீனம்
நித்தி வந்து போனதன் பாதிப்பு காரணமாக, மதுரை ஆதீனம் இப்போது ஹைடெக் மனிதராகி இருக்கிறார். லேப் டாப் பயன்படுத்துகிறார். தனக்கென்று கடந்த மாதம் மதுரை ஆதீனம்.காம் (maduraiaadheenam.com) என்ற வெப்சைட்டை ஆரம்பித்தார். அதில், இணையதள வரவேற்பு வீடியோ, மதுரை ஆதீன வரலாறு முதல் சமீபத்திய சாதனைகள் வரை பட்டியலிட்டுள்ள அருணகிரிநாதர், பக்தர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளவும் ஒரு வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதன் மூலம் அவருக்கு செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தால், அவரது அருளாசி கிடைக்குமாம். சில
நேரங்களில், உங்கள் மெயில் ஐ.டி.க்கு பதிலும் தருவார். தமிழகத்தில் எந்த சைவ மடாலயத்திலும் இல்லாத நவீன வசதியை மதுரை ஆதீனத்தில் ஏற்படுத்தியிருப்பதாகப் பெருமிதத்துடன் சொல்கிறார் ஆதீனம்.
கடந்த ஓரிரு மாதங்களாகத்தான் நிம்மதியாக இருக்கிறார் ஆதீனம். திருஞானசம்பந்தர் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார். மதுரையில் மழை பெய்ய வேண்டும் என கடந்த மாதம் சிறப்பு பூஜைகள் கூட செய்தார். ஆனாலும், பழைய வழக்குகள் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் தினம் தினம் அம்மா புகழ்பாடி கொண்டிருக்கிறார் ஆதீனம்.
அந்த வழக்குகளின் இன்றைய நிலை என்ன? நித்தி இப்போது என்ன செய்கிறார்? நாளை பார்க்கலாம்...

Tuesday, June 4, 2013
என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 4
கே.கே.மகேஷ்
படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து
மதுரை ஆதீனப் பதவியில் நிம்மதியாக ஒரு மாதம் கூட இருக்கவில்லை நித்தியானந்தா.அதற்குள் அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த செக்ஸ் புகார்கள் பரபரப்பை பற்ற வைத்தன. அது மதுரை ஆதீனத்தின் நிம்மதிக்கும் சேர்த்து உலை வைத்தது.
பல முறை கற்பழித்தார்
குடும்ப வாழ்க்கையில் பற்று இல்லாமல், சன்னியாசியாகும் 'ஆசை'யில் 2004ல் நித்தியின் ஆசிரமத்துக்கு வந்தவர்தான் ஆர்த்தி ராவ். சென்னையைச் சேர்ந்த இவர் திருமணமானவர். அவரது கணவர் அமெரிக்காவில் இருக்கிறார்.
நித்தி, ஜீவ முக்தி தருவதாகச் சொல்லிச் சொல்லியே தன்னை பல முறை கற்பழித்தார் என்று அதிர்ச்சி புகார் கொடுத்தார் ஆர்த்தி ராவ். "சேலம், ஏற்காடு, பிடதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் போன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்று என் விருப்பம் இல்லாமலேயே நித்தி என்னை அனுபவித்தார்.வாரணாசி கும்ப மேளாவுக்கு அழைத்துச் சென்று புனித தலத்தில் உறவு கொண்டால் ஆன்ம சக்தி அதிகரிக்கும் என்று சொல்லி அங்கேயும் கற்பழித்தார்" என்று சொன்னார் ஆர்த்திராவ்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய, பிடதி ஆசிரமத்தில் வைத்து நித்தியிடம் கேள்வி கேட்டன கர்நாடக மீடியாக்கள். அப்போது ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள். நித்தியின் ஆட்களுக்கும் மண்டை உடைந்தது.
இந்த விவகாரத்தால், ''பிடதியின் அமைதி பறிபோய் இருக்கிறது. சர்ச்சைக்குரிய ஆசிரமத்தையும், நித்தியானந்தாவையும் விசாரித்து ஓரிரு நாட்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். தேவைப்பட்டால் பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்படும்" என்று அறிவித்தார் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா.
கைதான நித்தி
இதற்கிடையே, ஜூன் 7 ஆம் தேதி கர்நாடகாவின் ராம்நகர் போலீஸ், நித்தியானந்தா உள்ளிட்ட எட்டுப் பேர் மீது கொலை மிரட்டல், வெறித்தாக்குதல், பொது அமைதியைச் சீர்குலைத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நித்தி, கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவானார்.
கடைசியில் வேறு வழியில்லாமல் ஜூன் 13 ஆம் தேதி ராம்நகர் கோர்ட்டில் சரண் அடைந்தார். உடனே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த நித்தியை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவார் என்று கோர்ட் வாசலிலேயே கைது செய்தது கர்நாடக போலீஸ்.
மதுரை வந்தார்
ஜூன் 15 ஆம் தேதி இரண்டாவது வழக்கிலும் நித்திக்கு ஜாமீன் கிடைத்தது. மீண்டும் ஏதாவது வழக்குப் போட்டு கர்நாடகா போலீஸ் கைது செய்து விடுமோ என்ற பயத்தில், இரவோடு இரவாக மதுரை புறப்பட்டார் நித்தி. மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு மதுரை ஆதீனத்துக்கு வந்து சேர்ந்த அவரை ஆரத்தழுவி வரவேற்றார் அருணகிரி. அவர் உள்ளே போன மறுகணமே கேட் சாத்தப்பட்டு பெரிய பூட்டு போடப்பட்டது.

அந்தப் பூட்டு ஆதீன வாசலுக்கு மட்டுமல்ல, நித்தி, அருணகிரியின் வாய்க்கும் சேர்த்துத்தான் போடப்பட்டது.பதவியேற்ற 2 மாதத்தில் சுமார் 25 பிரஸ் மீட்டுகளை நடத்தி சாதனை படைத்தவரான நித்தி, இந்தப் பிரச்னைக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே தவிர்த்தார். தான் உண்டு, தன் சேலையுண்டு என்று ஸாரி... வேலையுண்டு என்று அடக்கத்துடன் இருக்க ஆரம்பித்தார். ஆனால், அவரது சீடர்களுக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே உரசல் ஏற்பட ஆரம்பித்தது.
