Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label TAMILNADU. Show all posts
Showing posts with label TAMILNADU. Show all posts

Monday, July 28, 2014

CID sets Medical tests for Nithyananda on 6th August


CID sets Medical tests for Nithyananda on 6th August, Karnataka High Court Orders to do Tests to Nityananda Swami, Swami Nithyananda Can't Escape This Time,

Friday, July 4, 2014

நித்தியானந்தா வருகைக்கு எதிர்ப்பு; கறுப்பு கொடி காட்ட முயன்ற தம்பதிக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நாமக்கல்லில் உள்ள மாதேஸ்வரன் என்பவரது வீட்டுக்கு, நேற்று காலை, 11 மணிக்கு நித்தியானந்தர், அவரது சீடர்களுடன் சென்றார். அங்கு நடந்த 15 நிமிட பூஜையில் பங்கேற்று விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அதன்பின் திருச்செங்கோடு, , பள்ளிபாளையம் வழியாக ஈரோடு செல்வதாக கூறப்பட்டது. அதையடுத்து, அவரது சீடர்கள் ஆங்காங்கே வரவேற்ப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

திருச்செங்கோடுக்கு நித்தியானந்தர் வருவதை அறிந்த, செங்கோட்டுவேலு என்பவரும் அவரது மனைவி வசந்தி என்பவரும் திருச்செங்கோடு நகர காவல்நிலையத்துக்கு வந்து, நித்தியானந்தனுக்கு கறுப்புக்கொடி காட்ட அனுமதி கேட்டனர்.

இதற்க்கு போலீஸார் மறுத்ததுடன், நித்தியானந்தன் திருச்செங்கோடு நகரை விட்டு செல்லும் வரை தம்பதியர் இருவரையும் காவல் நிலையத்திலேயே தங்கவைத்து பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது போலீசார் அந்த தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆன்-லைனில் நித்தியானந்தர் பற்றிய தகவல்களை பரப்ப, கம்ப்யூட்டர் மூலமாக வேலை செய்த ஆர்டருக்கான பணம் தரவில்லை எனவும் செங்குட்டுவேலு, பெருமாள் என்ற இருவரிடம் இருந்து, லட்சக்கணக்கில் நித்தியானந்தர் மோசடி செய்ததாகவும் தெரிவிதுள்ளனர்.


http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=124608

Saturday, January 18, 2014

NEWS9: NITHYANANADA 'LANDS' IN TROUBLE AGAIN protests in badadi nithyananda ashram


Controversial godman Nithyananda has 'landed' in trouble again. Activists belonging to a pro-Kannada organisation have been protesting against the godman near ashram in Bidadi. They have sought immediate action from the district administration seeking demolition of various buildings constructed by the godman. Huge posters have appeared near the protest venue questioning the land tracts which have been acquired by Nithyananda. The posters also seek clarification on how much of the land has been converted and whether permission for the construction of buildings was obtained or not.

Sunday, June 2, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 3

கே.கே.மகேஷ்

படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 



ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற வாசகம் சாமியார்களுக்கும் பொருந்தும். 27.3.12 ஆம் தேதி - ஆப்பசைத்த குரங்கு போல, மதுரை ஆதீனம் வசமாகச் சிக்கிய நாள். பணம், புகழ், தங்கம் என்று நித்தி காட்டிய ஆசைகளுக்கு மயங்கிய பின்னர் அருணகிரிநாதரின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகப் போனது.


மதுரை ஆதீனமாக நித்தி


27.3.12 ஆம் தேதி கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில்,மதுரையின் 293 ஆவது ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்தார் அருணகிரிநாதர்.தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மதுரை ஆதீனம்,மற்றொரு சிம்மாசனத்தில் இருந்த நித்திக்கு தங்க கிரீடம் அணிவித்து,6 அடி உயர தங்கச் செங்கோலை வழங்கி 'பதவிப்பிரமாணம்' செய்து வைத்தார்.பதிலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை அருணகிரியிடம் கொடுத்தார் நித்தி.
அப்போது பேசிய அருணகிரி, ''மதுரை ஆதீனத்தை, எமக்குப் பிறகு யார் கட்டிக்காக்கப் போகிறார்கள் என்ற கவலையில் யாம் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தோம்.அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமானும்,பார்வதியும் எமது கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு' என்று சொன்னார்கள்.அதன்பிறகு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன்.அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவரின் செயல்பாடுகள் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

பார்த்தவுடன் கவரும் தோற்றமும், கம்பீர உருவமும், இளமையும் கொண்டவர் நித்தியானந்தா. என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்' என்று அழைக்க வேண்டும்" என்று சொன்னார்.

வாய் நிறைய பல்லோடு பேசிய நித்தியானந்தா,"மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன்.அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு,புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன்.இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன்.ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும்,24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும்" என்று சொல்லி அதிரவைத்தார்.


