Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Sexual Abuse நித்தியானந்தா. Show all posts
Showing posts with label Sexual Abuse நித்தியானந்தா. Show all posts

Monday, July 28, 2014

Potency Test for Nithyananda Swamy on August 6th

నిత్యానందకు పురుషత్వ పరీక్ష


బెంగళూరు:వివాదాస్పద ఆధ్యాత్మిక గురువు నిత్యానంద అసలు బండారం బయట పడనుంది. అతనికి పురుషత్వ పరీక్షలు చేయనున్నారు. వచ్చే నెల 6న పురుషత్వ పరీక్షల కోసం విక్టోరియా ఆస్పత్రికి హాజరు కావాలని సీఐడీ అధికారులు నిత్యానందకు నోటీసులు జారీ చేశారు. పరీక్షలకు హాజరుకాకపోతే కఠిన చర్యలు తప్పవని హెచ్చరించారు. నిత్యానందుడిపై పలు కేసులు ఉన్న నేపథ్యంలో వాటిలో ఒక కేసుకు సంబంధించి అతనికి పురుషత్వ పరీక్షలు నిర్వహించాలని రామనగర జిల్లా కోర్టు ఆదేశించింది. జిల్లా కోర్టు ఆదేశాలపై నిత్యానంద హైకోర్టును ఆశ్రయించారు.
పిటిషన్‌ను కొట్టేసిన హైకోర్టు
   
పురుషత్వ పరీక్షల నుంచి తనను మినహాయించాలని నిత్యానందా స్వామి హైకోర్టును కోరారు. తాను థార్మిక గురువునని, తనకు ఐహిక సుఖాలపై వాంఛలు ఉండవని, అందువల్ల తనకు పురషత్వ పరీక్షలు నిర్వహించకూడదని పేర్కొన్నాడు. ఈ కేసును విచారించిన హై కోర్టు నిత్యానంద దాఖలు చేసిన పిటిషన్ను కొట్టేసింది.
కస్టడీలోకి తీసుకోవచ్చన్న హైకోర్టు
   
కేసుకు సంబంధించి సాధారణ ప్రజల మాదిరిగానే నిత్యానందను విచారించాలని, అవసరమైన పరీక్షలు నిర్వహించవచ్చునని కోర్టు తీర్పు చెప్పింది. కింది కోర్టు ఆదేశాలను హైకోర్టు సమర్థించింది. జులై 28 నుంచి నిత్యానందను పోలీసులు కస్టడీలోకి తీసుకుని పురుషత్వ, రక్త తదితర పరీక్షలతో పాటు విచారణ కూడా చేయవచ్చునని హైకోర్టు తెలిపింది. దాంతో సీఐడీ అధికారులు ఈ ఆదేశాలు జారీ చేశారు.
అత్యాచారానికి పాల్పడ్డాడంటు ఎన్‌ఆర్‌ఐ ఫిర్యాదు
   
నిత్యానంద తనపై అత్యాచారానికి పాల్పడ్డారంటూ ప్రవాసభారతీయురాలు గతంలో పోలీసులకు ఫిర్యాదు చేశారు. మొదట ఈ పరీక్షను 28నే చేయించాలని భావించినా ఏర్పాట్లు చేయకపోవటంతో ఆగస్టు 6కు వాయిదా వేశారు. అదే రోజు పరీక్షకు హాజరుకావాలంటు నిత్యానందకు నోటీసులు జారీ చేశారు.