அதிருப்தியில் ஆதீனம்
ஆசிரமத்துக்குள்ளேயே அடைந்து கிடப்பது போரடித்ததால், கொடைக்கானலுக்குச் சென்றார் நித்தியானந்தா. ஆனாலும், அவரது சீடர்கள் சுமார் 15 பேர் தொடர்ந்து மதுரையிலேயே இருந்தார்கள். அவர்களுக்கும் அருணகிரிநாதரின் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டன. "நித்தியின் சீடர்கள் என்னை மதிப்பதேயில்லை. என்னைக் காண வருபவர்கள், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது மரபு. ஆனால், நித்தி பக்தர்கள் என்னை மதிக்காதது மட்டுமல்ல, கேலியும் செய்கிறார்கள்' என்று புலம்ப ஆரம்பித்தார் ஆதீனம். இதற்கிடையே, நித்தியின் பி.ஆர்.ஓ., ஒருவர் ஆதீனத்தை 'அகோபலிப்டா' (காட்டுவாசி) என்று கேலி செய்தாராம். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றார் ஆதீனம்.
இடையில் இமயமலைக்குச் சென்ற நித்தி, ரஞ்சிதாவையும் உடன் அழைத்துச் சென்றார். இதுபற்றி நித்தி
தன்னிடம் கூறவில்லையே என்று வருத்தப்பட்டார் ஆதீனம். ஆனாலும் நித்தியை நீக்குவது தொடர்பாக அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. நித்திக்கு எதிராக போராடிய அமைப்புகளில் பல, ஆதீனத்துக்குப் பாதுகாப்பும், ஆதரவும் தருவதாகச் சொல்லியும் அவரால் ஒன்றும் செய்ய -முடியவில்லை. சூழ்நிலைக் கைதியாகத் தத்தளித்தார் ஆதீனம். இதனால், 'ஆதீனம் சம்பந்தப்பட்ட பலான சி.டி. ஒன்று நித்தி கையில் சிக்கிவிட்டதாக'... வசந்தி ஸாரி... வதந்தி கூட பரவியது.
கோர்ட் வைத்த செக்
இதனிடையே, நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர் தொடர்ந்த வழக்கு ஒன்று முக்கிய கட்டத்தை எட்டியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 16 ஆம்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ''இந்து அறநிலையத் துறை சட்டப்படி மதுரை ஆதீன மடத்தைப் பொறுத்தவரை, ஒருவர் மட்டுமே மடாதிபதியாக இருக்க முடியும். ஆனால், '292-வது குருமகா சன்னிதானமான நான் 293 ஆவது சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமிக்கிறேன்'னு கர்நாடகாவில் வைத்து ஒப்பந்தம் எழுதி இருக்கிறார் அருணகிரிநாதர்.
இது, இந்து அறநிலையத் துறை சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. மரபுகளை மீறி சட்ட விரோதக் காரியத்தைச் செய்த அருணகிரிநாதரை மடத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கி, மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மதுரை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன'' என்று வாதாடினார் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.
அவர் சொன்னபடியே, அருணகிரிநாதரின் பதவியைப் பறித்து, ஆதீனத்தை அரசே கைப்பற்றுவதற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. பதறிப்போன ஆதீனம், தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நித்தியை நீக்க முடிவு செய்தார்.
நித்தியை நீக்கிய பிறகாவது மதுரை ஆதீனத்திற்கு நிம்மதி கிடைத்ததா? நாளை பார்க்கலாம்.
அதிருப்தியில் ஆதீனம்
ஆசிரமத்துக்குள்ளேயே அடைந்து கிடப்பது போரடித்ததால், கொடைக்கானலுக்குச் சென்றார் நித்தியானந்தா. ஆனாலும், அவரது சீடர்கள் சுமார் 15 பேர் தொடர்ந்து மதுரையிலேயே இருந்தார்கள். அவர்களுக்கும் அருணகிரிநாதரின் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டன. "நித்தியின் சீடர்கள் என்னை மதிப்பதேயில்லை. என்னைக் காண வருபவர்கள், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது மரபு. ஆனால், நித்தி பக்தர்கள் என்னை மதிக்காதது மட்டுமல்ல, கேலியும் செய்கிறார்கள்' என்று புலம்ப ஆரம்பித்தார் ஆதீனம். இதற்கிடையே, நித்தியின் பி.ஆர்.ஓ., ஒருவர் ஆதீனத்தை 'அகோபலிப்டா' (காட்டுவாசி) என்று கேலி செய்தாராம். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றார் ஆதீனம்.
இடையில் இமயமலைக்குச் சென்ற நித்தி, ரஞ்சிதாவையும் உடன் அழைத்துச் சென்றார். இதுபற்றி நித்தி
கோர்ட் வைத்த செக்
இதனிடையே, நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர் தொடர்ந்த வழக்கு ஒன்று முக்கிய கட்டத்தை எட்டியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 16 ஆம்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ''இந்து அறநிலையத் துறை சட்டப்படி மதுரை ஆதீன மடத்தைப் பொறுத்தவரை, ஒருவர் மட்டுமே மடாதிபதியாக இருக்க முடியும். ஆனால், '292-வது குருமகா சன்னிதானமான நான் 293 ஆவது சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமிக்கிறேன்'னு கர்நாடகாவில் வைத்து ஒப்பந்தம் எழுதி இருக்கிறார் அருணகிரிநாதர்.
இது, இந்து அறநிலையத் துறை சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. மரபுகளை மீறி சட்ட விரோதக் காரியத்தைச் செய்த அருணகிரிநாதரை மடத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கி, மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மதுரை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன'' என்று வாதாடினார் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.
அவர் சொன்னபடியே, அருணகிரிநாதரின் பதவியைப் பறித்து, ஆதீனத்தை அரசே கைப்பற்றுவதற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. பதறிப்போன ஆதீனம், தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நித்தியை நீக்க முடிவு செய்தார்.
நித்தியை நீக்கிய பிறகாவது மதுரை ஆதீனத்திற்கு நிம்மதி கிடைத்ததா? நாளை பார்க்கலாம்.
Sunday, June 2, 2013
என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 3
கே.கே.மகேஷ்
படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து
ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற வாசகம் சாமியார்களுக்கும் பொருந்தும். 27.3.12 ஆம் தேதி - ஆப்பசைத்த குரங்கு போல, மதுரை ஆதீனம் வசமாகச் சிக்கிய நாள். பணம், புகழ், தங்கம் என்று நித்தி காட்டிய ஆசைகளுக்கு மயங்கிய பின்னர் அருணகிரிநாதரின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகப் போனது.
மதுரை ஆதீனமாக நித்தி
27.3.12 ஆம் தேதி கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில்,மதுரையின் 293 ஆவது ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்தார் அருணகிரிநாதர்.தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மதுரை ஆதீனம்,மற்றொரு சிம்மாசனத்தில் இருந்த நித்திக்கு தங்க கிரீடம் அணிவித்து,6 அடி உயர தங்கச் செங்கோலை வழங்கி 'பதவிப்பிரமாணம்' செய்து வைத்தார்.பதிலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை அருணகிரியிடம் கொடுத்தார் நித்தி.

