மீண்டும் கிளம்புது நித்தி "சிடி' விவகாரம்
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013,00:34 IST
சென்னை : நித்தியானந்தா சாமியார் தொடர்பான, "சிடி' குறித்து, ஒளிபரப்பு உள்ளடக்க புகாரை விசாரிக்கும் கவுன்சில் (பி.சி.சி.சி.,) அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதாக, முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கூறியுள்ளார். "நித்தி - நடிகை ரஞ்சிதா தொடர்பான, "சிடி'யை ஒளிபரப்பிய, தனியார் "டிவி' சேனல், மன்னிப்புக் கோர வேண்டும்; அந்த, "சிடி' போலியாக சித்தரிக்கப்பட்டது' என, பி.சி.சி.சி., உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையான விசாரணையின்றி அளிக்கப்பட்டுள்ளது, என, குற்றம் சாட்டும், லெனின் கருப்பன் கூறியதாவது: நித்தி - ரஞ்சிதா தொடர்பான, "சிடி'யை, தொலைக்காட்சிகள் தொடர்ந்து வெளியிடுவதால், பெண்கள், இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த, "சிடி'யை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என, வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த, கர்நாடக ஐகோர்ட், "சிடி' ஒளிபரப்புக்கு தடை விதித்தது. இத்தடைக்குப் பின், தனியார் தொலைகாட்சி ஒன்று, நித்தி - ரஞ்சிதா தொடர்பான, "சிடி'யை ஒளிபரப்பியது. கோர்ட் உத்தரவை மீறி, ஒளிபரப்பியது தொடர்பாக, ஐகோர்ட்டில் முறையிட்டனர். இம்முறையீட்டை விசாரித்த ஐகோர்ட், இதுகுறித்து, பி.சி.சி.சி., முடிவு செய்ய பரிந்துரைத்தது.
மனுவை விசாரித்த, பி.சி.சி.சி., கோர்ட் உத்தரவை மீறியதற்கான, நடவடிக்கையை எடுப்பதோடு, "சிடி' போலியாக சித்தரிக்கப்பட்டது என, கூறியுள்ளது. நித்தியானந்தா தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. மேலும், "சிடி' சித்தரிக்கப்பட்டதல்ல; உண்மையானது என, டில்லி மாநில தடய அறிவியல் ஆய்வகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், "சிடி' தொடர்பான விசாரணையை முறையாக செய்யாமல், பி.சி.சி.சி., வெளியிட்டுள்ள உத்தரவு, குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளேன். இவ்வாறு, லெனின் கருப்பன் கூறினார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=798381
Summary:
BCCC (Broadcast Content Complaints Council) has issued an order regarding the Nithyananda scandal CD. The order questioned the authenticity of the video. The case against Nithyananda is currently pending in court, and the forensic report from FSL Delhi finds the video to be authentic. Under the circumstance, it is very unfortunate and I will be appealing to the BCCC reconsider this order, says Lenin Karuppan.

No comments:
Post a Comment