Sunday, September 8, 2013

Nithy CD Controversy Once again

மீண்டும் கிளம்புது நித்தி "சிடி' விவகாரம்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013,00:34 IST

சென்னை : நித்தியானந்தா சாமியார் தொடர்பான, "சிடி' குறித்து, ஒளிபரப்பு உள்ளடக்க புகாரை விசாரிக்கும் கவுன்சில் (பி.சி.சி.சி.,) அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதாக, முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கூறியுள்ளார். "நித்தி - நடிகை ரஞ்சிதா தொடர்பான, "சிடி'யை ஒளிபரப்பிய, தனியார் "டிவி' சேனல், மன்னிப்புக் கோர வேண்டும்; அந்த, "சிடி' போலியாக சித்தரிக்கப்பட்டது' என, பி.சி.சி.சி., உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையான விசாரணையின்றி அளிக்கப்பட்டுள்ளது, என, குற்றம் சாட்டும், லெனின் கருப்பன் கூறியதாவது: நித்தி - ரஞ்சிதா தொடர்பான, "சிடி'யை, தொலைக்காட்சிகள் தொடர்ந்து வெளியிடுவதால், பெண்கள், இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த, "சிடி'யை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என, வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த, கர்நாடக ஐகோர்ட், "சிடி' ஒளிபரப்புக்கு தடை விதித்தது. இத்தடைக்குப் பின், தனியார் தொலைகாட்சி ஒன்று, நித்தி - ரஞ்சிதா தொடர்பான, "சிடி'யை ஒளிபரப்பியது. கோர்ட் உத்தரவை மீறி, ஒளிபரப்பியது தொடர்பாக, ஐகோர்ட்டில் முறையிட்டனர். இம்முறையீட்டை விசாரித்த ஐகோர்ட், இதுகுறித்து, பி.சி.சி.சி., முடிவு செய்ய பரிந்துரைத்தது.

மனுவை விசாரித்த, பி.சி.சி.சி., கோர்ட் உத்தரவை மீறியதற்கான, நடவடிக்கையை எடுப்பதோடு, "சிடி' போலியாக சித்தரிக்கப்பட்டது என, கூறியுள்ளது. நித்தியானந்தா தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. மேலும், "சிடி' சித்தரிக்கப்பட்டதல்ல; உண்மையானது என, டில்லி மாநில தடய அறிவியல் ஆய்வகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், "சிடி' தொடர்பான விசாரணையை முறையாக செய்யாமல், பி.சி.சி.சி., வெளியிட்டுள்ள உத்தரவு, குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளேன். இவ்வாறு, லெனின் கருப்பன் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=798381


Summary:

BCCC (Broadcast Content Complaints Council) has issued an order regarding the Nithyananda scandal CD. The order questioned the authenticity of the video. The case against Nithyananda is currently pending in court, and the forensic report from FSL Delhi finds the video to be authentic. Under the circumstance, it is very unfortunate and I will be appealing to the BCCC reconsider this order, says Lenin Karuppan.



Sunday, June 2, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 3

கே.கே.மகேஷ்

படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 



ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற வாசகம் சாமியார்களுக்கும் பொருந்தும். 27.3.12 ஆம் தேதி - ஆப்பசைத்த குரங்கு போல, மதுரை ஆதீனம் வசமாகச் சிக்கிய நாள். பணம், புகழ், தங்கம் என்று நித்தி காட்டிய ஆசைகளுக்கு மயங்கிய பின்னர் அருணகிரிநாதரின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகப் போனது.


மதுரை ஆதீனமாக நித்தி


27.3.12 ஆம் தேதி கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில்,மதுரையின் 293 ஆவது ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்தார் அருணகிரிநாதர்.தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மதுரை ஆதீனம்,மற்றொரு சிம்மாசனத்தில் இருந்த நித்திக்கு தங்க கிரீடம் அணிவித்து,6 அடி உயர தங்கச் செங்கோலை வழங்கி 'பதவிப்பிரமாணம்' செய்து வைத்தார்.பதிலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை அருணகிரியிடம் கொடுத்தார் நித்தி.
அப்போது பேசிய அருணகிரி, ''மதுரை ஆதீனத்தை, எமக்குப் பிறகு யார் கட்டிக்காக்கப் போகிறார்கள் என்ற கவலையில் யாம் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தோம்.அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமானும்,பார்வதியும் எமது கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு' என்று சொன்னார்கள்.அதன்பிறகு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன்.அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவரின் செயல்பாடுகள் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

பார்த்தவுடன் கவரும் தோற்றமும், கம்பீர உருவமும், இளமையும் கொண்டவர் நித்தியானந்தா. என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்' என்று அழைக்க வேண்டும்" என்று சொன்னார்.