அப்போது பேசிய அருணகிரி, ''மதுரை ஆதீனத்தை, எமக்குப் பிறகு யார் கட்டிக்காக்கப் போகிறார்கள் என்ற கவலையில் யாம் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தோம்.அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமானும்,பார்வதியும் எமது கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு' என்று சொன்னார்கள்.அதன்பிறகு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன்.அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவரின் செயல்பாடுகள் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.
பார்த்தவுடன் கவரும் தோற்றமும், கம்பீர உருவமும், இளமையும் கொண்டவர் நித்தியானந்தா. என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்' என்று அழைக்க வேண்டும்" என்று சொன்னார்.
வாய் நிறைய பல்லோடு பேசிய நித்தியானந்தா,"மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன்.அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு,புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன்.இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன்.ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும்,24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும்" என்று சொல்லி அதிரவைத்தார்.
கொதித்தெழுந்த மதுரைவாசிகள்
இந்த அறிவிப்பு மதுரைவாசிகளை கொதித்தெழ வைத்தது.சின்னச் சின்ன அமைப்புகள் கூட, நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தன.மதுரை ஆதீனம் பதட்டப்பகுதியானது.அங்கே 24 மணி நேரமும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பதிலுக்கு நித்தியின் பெண் சீடர்கள்,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.ஒரு தொலைக்காட்சிக்கு எதிராகவும்,இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தையும் கண்டித்து,உலகம் முழுக்க உள்ள நித்தியின் தியான மையங்களில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அவரது வெளிநாட்டு சீடர்கள்.
இதற்கிடையே, "ஆதீன மடத்தில் 16,18 வயதுப் பெண்கள் துப்பட்டாவும், பேண்ட்டும் அணியாமல் கவர்ச்சியாக நடமாடுகிறார்கள்.ஆங்காங்கே படுக்கைகள் எல்லாம் கிடக்கிறது.தவறான செயல்கள் நடக்கிற இடம் மாதிரி இருக்கிறது"என்று கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்தார் மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற லட்டர் பேடு இயக்கத் தலைவர் முத்துராஜ்.
மே மாத இறுதியில்,கிரானைட் விவகாரத்தால் கலெக்டர் சகாயம் மாற்றம் செய்யப்பட,அது தன்னால் தான் நிகழ்ந்தது என்பது போல் பந்தா காட்டினார் நித்தியானந்தா."எல்லாம் இறைவன் செயல்" என்றார் அருணகிரிநாதர்."புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா என் நண்பர் தான்"என்றார் நித்தி.
மடாதிபதிகளின் எச்சரிக்கை
இதற்கிடையே,மதுரை ஆதீனத்தில் நடந்த இந்த கிறுக்குத்தனமான முடிவு குறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தின் பிரதான மடதிபதிகள் எல்லாம் மே 1-ம் தேதி மயிலாடுதுறையில் அவசரக் கூட்டம் நடத்தினார்கள்.திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தருமபுரம்,குன்றக்குடி,திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
"செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததை,10 நாட்களில் திரும்பப் பெறவேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்"என்று அந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நித்தியின் மிரட்டல்
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை ஆதீனத்தில் அருணகிரிநாதரும்,

அதேபோல,கூட்டுச் சதி 120(பி),மான நஷ்டம்,அவதூறு ஏற்படுத்துதல் 100, 101,சாதி பற்றி சரியான தவல்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது 153(ஏ), என்னுடைய பக்தர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தியது 295(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய மடங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மடாதிபதிகள் மீது தனித்தனியாக வழக்குத் தொடர்வார்கள்" என்று மிரட்டல் விடுத்தார் நித்தி. "இதுக்கு மேலும், இந்து அமைப்புகள் என்ற பெயரில் லோக்கல் ரௌடிகள் வயலன்ஸில் ஈடுபட்டால், அதற்கும் திருப்பனந்தாள் ஆதீனமே பொறுப்பு" என்றும் எச்சரித்தார் நித்தியானந்தா.
வைஸ்ணவி மீது தாக்குதல்
நித்தி மடத்திற்குள் நுழைந்ததும்,அருணகிரிநாதரின் காரியதரசியான வைஸ்ணவியின் முக்கியத்துவம்
பின்பு,வைஸ்ணவி தாக்குதல் பற்றி விளக்கம் கொடுத்த நித்தி,"ஆதீனத்தில் இருந்த யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை.அத்தனை பேரும் பணியில் இருக்கிறார்கள். தினமும் 20 மணி நேரம் உழைக்கின்ற 33 வயதுக்கு உட்பட்ட 1,800 இளைஞர்களைக்கொண்ட ஒரு மிகப் பெரிய 'ஒர்க்கஹாலிக் குரூப்' நாங்கள். பழைய ஆட்கள் வேறு மாதிரி செட்-அப்பில் பணி செய்திருப்பார்கள். அவர்களால் எங்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், சிறுசிறு சச்சரவுகள். வைஷ்ணவிக்கும் எங்களது சீடர்களுக்கும் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கு.யாரும் அவரை அடிக்கவில்லை'' என்றார்.
நித்திக்கு வந்த சிக்கல்
நித்தி மதுரையில் இருந்த நாள் முழுக்க தினம் தினம் 'பிரஸ் மீட்' வைத்து யாரையாவது வசை பாடிக் கொண்டே இருந்தார்.மருத்துவ முகாம்,அன்னதானத் திட்டம் போன்றவற்றைத் தொடங்கி வைத்த அவர்,அடுத்து மருத்துவக் கல்லூரியும், பெரிய பெரிய கல்வி நிறுவனங்களையும் அமைக்கப் போவதாகவும் 'பீலா' விட்டார்.
ரஞ்சிதா விவகாரத்தில் அழிந்து போன தன்னுடைய இமேஜை ஆதீனப் பதவி மூலம் உயர்த்திவிட்டதாக அவர் கருதிய நேரத்தில், ஆர்த்தி ராவ் சொன்ன செக்ஸ் புகார்கள் விஸ்வமூபம் எடுத்தன.தப்பியோடி தலைமறைவாகும் சூழ்நிலைக்கு ஆளானார் நித்தி.
