அப்போது பேசிய அருணகிரி, ''மதுரை ஆதீனத்தை, எமக்குப் பிறகு யார் கட்டிக்காக்கப் போகிறார்கள் என்ற கவலையில் யாம் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தோம்.அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமானும்,பார்வதியும் எமது கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு' என்று சொன்னார்கள்.அதன்பிறகு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன்.அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவரின் செயல்பாடுகள் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

பார்த்தவுடன் கவரும் தோற்றமும், கம்பீர உருவமும், இளமையும் கொண்டவர் நித்தியானந்தா. என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்' என்று அழைக்க வேண்டும்" என்று சொன்னார்.
வாய் நிறைய பல்லோடு பேசிய நித்தியானந்தா,"மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன்.அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு,புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன்.இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன்.ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும்,24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும்" என்று சொல்லி அதிரவைத்தார்.
கொதித்தெழுந்த மதுரைவாசிகள் இந்த அறிவிப்பு மதுரைவாசிகளை கொதித்தெழ வைத்தது.சின்னச் சின்ன அமைப்புகள் கூட, நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தன.மதுரை ஆதீனம் பதட்டப்பகுதியானது.அங்கே 24 மணி நேரமும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பதிலுக்கு நித்தியின் பெண் சீடர்கள்,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.ஒரு தொலைக்காட்சிக்கு எதிராகவும்,இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தையும் கண்டித்து,உலகம் முழுக்க உள்ள நித்தியின் தியான மையங்களில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அவரது வெளிநாட்டு சீடர்கள்.
இதற்கிடையே, "ஆதீன மடத்தில் 16,18 வயதுப் பெண்கள் துப்பட்டாவும், பேண்ட்டும் அணியாமல் கவர்ச்சியாக நடமாடுகிறார்கள்.ஆங்காங்கே படுக்கைகள் எல்லாம் கிடக்கிறது.தவறான செயல்கள் நடக்கிற இடம் மாதிரி இருக்கிறது"என்று கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்தார் மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற லட்டர் பேடு இயக்கத் தலைவர் முத்துராஜ்.
மே மாத இறுதியில்,கிரானைட் விவகாரத்தால் கலெக்டர் சகாயம் மாற்றம் செய்யப்பட,அது தன்னால் தான் நிகழ்ந்தது என்பது போல் பந்தா காட்டினார் நித்தியானந்தா."எல்லாம் இறைவன் செயல்" என்றார் அருணகிரிநாதர்."புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா என் நண்பர் தான்"என்றார் நித்தி.
மடாதிபதிகளின் எச்சரிக்கை
இதற்கிடையே,மதுரை ஆதீனத்தில் நடந்த இந்த கிறுக்குத்தனமான முடிவு குறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தின் பிரதான மடதிபதிகள் எல்லாம் மே 1-ம் தேதி மயிலாடுதுறையில் அவசரக் கூட்டம் நடத்தினார்கள்.திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தருமபுரம்,குன்றக்குடி,திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
"செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததை,10 நாட்களில் திரும்பப் பெறவேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்"என்று அந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நித்தியின் மிரட்டல்
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை ஆதீனத்தில் அருணகிரிநாதரும்,