வாய் நிறைய பல்லோடு பேசிய நித்தியானந்தா,"மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன்.அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு,புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன்.இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன்.ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும்,24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும்" என்று சொல்லி அதிரவைத்தார்.


கொதித்தெழுந்த மதுரைவாசிகள் 

இந்த அறிவிப்பு மதுரைவாசிகளை கொதித்தெழ வைத்தது.சின்னச் சின்ன அமைப்புகள் கூட, நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தன.மதுரை ஆதீனம் பதட்டப்பகுதியானது.அங்கே 24 மணி நேரமும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பதிலுக்கு நித்தியின் பெண் சீடர்கள்,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.ஒரு தொலைக்காட்சிக்கு எதிராகவும்,இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தையும் கண்டித்து,உலகம் முழுக்க உள்ள நித்தியின் தியான மையங்களில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அவரது வெளிநாட்டு சீடர்கள்.
இதற்கிடையே, "ஆதீன மடத்தில் 16,18 வயதுப் பெண்கள் துப்பட்டாவும், பேண்ட்டும் அணியாமல் கவர்ச்சியாக நடமாடுகிறார்கள்.ஆங்காங்கே படுக்கைகள் எல்லாம் கிடக்கிறது.தவறான செயல்கள் நடக்கிற இடம் மாதிரி இருக்கிறது"என்று கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்தார் மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற லட்டர் பேடு இயக்கத் தலைவர் முத்துராஜ்.

மே மாத இறுதியில்,கிரானைட் விவகாரத்தால் கலெக்டர் சகாயம் மாற்றம் செய்யப்பட,அது தன்னால் தான் நிகழ்ந்தது என்பது போல் பந்தா காட்டினார் நித்தியானந்தா."எல்லாம் இறைவன் செயல்" என்றார் அருணகிரிநாதர்."புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா என் நண்பர் தான்"என்றார் நித்தி.

மடாதிபதிகளின் எச்சரிக்கை

இதற்கிடையே,மதுரை ஆதீனத்தில் நடந்த இந்த கிறுக்குத்தனமான முடிவு குறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தின் பிரதான மடதிபதிகள் எல்லாம் மே 1-ம் தேதி மயிலாடுதுறையில் அவசரக் கூட்டம் நடத்தினார்கள்.திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தருமபுரம்,குன்றக்குடி,திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

"செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததை,10 நாட்களில் திரும்பப் பெறவேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்"என்று அந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


நித்தியின் மிரட்டல்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை ஆதீனத்தில் அருணகிரிநாதரும்,
நித்தியானந்தாவும் ஒரு பிரஸ் மீட் வைத்தனர்.அதில் முழங்கிய நித்தியானந்தா, "என்னை ஆதீனமாக நியமித்தது சரில்லை என்றால், சந்நிதானத்திடம் தானே பேசியிருக்க வேண்டும்? ஆனால், காரணம் இல்லாமல் என்னை இழுத்ததனால், உலகம் முழுக்க இருக்கிற என்னுடைய பக்தர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இப்போது நான் பின்வாங்கினால்,அசிங்கம். எனக்கு எதிராக தீர்மானம் போட்ட மடாதிபதிகளுக்கு, 10 நாட்கள் நான் கெடு கொடுக்கிறேன். அதற்குள், என்னைப் பற்றிய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் விட்டுவிடுவேன்.இல்லை என்றால் தருமை ஆதீனத்தின் முன், என்னுடைய பக்தர்கள் தொடர் காலவரையற்ற போராட்டம் நடத்துவார்கள்.என்னால் அதைத் தடுக்க முடியாது.