அந்த பரபர நாட்கள் பற்றிய தகவல்கள் நாளை....
http://news.vikatan.com/article.php?module=news&aid=15626
என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 2
கே.கே.மகேஷ் படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 1980 ஆண்டில் இருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் அருணகிரிநாதர்,பல நல்ல விஷயங்களைச் செய்து வந்தார். முதல் 23 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில்,இவர் சொற்பொழிவாற்றி இருக்கிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இவர் தொட்டதெல்லாம் சொதப்பல் தான். நீக்கப்பட்ட வாரிசு ஆதீனச் சொத்துக்களை அபகரிப்பதற்காக,அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னையே ஒழித்துக் கட்ட அவர் திட்டமிடுவதாக மதுரை ஆதீனத்துக்குத் தகவல் வந்தது.அரண்டு போன ஆதீனம் அவரை உடனே பதவியில் இருந்து நீக்கினார்.சுவாமிநாதனையும், அவரது குடும்பத்தினரையும் மடத்தை விட்டே விரட்டி அடித்தார். ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு,ஆதீனம் தன் நிழலைக் கூட நம்ப மறுத்தார்.ஆதீனத்தில் ஆங்காங்கே ஆன் செய்யப்பட்ட'மைக்'குகளை பொருத்தினார்.அதன் உதவியுடன் தனது அறையில் இருந்தபடியே,ஊழியர்களும்,பக்தர்களும் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார்.இன்றளவும் அந்த மைக்குகள் செயல்பாட்டில் உள்ளன.தொழில்நுட்பம் வளர்ந்ததும்,ஆங்காங்கே சி.சி.டி.வி. கேமிராக்களை வைத்து,மானிட்டர் மூலம் கண்காணிக்க ஆரம்பித்தார். சுவாமிநாதன் நீக்கம் பற்றி ஒருமுறை பத்திரிகையாளர்களிடம் விளக்கிய ஆதீனம், "அவனை பண்ணத்தெரு பன்னகாபரமேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு பூஜை, வழிபாட்டிற்காக அனுப்பி வைத்திருந்தேன்.ஆனால், அவன் அங்கிருந்த மேலாளரிடம்,'ஆதீனம் பெயரில் வங்கியில் எவ்வளவு இருக்கிறது? கோவில் நகைகள் எவ்வளவு இருக்கிறது?'என்றெல்லாம் கேட்டிருக்கிறான்.'அதை உங்களிடம் சொல்வதற்கு எனக்கு இன்னும் உத்தரவு வரவில்லை'என்று மேலாளர் பதில் சொல்லியிருக்கிறார். உடனே அவனும், அவனது குடும்பதினர்களும் '16ம் தேதி வரை தான் நீங்க. அதுக்கப்புறம் எல்லாம் மாறிடும். உங்களுக்குப் பதில் வேற மேனஜர்... ஞாபகம் இருக்கட்டும்!' என்று மிரட்டியிருக்கிறார்கள். ஆக, ஏதோ சதி நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.ஒரு சாமியாரை விஷ ஊசி போட்டுக் கொலை செய்ய சதி நடந்ததே,அதைப் போல. அதனால்தான் அவனை உடனே நீக்கினேன்" என்று சொன்னார். இதனால், அவர் ஊழியர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
காமெடி அவதாரம்
வயதாக வயதாக இவரது பேச்சில் குழந்தைத் தனம் தென்பட ஆரம்பித்தது.இவரது சீரியஸான பேச்சு கூட
எந்தக் கேள்வி கேட்டாலும், 'தெரியாது... கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்ற பதிலையே சொல்ல மாட்டார். 'நான் ஐ.ஜி. ஆப் ஐ.ஜி.ஸ்...அதனால் தான் சைரன் வைத்த காரில் போகிறேன், '2012ல் உலகம் அழிந்துவிடும்'என்றெல்லாம் சிரிக்காமல் பேட்டி கொடுப்பார். அதனால், பத்திரிகைகள் இவரைக் கொண்டாடின.
என்.நடராஜனுடன் (அதாங்க... சசிகலா நடராஜன்) சேர்ந்து இவர் அடித்த லூட்டிகள் கணக்கற்றவை.இதனால்,வாசகர்களும் ஆதீனம் பேட்டி என்றால், ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தார்கள். புகழ் போதையும்,பெண் அறிமுகமும் நாளடைவில், புகழ் போதைக்கு அடிமையானார் ஆதீனம்.தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி பத்திரிகையில் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட ஆரம்பித்தார்.'பவர் ஸ்டார்' சீனிவாசனின் 'லத்திகா' திரைப்படம் மதுரையில் வெளியாகவே இல்லை.ஆனால், அந்தப் படத்தின் 200வது நாள் விழா மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் பிரமாண்டமாக நடந்தது.துணை நடிகைகளின் கவர்ச்சி ஆட்டம் களை கட்டிய அந்த விழாவில் கலந்து கொண்டார் ஆதீனம். அப்போதுதான் சீனிவாசனை முதன் முதலில் சந்தித்தார். ஆனாலும், சீனிவாசனைப் புகழ்ந்து சுமார் 20 நிமிடம் பேசி, 'பவர் ஸ்டாருக்கெல்லாம் பவர் ஸ்டார் நான்'என்று புரிய வைத்தார் ஆதீனம். இதற்கிடையே, கச்சனம் ஸ்ரீ கைச்சின்னேசுவர சுவாமி திருக்கோயில் பணியாளர் ஒருவர்,தன் மனைவி கமலாவைப் பிரிந்து சென்றுவிட்டார்.கமலாவோ தொடர்ந்து கோவிலை கூட்டிப் பெருக்குவது என்று தொண்டு செய்து கொண்டிருந்தார். எப்போதாவது கோவிலுக்கு வரும் மதுரை ஆதீனத்திடம் மனம் கோணாமல் நடந்து கொண்டார் கமலா. அவரது அன்பு உபசரிப்பில் மயங்கிய ஆதீனம், ஒரு கட்டத்தில் அவரது வீட்டிற்கே செல்ல ஆரம்பித்தார்.அவரது மகள்கள் வைஸ்ணவி, கஸ்தூரியின் மேற்படிப்புக்கு உதவினார்.இதை உள்ளூர் மக்கள் தவறாக விமர்சிக்க,கண்ணைக் கசக்கினார் கமலா.ஒரு கட்டத்தில், கமலாவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் ஆதீனம்.பின்னாலேயே வைஸ்ணவியும் மதுரை வந்துவிட்டார். நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் இதுபோன்ற செயல்களால் சிலர் ஆதீன மடத்தில் வைத்தே அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பிக்க,அதை 'மைக்' மூலம் ஒட்டுக்கேட்ட ஆதீனம் அப்செட் ஆனார். தன்னைப் பார்க்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை என்று சில "சன்னிதானத்தின் காலடியில் வீழ்ந்து வணங்க வேண்டும்.அவரோடு பேசும் போது 'சரி' என்ற சொல்லைப் பயன்படுத்தவே கூடாது.'உத்தரவு' என்றே சொல்ல வேண்டும்.சன்னிதானம் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசுவார்.அதற்காக இடையிலேயே நீங்கள் புறப்பட்டுவிடக் கூடாது.சன்னிதானம் எப்போது உத்தரவு கொடுக்கிறாரோ அதன் பின்னரே புறப்படத் தயாராக வேண்டும்.போகும் போது, அவருக்குத் தன் பின்பக்கத்தைக் காட்டக் கூடாது.முகம் அவரை நோக்கி இருக்குமாறு பின்னோக்கி நடந்து செல்ல வேண்டும்"என்று ஆதீனச் சம்பிரதாயங்கள் நீண்டு கொண்டே போனது."தன்னைப் பார்க்க வரும் அனைவரும் தரையில் தான் உட்கார வேண்டும்.சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும்"என்றும் அடம்பிடிக்க ஆரம்பித்தார் ஆதீனம். தடுமாறிய ஆதீனம்...உள்ளே புகுந்த நித்தியானந்தா போதை இருந்தால் தடுமாற்றமும் இருக்கத் தானே செய்யும்.மதுரை ஆதீனத்தின் புகழ் போதையை புரிந்து கொண்டு,அவரைப் பிடதி ஆசிரமத்துக்கு வரவழைத்து தன்னுடைய சாம்ராஜ்யத்தைச் சுற்றிக் காட்டினார் நித்தியானந்தா.