அதேபோல,கூட்டுச் சதி 120(பி),மான நஷ்டம்,அவதூறு ஏற்படுத்துதல் 100, 101,சாதி பற்றி சரியான தவல்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது 153(ஏ), என்னுடைய பக்தர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தியது 295(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய மடங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மடாதிபதிகள் மீது தனித்தனியாக வழக்குத் தொடர்வார்கள்" என்று மிரட்டல் விடுத்தார் நித்தி. "இதுக்கு மேலும், இந்து அமைப்புகள் என்ற பெயரில் லோக்கல் ரௌடிகள் வயலன்ஸில் ஈடுபட்டால், அதற்கும் திருப்பனந்தாள் ஆதீனமே பொறுப்பு" என்றும் எச்சரித்தார் நித்தியானந்தா.


வைஸ்ணவி மீது தாக்குதல்


நித்தி மடத்திற்குள் நுழைந்ததும்,அருணகிரிநாதரின் காரியதரசியான வைஸ்ணவியின் முக்கியத்துவம்குறைக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் வைஸ்ணவிக்கும், நித்தியின் சீடரின் மனைவிக்கும் சண்டை வந்தது.உடனே, நித்தியின் ஆட்கள் அவரைத் தாக்கினார்கள்.அதைத் தடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில்,ஆதீனத்துடன் கோபித்துக் கொண்டு மடத்தில் இருந்து காணாமல் போனார் வைஸ்ணவி.

பின்பு,வைஸ்ணவி தாக்குதல் பற்றி விளக்கம் கொடுத்த நித்தி,"ஆதீனத்தில் இருந்த யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை.அத்தனை பேரும் பணியில் இருக்கிறார்கள். தினமும் 20 மணி நேரம் உழைக்கின்ற 33 வயதுக்கு உட்பட்ட 1,800 இளைஞர்களைக்கொண்ட ஒரு மிகப் பெரிய 'ஒர்க்கஹாலிக் குரூப்' நாங்கள். பழைய ஆட்கள் வேறு மாதிரி செட்-அப்பில் பணி செய்திருப்பார்கள். அவர்களால் எங்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், சிறுசிறு சச்சரவுகள். வைஷ்ணவிக்கும் எங்களது சீடர்களுக்கும் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கு.யாரும் அவரை அடிக்கவில்லை'' என்றார்.


நித்திக்கு வந்த சிக்கல்


நித்தி மதுரையில் இருந்த நாள் முழுக்க தினம் தினம் 'பிரஸ் மீட்' வைத்து யாரையாவது வசை பாடிக் கொண்டே இருந்தார்.மருத்துவ முகாம்,அன்னதானத் திட்டம் போன்றவற்றைத் தொடங்கி வைத்த அவர்,அடுத்து மருத்துவக் கல்லூரியும், பெரிய பெரிய கல்வி நிறுவனங்களையும் அமைக்கப் போவதாகவும் 'பீலா' விட்டார்.

ரஞ்சிதா விவகாரத்தில் அழிந்து போன தன்னுடைய இமேஜை ஆதீனப் பதவி மூலம் உயர்த்திவிட்டதாக அவர் கருதிய நேரத்தில், ஆர்த்தி ராவ் சொன்ன செக்ஸ் புகார்கள் விஸ்வமூபம் எடுத்தன.தப்பியோடி தலைமறைவாகும் சூழ்நிலைக்கு ஆளானார் நித்தி.

அந்த பரபர நாட்கள் பற்றிய தகவல்கள் நாளை....


http://news.vikatan.com/article.php?module=news&aid=15626

Friday, March 1, 2013

"நித்தி' ஆஸ்ரமத்தில் 1,008 லிங்கம் அகற்றம்

மார்ச் 01,2013,06:04 IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டிருந்த, 1,008 லிங்கங்கள் அகற்றப்பட்டது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அன்னதானம், மீண்டும் துவங்கப்பட்டது.
திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 1,008 லிங்கம் அமைக்கப்பட்டு, தினந்தோறும் சிறப்பு பூஜை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை நடந்தது.