இதேபோல் உலகமெங்கும் தனக்கு ஆசிரமங்கள் இருப்பதாக கதை அளந்தார்."நீங்கள் சம்மதித்தால்,மதுரை ஆதீனத்துக்கும் உலகமெங்கும் கிளைகளை ஏற்படுத்துகிறேன்.அதற்காக 100 கோடி ரூபாய் நன்கொடை தருகிறேன்" என்று ஆசை வார்த்தை காட்டினார். நித்தியானந்தாவின் இனிக்கும் பேச்சையும்,அவரைச் சுற்றி இருந்த கூட்டத்தையும் பார்த்து தடுமாறினார் ஆதீனம்.
அது அவர் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்யக் காரணமாகப் போய்விட்டது. நித்தியின் வருகையும், அதன் பிறகு மதுரையில் நடந்த களேபரங்களும் ரொம்பவே சுவாரஸ்யமானவை. அவற்றைச் சுருக்கமாக நாளை பார்க்கலாம்... |
என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 1
கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், "ஆமா.... இதுவரைக்கும் அவர் என்ன செய்தார்?" என்ற கேள்வியைத் திருப்பிக் கேட்பீர்கள். அதற்காகத் தான் இந்த எஸ்.டி.டி. ஸாரி.... ஹிஸ்ட்ரி!
வெளிநாடு பயணம்
தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவரான அருணகிரிநாதர், மதுரை ஆதீனத்தின் இளவரசராக (அதாங்க... நித்தியானந்தா சமீபத்தில் வகித்த பதவி) 27.5.1975ல் பொறுப்பேற்றார். 291வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் பூரணம் அடைந்த பிறகு, 14.3.1980ல் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர். அன்று முதல் அவருடைய பெயர் 292 ஆவது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள்! (அப்படித்தான் பத்திரிகையில் பிரசுரிக்கணும்னு அவர் வலியுறுத்திச் சொல்லுவார். ஆனால் யாரும் கேட்பதில்லை)
உண்மையிலேயே இளம் வயதில் செம ஆக்டிவாக இருந்தார் நம்ம ஆதீனம். மதுரை ஆதீனத்தின் நோக்கம் சைவத்தை பரப்புவதும், தமிழை வளர்ப்பதும்தான். அந்த வேலைகளை ஓரளவுக்குச் சரியாகச் செய்தார் மதுரை ஆதீனம். 1984ல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும், 1987ல் மலேசியாவுக்கும் சென்று சைவ சிந்தாத்தத்தை விளக்கிப் பேசியிருக்கிறார்.

அதே ஆண்டில் சீனாவில் உள்ள 'காண்டன்' (சரியாக உச்சரிக்கவும்) நகருக்குச் சென்ற அருணகிரிநாதர், அங்கு இஸ்லாமிய மக்களும் கூடியிருப்பதைக் கண்டு, சைவ சமயத்தையும், இஸ்லாம் மார்க்கத்தையும் இணைத்து 'ஏகத்துவம்' பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றி அசத்தினார். இதேபோல ஹாங்காங்க், சிங்கப்பூர், ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார் ஆதீனம்.
வாடகை வசூலிப்பதில் கில்லாடி
மதுரை ஆதீனத்தின் சொத்துக்கள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, ஆதீன வருவாயைப் பெருக்கியவர் இவர்தான். தென் தமிழகத்திலேயே ஒரே வீதியில் அதிக நகைக்கடைகள் அமைந்திருப்பது, மதுரை ஆதீனம் அமைந்திருக்கின்ற தெற்கு ஆவணி மூல வீதிதான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த வீதியில் ஆரம்பத்தில் வரிசையாக இரும்புப் பட்டறைகள்தான் இருந்தன. வருமானத்தைப் பெருக்குவதற்காக அவற்றை எல்லாம் காலி செய்ய வைத்து, நகைக்கடைகளுக்கு வாடகைக்குக் கொடுத்த 'பெருமை'யும் நம்ம ஆதீனத்தைத் தான் சேரும்.

இந்தக் கடைகள், வீடுகள், நிலங்கள் போன்றவற்றை வாடகைக்கும், குத்தகைக்கும் அனுபவித்தும் வருகிறவர்கள் எல்லாம், ஒவ்வொரு மாதமும 5 ஆம் தேதிக்குள் அவரவர்கள் கட்ட வேண்டிய தொகையை, அவர்களாகவே வந்து செலுத்தி ரசீது பெற்றுக் கொள்கிறார்கள். இந்த நடைமுறையை அமல்படுத்தியது இவர்தான்.
ஏ.சி. போட்டவரும் இவரே!
ஆதீனத்துக்குச் சொந்தமான கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. (ஹி...ஹி... வைஸ்ணவியின் வீடும்தான்) கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்புறம்பியம் ஸ்ரீ சாட்சிநாத சுவாமி திருக்கோயில், கச்சனம் ஸ்ரீ கைச்சின்னேசுவர சுவாமி திருக்கோயில், பன்னத்தெரு ஸ்ரீ பன்னகாபரமேஸ்வர சுவாமி திருக்கோயில் போன்றவற்றில் திருப்பணிகள் செய்தவரும் இவரே.