இதை, அறநிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டது. தகவல் அறிந்த ஆஸ்ரம நிர்வாகம், உடனடியாக அங்கிருந்த, லிங்கங்கள் முழுவதும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டன. அங்கிருந்த சிலைகளை அகற்றி, அங்குள்ள ராட்சத கன்டெய்னரில் அடுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.


போலீஸார், "வழக்கு நடப்பதால், அங்கிருந்து லிங்கங்களை அகற்றக்கூடாது' எனக்கூறி, தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தற்போது, நித்தியானந்தா ஆஸ்ரமத்தை, அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்த, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.


அதையடுத்து, லிங்கம் முழுவதும், பூஜை செய்யப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட லிங்கங்கள், ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளதா, அல்லது, வெளியில் எடுத்து செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.


http://www.dinamalar.com/news_detail.asp?id=657932

Saturday, February 16, 2013

நித்தியானந்தா குளிக்க போகும் போது துப்பாக்கி!

Posted on 15.2.13
நம்ம நித்தி சுவாமிகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார். அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆஜரானார், நித்தியானந்தா. திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 கூடாரங்களில், சினிமா செட் போல பளபளத்தது நித்தியின் சுமார் 100 பக்தர்களை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து இறக்கி அசத்தினார் நித்தி. நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைவில்லாத வசதிகளுடன் இருந்த நித்தியின் கூடாரத்தில், கடுமையான கட்டுக் காவல். அனுமதி இன்றி உள்ளே யாரும் நுழைய முடியாது.

ராஜக் குளியல் செய்வதற்காக நித்தி, ஆளுயர ரோஜா மாலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஊர்​வலமாக வந்தார். ஊர்வலத்துக்காக செட்டப் செய்யப்பட்டிருந்த ரதத்தில் நித்திக்காக வெள்ளி சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது.
நித்திக்குப் பாதுகாப்பாகத் துப்பாக்கி ஏந்திய இரு கமாண்டோக்களும் உடன் வந்தது அங்கு வந்திருந்த சாதுக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யார் இந்த வி.ஐ.பி. சாது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டனர்.

சரி.. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு கொடுத்தது யாரு? மத்திய அரசா? உ.பி. அரசா ?

நித்தி வட்டாரங்களில் விசாரித்தபோது, தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட பாதுகாப்பு என்றார்கள். இதற்கு அந்த மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏஜென்சியின் யூனிபார்மில் இல்லாமல், கமாண்டோ பாணியில் உடையணிந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது, நித்தி விடுத்த கோரிக்கையாம்! (அந்த டிரெஸ்ஸூக்கு மேலதிக கட்டணம் உண்டு)

அட, இப்படியொரு செட்டப்பில் மதுரை வந்து, அருணகிரியாரை மிரள வைக்கலாமே!

http://www.cinekolly.com/2013/02/blog-post_2224.html

நித்தியானந்தாவிற்கு கவுரவ பட்டம் அளித்ததற்கு எதிர்ப்பு!


அலகாபாத், பிப். 15 - கும்பமேளாவுக்குப் போன நித்தியானந்தா, அங்கே சாதுக்களிடையே சண்டையை மூட்டி விட்டு வந்திருக்கிறார். கும்பமேளா என்பது ஆன்மீகத் திருவிழாவாக இருந்தாலும் இந்து மதத்தைக் காக்க தற்கொலைப்படையாக செயல்படும் அகாடாக்களில் இடம்பெற்றுள்ள சாதுக்களின் சங்கமமாகவே இருந்து வருகிறது. 
இம்முறை கும்பமேளாவில் சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவும் கலந்து கொண்டார். அவர் சாரட் வண்டியில் போய் புனித நீராடியதன் பின்னணி இப்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது. அகாடாக்களில் முக்கியமானது நிர்வாண சாதுக்களின் அமைப்பான மஹாநிர்வாணி என்பது. இந்த அகாடா சார்பில் நித்தியானந்தாவுக்கு மஹா மண்டலேஸ்வர் என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டத்துடன்தான் சாரட் வண்டியில் வெள்ளி சிம்மாசனத்துடன் போய் புனித நீராடியிருக்கிறார் நித்தியானந்தா. 
ஆனால் மஹா மண்டலேஸ்வர் என்ற பட்டம் கொடுத்ததற்கு பிற அகாடாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏனெனில் இந்த மஹா மண்டலேஸ்வர் என்ற பட்டம் பொதுவாக 13 அகாடாக்களுக்குமான தலைவர் பதவிக்குரியது. அப்படிப் பட்ட பட்டத்தை ஒரு சர்ச்சைக்குரிய சாமியாருக்கு கொடுப்பதா என்பதுதான் பிற அகாடாக்களின் கேள்வி. ஆனால் நிர்வாண சாதுக்கள் அமைப்போ, தென்னிந்திய சாதுக்களுக்கும் வட இந்திய சாதுக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தவே மஹா மண்டலேஸ்வர் பட்டம் கொடுக்கப்பட்டதாகவும் இப்பட்டம் கொடுக்கப்பட்டதாலேயே அகாடாக்களின் தலைவராகி விடமாட்டார் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது.

http://www.thinaboomi.com/2013/02/14/19355.html



Monday, February 4, 2013

Madan Patel to get new title

 Feb 04, 2013


Madan Patel to get new title
The hue and cry is over for Madan Patel most ambitious project announced two years ago. The High Court intervened in the case of ‘Satynanda’ controversial film said to be on the life Sri Nityananda.

Two years ago in December when I announced the film I suspected danger to my film. It happened in a series of attacks but my purpose was to alert the public especially women on such fake Swmajis. Some of the dignitaries also joined in the attack on my film is what perturbed me most. Look at what happened in a series I was not wrong in assessment.

However the HC has asked for change in the title. I am doing is to via contest for the title. I would pick the right one award the winner with a car worth Rs.5 lakhs. The title should be sent in four days to madhanpatel@gmail.com, interested persons can SMS title to phone No. 9964450787 and 8277364490.

‘Satyananda’ a film stated to be on Nithyananda Swamy stars Ravi Chetan as hero. The film has story, screenplay, and direction from Madan Patel.

At the media address Madan Patel stated that further trouble to him he would go for ‘Thamate’ chaluvali at the Ashram of Nitynananda.

Actor Ravi Chetan present at the media address on Sunday faced threat on his life filed a complaint against Nithynanda for any damage to his life. 60 films in the career this is the risky role I have done says Ravi Chetan. 


http://www.supergoodmovies.com/53869/sandalwood/madan-patel-to-get-new-title-news-details

Monday, January 7, 2013

நித்தியானந்தாவை நிம்மதி இழக்கச் செய்து விட்டது போலீஸ்



. கெடுபிடி காரணமாக நித்தியானந்தா தனது பிறந்த நாள் விழா வை, திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே எளிமையாகக் கொண்டாடி முடித்ததில், சீடர் களுக்குப் பலத்த ஏமாற்றம்! உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தும் பிரபலம் ஆக முடியாத நித்யானந்தா, ஒரே ஒரு வீடியோவால் தலைமறைவு, தப்பி ஓட்டம், அதிரடிக் கைது என சர்ச்சைகளின் நாயகன் ஆனார். அடுத்து, மதுரை ஆதீனத்தோடு கைகோத்து தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்க வைத்தார். இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு அடுக்கடுக்காகப் பல பிரச் னைகள் ஏற்பட, நித்தியைக் கை கழுவியதோடு அவரது சீடர்களையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தன் பூர்வீக இடமான திருவண்ணாமலை ஆசிரமத்தி​லேயே தங்கினார் நித்தி. அந்த ஆசிரமத்தையும் இந்து அறநிலையத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர். ஆடிப்போன நித்தி, மூத்த வழக் கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி, கோர்ட்டுக்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், 