மதுரை ஆதீனம் முழுக்க கிரானைட் கற்களைப் பதித்து, ஒடுக்கம் என்று அழைக்கப்படும், பக்தர்கள் ஆதீனத்தைச் சந்திக்கும் அறைக்கு ஏ.சி. போட்டவரும் இவர்தான். ஆதீனத்தின் பக்கம் இருந்த மாநராட்சி கழிவறையை அகற்றியது, ரிக்ஷா ஸ்டாண்டை அகற்றியது என்று இவரது 'சாதனை'களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆதீனத்தின் காரில் சைரன் மாட்டிக் கொண்டு பந்தா காட்டிய முதல் ஆதீனமும் இவர்தான்.
கலவர பூமியில் ஆதீனம்
ஆரம்ப காலத்தில் மதுரை ஆதீனம் செய்த உருப்படியான காரியங்களில் ஒன்று சாதி, மத மோதல்கள்
நடக்கும் இடங்களுக்குச் சென்று அமைதியை ஏற்படுத்தியது. 1981 - 82 ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் இந்து -கிறிஸ்தவர்களிடையே மதக் கலவரம் ஏற்பட்ட போது ஆதீனம் அங்கே ஆஜரானார். கொலையும், துப்பாக்கிச் சூடும் நடந்து கொண்டிருந்த அந்தப் பகுதியில், தொடர்ந்து 4 மாத காலம் தங்கியிருந்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சமாதானப்படுத்தினார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, கோட்டாறு மருத்துவமனையிலும், அந்தந்த ஊர்களிலும் சந்தித்து, உணவும் உடையும் வழங்கினார்.
இதேபோல 1981ல் தென்காசி மீனாட்சிபுரத்தில் மத மாற்றத்தால் பெரிய மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவான போது, உடனடியாக அந்தப் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார் ஆதீனம். மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள இல்லங்கள் தோறும் எழுந்தருளி, சைவ சமயப் பேருண்மைகளையும், இஸ்லாம் மார்க்கத்தத்துவத்தையும் எடுத்துக் கூறி, அவரவர் மதங்களில் அவரவர் இருக்க வேண்டியது என்று சொன்னார். தென்காசி மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு அமர்ந்து "சமபந்தி" போஜனத்தில் கலந்து கொண்டார் ஆதீனம். இவரோடு, வாஜ்பாய் (பின்னாள் பிரதமர்), பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி போன்றோரெல்லாம் கலந்து கொண்டார்கள்.
அதெல்லாம் போன மாசம்...
1983 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்தபோதும், அங்குள்ள சிவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டபோதும், மிகுந்த வேதனைக்குள்ளாகி, மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இரண்டு முறை உண்ணாவிரதம் மேற்கொண்டவர் மதுரை ஆதீனம்.
1985 - 86ம் ஆண்டுகளில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, 1987-ல் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்னியர் போராட்ட பாதிப்பு போன்றவற்றுக்கும் நேரில் சென்றவர் ஆதீனம்.
ஏ.சி. போட்டவரும் இவரே!
ஆதீனத்துக்குச் சொந்தமான கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. (ஹி...ஹி... வைஸ்ணவியின் வீடும்தான்) கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்புறம்பியம் ஸ்ரீ சாட்சிநாத சுவாமி திருக்கோயில், கச்சனம் ஸ்ரீ கைச்சின்னேசுவர சுவாமி திருக்கோயில், பன்னத்தெரு ஸ்ரீ பன்னகாபரமேஸ்வர சுவாமி திருக்கோயில் போன்றவற்றில் திருப்பணிகள் செய்தவரும் இவரே.
மதுரை ஆதீனம் முழுக்க கிரானைட் கற்களைப் பதித்து, ஒடுக்கம் என்று அழைக்கப்படும், பக்தர்கள் ஆதீனத்தைச் சந்திக்கும் அறைக்கு ஏ.சி. போட்டவரும் இவர்தான். ஆதீனத்தின் பக்கம் இருந்த மாநராட்சி கழிவறையை அகற்றியது, ரிக்ஷா ஸ்டாண்டை அகற்றியது என்று இவரது 'சாதனை'களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆதீனத்தின் காரில் சைரன் மாட்டிக் கொண்டு பந்தா காட்டிய முதல் ஆதீனமும் இவர்தான்.
கலவர பூமியில் ஆதீனம்
ஆரம்ப காலத்தில் மதுரை ஆதீனம் செய்த உருப்படியான காரியங்களில் ஒன்று சாதி, மத மோதல்கள்
இதேபோல 1981ல் தென்காசி மீனாட்சிபுரத்தில் மத மாற்றத்தால் பெரிய மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவான போது, உடனடியாக அந்தப் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார் ஆதீனம். மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள இல்லங்கள் தோறும் எழுந்தருளி, சைவ சமயப் பேருண்மைகளையும், இஸ்லாம் மார்க்கத்தத்துவத்தையும் எடுத்துக் கூறி, அவரவர் மதங்களில் அவரவர் இருக்க வேண்டியது என்று சொன்னார். தென்காசி மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு அமர்ந்து "சமபந்தி" போஜனத்தில் கலந்து கொண்டார் ஆதீனம். இவரோடு, வாஜ்பாய் (பின்னாள் பிரதமர்), பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி போன்றோரெல்லாம் கலந்து கொண்டார்கள்.
அதெல்லாம் போன மாசம்...
1983 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்தபோதும், அங்குள்ள சிவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டபோதும், மிகுந்த வேதனைக்குள்ளாகி, மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இரண்டு முறை உண்ணாவிரதம் மேற்கொண்டவர் மதுரை ஆதீனம்.
1985 - 86ம் ஆண்டுகளில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, 1987-ல் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்னியர் போராட்ட பாதிப்பு போன்றவற்றுக்கும் நேரில் சென்றவர் ஆதீனம்.
அதெல்லாம் போன மாசம்.... கடந்த 10 ஆண்டுகளில் மதுரை ஆதீனம் செய்த அருட்பணிகள் என்ன தெரியுமா? சொன்னா சிரிப்பீங்க...அதை நாளைக்கு படிங்க...!
Sunday, February 3, 2013
Nithyananda filed 2 petitions against Madurai Adheenam
மதுரை ஆதீனத்திற்கு எதிராக 2 வழக்குகள்
தினமலர் – வெ, 1 பிப்., 2013
மதுரை:
மதுரை ஆதீனத்திற்கு எதிராக, மதுரை முதன்மை சப்-கோர்ட்டில், நித்யானந்தா
தரப்பிலிருந்து 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதீன சொத்துக்களை
அபகரிக்க, நித்யானந்தாவும், அருணகிரிநாதரும் முயற்சிக்கின்றனர்; ஆதீன
சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும், என இந்து அறநிலையத்துறை ஆணையர்,
மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு செய்திருந்தார்.இதற்கு ஆதீனம் தரப்பில்,
நித்யானந்தா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பதிவு செய்த
மதுரை ஆதீனம் அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்; மடத்திற்குள்
நித்யானந்தா நுழைய தடை விதிக்க வேண்டும், என
தெரிவித்திருந்தார்.நித்யானந்தா, தன்னை நீக்கம் செய்யும் உரிமை
ஆதீனத்திற்கு இல்லை, என கூறியிருந்தார். இது தொடர்பாக 3 வழக்குகள் ஒரே
கோர்ட்டில் நடந்து வருகின்றன.இந்நிலையில், நேற்று நித்யானந்தா தரப்பில்
மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதில்,என்னை இளைய ஆதீனமாக
நியமித்த பின், பொறுப்பில் இருந்து நீக்கியதாக அறிவிக்க அதிகாரம் இல்லை.
இளைய ஆதீனம் என்ற முறையில் பூஜை செய்ய தடை விதிக்கிறார். என்னை மடத்தில்
நுழைய அனுமதிக்க வேண்டும், என ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.மற்றொரு
வழக்கில், தம்பிரானாக திருச்சிற்றம்பலத்தை நியமிக்கும் உரிமை ஆதீனத்திற்கு
இல்லை. அதை செல்லாது என அறிவிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி
குருவையா வழக்கை பிப்., 15க்கு தள்ளிவைத்தார்.
http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%86-%E0%AE%A9-%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E-%E0%AE%B0-000400791.html
Thursday, January 31, 2013
Petition filed by Nithyananda dismissed
MADURAI, January 30, 2013
Staff Reporter
Principal Sub-judge K. Guruviah, on Monday, dismissed a petition filed by Nithyananda, seeking to thwart a bid by Madurai Aadheenam Arunagirinathar to dissolve a trust formed in association with the former.
According to Nithyananda, the Aadheenam did not consult him before attempting to dissolve the trust registered in both their names. Therefore, the court should pass orders forbidding the Aadheenam from dissolving the trust, he pleaded.
However, the Aadheenam claimed that the trust was formed under the Madurai Mutt and hence there was no necessity to get approval from Nithyananda.
The judge held that Nithyananda’s claims were unwarranted and dismissed the petition.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/petition-filed-by-nithyananda-dismissed/article4359370.ece
Friday, January 11, 2013
protest demanding Nityananda exiled- tv9 news
Labels:
Nithiyananda,
Nithy,
Nityananda,
Ranjitha,
tv9,
நித்தியானந்தா,
நித்யா,
மதுரைஆதீனம்,
ரஞ்சிதா,
ನಿತ್ಯಾನಂದ
Wednesday, January 9, 2013
மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு
ஜனவரி 08,2013,17:55 IST
மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்படுத்திய மதுரை ஆதீன அறக்கட்டளையை மதுரை ஆதீனம் கலைத்தார். அறக்கட்டளை அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது எனக்கூறி மதுரை கோர்ட்டில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நித்யானந்தா மதுரை ஷெசன்ஸ் சப் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அறக்கட்டளையை அரசின் முன் அனுமதி பெற்றுத்தான் கலைக்க வேண்டும். ஆதீனம் முன் அனுமதியின்றி கலைத்துள்ளார். எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது என கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி நித்யானந்தா மனு தொடர்பாக வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மதுரை ஆதீனத்துக்கு உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622316
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36377
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89910

Monday, January 7, 2013
நித்தியானந்தாவை நிம்மதி இழக்கச் செய்து விட்டது போலீஸ்
Wednesday, January 09, 2013
. கெடுபிடி காரணமாக நித்தியானந்தா தனது பிறந்த நாள் விழா வை, திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே எளிமையாகக் கொண்டாடி முடித்ததில், சீடர் களுக்குப் பலத்த ஏமாற்றம்! உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தும் பிரபலம் ஆக முடியாத நித்யானந்தா, ஒரே ஒரு வீடியோவால் தலைமறைவு, தப்பி ஓட்டம், அதிரடிக் கைது என சர்ச்சைகளின் நாயகன் ஆனார். அடுத்து, மதுரை ஆதீனத்தோடு கைகோத்து தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்க வைத்தார். இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு அடுக்கடுக்காகப் பல பிரச் னைகள் ஏற்பட, நித்தியைக் கை கழுவியதோடு அவரது சீடர்களையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தன் பூர்வீக இடமான திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே தங்கினார் நித்தி. அந்த ஆசிரமத்தையும் இந்து அறநிலையத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர். ஆடிப்போன நித்தி, மூத்த வழக் கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி, கோர்ட்டுக்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்,
கடந்த 6-ம் தேதி அவருடைய 36-வது அவதாரப் பெருநாள் விழாவை (அதாங்க, பிறந்த நாள் விழா!) பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டம் போட்டிருந்தார். அதற்காக அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே மேடை அமைக்கப்பட்டு இருந்தது. ஒயிலாட்டம், புலியாட்டம், தாரை தப்பட்டை, கேரள செண்டை மேளம் முழங்க மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளுடன் வீதி உலா, ஆசிரம வளாகத்தில் சத்சங்க விழா, பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்குதல் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்த நாளான 6-ம் தேதி அதிகாலையில் நித்தியின் வருகைக்காக அண்ணாமலையார் கோயிலில் அவரது சீடர்கள் காத்திருந்தனர். நேரம் ஆனதே தவிர, அவர் வரவில்லை.
பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியே வராமல் சிறை வைக்கப்பட்டவர்போல் அங்கேயே இருந்தார். நித்தியின் பக்தர்கள் சிலரிடம் பேசியபோது, ''சுவாமியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். பிறந்த நாள் அன்று அதிகாலையிலேயே அண் ணாமலையார் கோயிலுக்கு சீடர்களுடன் வந்து அபிஷேகம் செய்வார். அதன்பின், அருண கிரிநாதர் சன்னதிக்குச் சென்று அங்கேயும் பூஜைகள் செய்வார். இந்த முறை அபிஷேகத்துக்கு சுவாமியுடன் ஐந்து பேரைதான் அனுமதிக்க முடியும் என்று கோயில் சார்பில் சொல்லப்பட்டது. இதனால் பிறந்த நாள் அதுவுமாக காலையிலேயே ஏன் வீண் பிரச்னை என்று கோயிலுக்கே வராமல் இருந்து விட்டார். அதற்குப் பதில், பெங்களூரு கருமாரியம்மன் ஆசிரமத்தின் மதுக்கர் சுவாமிகளுடன் அவரது முக்கியச் சீடர்கள் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுச் சென்றனர். மற்ற நிகழ்ச்சிகளையாவது சிறப்பாக நடத்த இருந்தோம். ஆனால், நகரில் எங்களது விழாவுக்கும் ஊர்வலத்துக்கும் அனுமதி தர போலீஸார் மறுத்து விட்டனர்.