கடந்த 6-ம் தேதி அவருடைய 36-வது அவதாரப் பெருநாள் விழாவை (அதாங்க, பிறந்த நாள் விழா!) பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டம் போட்டிருந்தார். அதற்காக அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே மேடை அமைக்கப்​பட்டு இருந்தது. ஒயிலாட்டம், புலியாட்டம், தாரை தப்பட்டை, கேரள செண்டை மேளம் முழங்க மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளுடன் வீதி உலா, ஆசிரம வளாகத்தில் சத்சங்க விழா, பின்னர் பக்தர்​களுக்கு ஆசி வழங்குதல் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்த நாளான 6-ம் தேதி அதிகாலையில் நித்தியின் வருகைக்காக அண்ணாமலையார் கோயிலில் அவரது சீடர்கள் காத்திருந்தனர். நேரம் ஆனதே தவிர, அவர் வரவில்லை. 

பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியே வராமல் சிறை வைக்கப்பட்டவர்போல் அங்கேயே இருந்தார். நித்தியின் பக்தர்கள் சிலரிடம் பேசியபோது, ''சுவாமியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். பிறந்த நாள் அன்று அதிகாலையிலேயே அண் ணாமலையார் கோயிலுக்கு சீடர்களுடன் வந்து அபிஷேகம் செய்வார். அதன்பின், அருண கிரிநாதர் சன்னதிக்குச் சென்று அங்கேயும் பூஜைகள் செய்வார். இந்த முறை அபிஷேகத்துக்கு சுவாமியுடன் ஐந்து பேரைதான் அனுமதிக்க முடியும் என்று கோயில் சார்பில் சொல்லப்பட்டது. இதனால் பிறந்த நாள் அதுவுமாக காலையிலேயே ஏன் வீண் பிரச்னை என்று கோயிலுக்கே வராமல் இருந்து விட்டார். அதற்குப் பதில், பெங்களூரு கருமாரியம்மன் ஆசிரமத்தின் மதுக்கர் சுவாமிகளுடன் அவரது முக்கியச் சீடர்கள் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுச் சென்றனர். மற்ற நிகழ்ச்சிகளையாவது சிறப்பாக நடத்த இருந்தோம். ஆனால், நகரில் எங்களது விழாவுக்கும் ஊர்வலத்துக்கும் அனுமதி தர போலீஸார் மறுத்து விட்டனர். 


இதனால், அந்த நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு மாலையில் ஆசிரமத்தில் கொண்டாட இருந்தோம். அதற்காக ஆசிரமத்தில் பெரிய மேடை அமைத்து அலங்காரங்கள் செய்து இருந்தோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என்று போலீஸார் அதற்கும் அனுமதி தர மறுத்து விட்டனர். நித்தியானந்தரின் மெழுகு சிலை பொம்மைகளும் ஓரங்கட்டப்பட்டன. கடைசியில், சத்சங்க நிகழ்ச்சியை மட்டும் ஒரு பெரிய ஹாலில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ நாராயண் சாய் சுவாமிகள் வந்து, நித்தியானந்​தரை வாழ்த்திச் சென்றார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அங்கு இருந்தபடியே சுவாமி ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்​பட்டது. பல தடைகளை மீறி, சுவாமி விழாவை நடத்திக் காட்டினார்'' என்றனர். இந்த விழாவுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆட் கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக நகரில் லாட்ஜ், திருமண மண்டபங்கள் புக் செய்யப்பட்டன. சளைக் காமல் பேட்டி கொடுக்கும் நித்தி, இந்த முறை மீடியாவையைச் சந்திப்பதையே தவிர்த்தார். நித்தி விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எஸ்.பி. முத்தரசியிடம் கேட்டதற்கு, ''கோயிலைச் சுற்றி யாரும் ஊர்வலம் வரக் கூடாது என் பதால் அனுமதி மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் விழாவுக்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்றார்

http://navakirinilavarai.blogspot.in/2013/01/blog-post_8055.html