இதனால், அந்த நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு மாலையில் ஆசிரமத்தில் கொண்டாட இருந்தோம். அதற்காக ஆசிரமத்தில் பெரிய மேடை அமைத்து அலங்காரங்கள் செய்து இருந்தோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என்று போலீஸார் அதற்கும் அனுமதி தர மறுத்து விட்டனர். நித்தியானந்தரின் மெழுகு சிலை பொம்மைகளும் ஓரங்கட்டப்பட்டன. கடைசியில், சத்சங்க நிகழ்ச்சியை மட்டும் ஒரு பெரிய ஹாலில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ நாராயண் சாய் சுவாமிகள் வந்து, நித்தியானந்தரை வாழ்த்திச் சென்றார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அங்கு இருந்தபடியே சுவாமி ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல தடைகளை மீறி, சுவாமி விழாவை நடத்திக் காட்டினார்'' என்றனர். இந்த விழாவுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆட் கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக நகரில் லாட்ஜ், திருமண மண்டபங்கள் புக் செய்யப்பட்டன. சளைக் காமல் பேட்டி கொடுக்கும் நித்தி, இந்த முறை மீடியாவையைச் சந்திப்பதையே தவிர்த்தார். நித்தி விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எஸ்.பி. முத்தரசியிடம் கேட்டதற்கு, ''கோயிலைச் சுற்றி யாரும் ஊர்வலம் வரக் கூடாது என் பதால் அனுமதி மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் விழாவுக்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்றார்
http://navakirinilavarai.blogspot.in/2013/01/blog-post_8055.html
Sunday, January 6, 2013
எச்சரிக்கை செய்த கோயில் நிர்வாகம் மற்றும் போலீஸ்! அதிர்ச்சி அடைந்த நித்தி ஆசிரமத்தில் புலம்பல்!
13:46:46
Sunday
2013-01-06
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் அறநிலைய துறை எதிர்ப்பால் கோயிலுக்கு வருவதை தவிர்த்துவிட்டு தனது ஆசிரமத்திலேயே பிரசங்கம் நடத்தினார். பெங்களூர் பிடதியில் தலைமை ஆசிரமத்தை வைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நித்யானந்தா தனது பிறந்தநாளை திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று காலை தி.மலை அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு தனது சீடர்களுடன் மாட வீதியில் ஊர்வலமாக செல்வது, அங்கேயே மேடை அமைத்து பிரசங்கம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக போலீசில் அவரது சீடர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், மாட வீதியில் ஊர்வலம் நடத்தவும், மேடை அமைத்து பிரசங்கம் செய்வதற்கும் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
இதற்கிடையில் நேற்று நள்ளிரவு மாட வீதியில் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த போலீசார் அங்கு சென்று அப்பணியை தடுத்து நிறுத்தினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. நித்யானந்தா இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் திட்டத்தையும் கைவிட்டார். தனது அறையிலேயே பிரசங்கம் நடத்தினர். இதில் அவரது சீடர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36150
நித்தியானந்தா ‘திரு அவதார திருநாளில்’ திருவண்ணாமலை மாட வீதியில் திருதிரு!
இன்று (06.01.2012) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.

தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89761
http://viruvirupu.com/2013/01/06/43384/
Labels:
Nithy,
Nithyananda,
Nityananda,
Thrunannamalai,
நித்தி,
நித்தியானந்தா,
நித்யா,
நித்யானந்தா,
மதுரைஆதீனம்
Tuesday, December 18, 2012
"நெல்லையப்ப தம்பிரான்' ஆனார் திருச்சிற்றம்பலம் : "யாரும் எதிர்க்க முடியாது' என்கிறார் மதுரை ஆதீனம்
மதுரை: மதுரை ஆதீனம் மடத்தின் புதிய தம்பிரான் திருச்சிற்றம்பலத்திற்கு
மொட்டை அடிக்கப்பட்டு, தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டப்பட்டது.
""இதற்கு நித்யானந்தா உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது,''
என்றார் மூத்த ஆதீனம். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, சர்ச்சையில்
சிக்கிய மதுரை ஆதீனம், டிச.,9 ல், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான்
திருச்சிற்றம்பலத்தை, உதவியாளராக நியமித்துக் கொண்டார். இதற்காக,
"தம்பிரான்' என்ற பதவியையும் உருவாக்கினார். மடத்தின் சம்பிரதாய பூஜைகளில்
உதவியாக இருந்து வரும் திருச்சிற்றம்பலத்திற்கு, டிச., 10 முதல், தீட்சைகள்
அளிக்கும் சடங்கு துவங்கியது. நேற்று முன் தினம், அவருக்கு மொட்டை
அடிக்கப்பட்டது; மந்திர காசாயம், நிர்வாண தீட்சை அளிக்கப்பட்டு, காதில்
வளையம் மாட்டும் "சுந்தரவேடம்' என்ற சடங்கு நடந்தது.
தினமலர் நிருபருக்கு, ஆதீனம் அளித்த பேட்டி:
* இளைய ஆதீனமாக நியமிப்பதற்கான சடங்கா இது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... தம்பிரான், இளைய ஆதீனம் அல்ல. இச்சடங்குகள், தம்பிரானுக்கும் உரியது.
* அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதா?
ஆம். "ஸ்ரீமத் நெல்லையப்ப தம்பிரான்' என, அழைக்கப்படுவார்.
* இதற்கு, நித்யானந்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?
அவர் எப்படி எதிர்க்க முடியும்? அவரைத் தான் நீக்கிவிட்டேனே. அவருக்கும், மடத்திற்கும் சம்பந்தமில்லை. திருவாவடுதுறை ஆதீன மடத்தின் சம்மதத்தோடு, இங்கு திருச்சிற்றம்பலம் வந்துள்ளதால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
* மடத்தின் விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டதே?
அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கூறினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=608430&Print=1

2012,
Corruption,
GODMAN,
JAYA TV,
NATIONAL,
Nithyananda Cheating,
Sex Scandal,
Sexual Abuse,
SUN TV,
ஆர்த்திராவ்,
நித்தியானந்தா,
மதுரைஆதீனம்
Subscribe to:
Posts (Atom)