கொதித்தெழுந்த மதுரைவாசிகள் 

இந்த அறிவிப்பு மதுரைவாசிகளை கொதித்தெழ வைத்தது.சின்னச் சின்ன அமைப்புகள் கூட, நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தன.மதுரை ஆதீனம் பதட்டப்பகுதியானது.அங்கே 24 மணி நேரமும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பதிலுக்கு நித்தியின் பெண் சீடர்கள்,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.ஒரு தொலைக்காட்சிக்கு எதிராகவும்,இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தையும் கண்டித்து,உலகம் முழுக்க உள்ள நித்தியின் தியான மையங்களில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அவரது வெளிநாட்டு சீடர்கள்.
இதற்கிடையே, "ஆதீன மடத்தில் 16,18 வயதுப் பெண்கள் துப்பட்டாவும், பேண்ட்டும் அணியாமல் கவர்ச்சியாக நடமாடுகிறார்கள்.ஆங்காங்கே படுக்கைகள் எல்லாம் கிடக்கிறது.தவறான செயல்கள் நடக்கிற இடம் மாதிரி இருக்கிறது"என்று கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்தார் மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற லட்டர் பேடு இயக்கத் தலைவர் முத்துராஜ்.

மே மாத இறுதியில்,கிரானைட் விவகாரத்தால் கலெக்டர் சகாயம் மாற்றம் செய்யப்பட,அது தன்னால் தான் நிகழ்ந்தது என்பது போல் பந்தா காட்டினார் நித்தியானந்தா."எல்லாம் இறைவன் செயல்" என்றார் அருணகிரிநாதர்."புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா என் நண்பர் தான்"என்றார் நித்தி.

மடாதிபதிகளின் எச்சரிக்கை

இதற்கிடையே,மதுரை ஆதீனத்தில் நடந்த இந்த கிறுக்குத்தனமான முடிவு குறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தின் பிரதான மடதிபதிகள் எல்லாம் மே 1-ம் தேதி மயிலாடுதுறையில் அவசரக் கூட்டம் நடத்தினார்கள்.திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தருமபுரம்,குன்றக்குடி,திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

"செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததை,10 நாட்களில் திரும்பப் பெறவேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்"என்று அந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


நித்தியின் மிரட்டல்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை ஆதீனத்தில் அருணகிரிநாதரும்,
நித்தியானந்தாவும் ஒரு பிரஸ் மீட் வைத்தனர்.அதில் முழங்கிய நித்தியானந்தா, "என்னை ஆதீனமாக நியமித்தது சரில்லை என்றால், சந்நிதானத்திடம் தானே பேசியிருக்க வேண்டும்? ஆனால், காரணம் இல்லாமல் என்னை இழுத்ததனால், உலகம் முழுக்க இருக்கிற என்னுடைய பக்தர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இப்போது நான் பின்வாங்கினால்,அசிங்கம். எனக்கு எதிராக தீர்மானம் போட்ட மடாதிபதிகளுக்கு, 10 நாட்கள் நான் கெடு கொடுக்கிறேன். அதற்குள், என்னைப் பற்றிய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் விட்டுவிடுவேன்.இல்லை என்றால் தருமை ஆதீனத்தின் முன், என்னுடைய பக்தர்கள் தொடர் காலவரையற்ற போராட்டம் நடத்துவார்கள்.என்னால் அதைத் தடுக்க முடியாது.

அதேபோல,கூட்டுச் சதி 120(பி),மான நஷ்டம்,அவதூறு ஏற்படுத்துதல் 100, 101,சாதி பற்றி சரியான தவல்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது 153(ஏ), என்னுடைய பக்தர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தியது 295(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய மடங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மடாதிபதிகள் மீது தனித்தனியாக வழக்குத் தொடர்வார்கள்" என்று மிரட்டல் விடுத்தார் நித்தி. "இதுக்கு மேலும், இந்து அமைப்புகள் என்ற பெயரில் லோக்கல் ரௌடிகள் வயலன்ஸில் ஈடுபட்டால், அதற்கும் திருப்பனந்தாள் ஆதீனமே பொறுப்பு" என்றும் எச்சரித்தார் நித்தியானந்தா.


வைஸ்ணவி மீது தாக்குதல்


நித்தி மடத்திற்குள் நுழைந்ததும்,அருணகிரிநாதரின் காரியதரசியான வைஸ்ணவியின் முக்கியத்துவம்குறைக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் வைஸ்ணவிக்கும், நித்தியின் சீடரின் மனைவிக்கும் சண்டை வந்தது.உடனே, நித்தியின் ஆட்கள் அவரைத் தாக்கினார்கள்.அதைத் தடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில்,ஆதீனத்துடன் கோபித்துக் கொண்டு மடத்தில் இருந்து காணாமல் போனார் வைஸ்ணவி.

பின்பு,வைஸ்ணவி தாக்குதல் பற்றி விளக்கம் கொடுத்த நித்தி,"ஆதீனத்தில் இருந்த யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை.அத்தனை பேரும் பணியில் இருக்கிறார்கள். தினமும் 20 மணி நேரம் உழைக்கின்ற 33 வயதுக்கு உட்பட்ட 1,800 இளைஞர்களைக்கொண்ட ஒரு மிகப் பெரிய 'ஒர்க்கஹாலிக் குரூப்' நாங்கள். பழைய ஆட்கள் வேறு மாதிரி செட்-அப்பில் பணி செய்திருப்பார்கள். அவர்களால் எங்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், சிறுசிறு சச்சரவுகள். வைஷ்ணவிக்கும் எங்களது சீடர்களுக்கும் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கு.யாரும் அவரை அடிக்கவில்லை'' என்றார்.


நித்திக்கு வந்த சிக்கல்


நித்தி மதுரையில் இருந்த நாள் முழுக்க தினம் தினம் 'பிரஸ் மீட்' வைத்து யாரையாவது வசை பாடிக் கொண்டே இருந்தார்.மருத்துவ முகாம்,அன்னதானத் திட்டம் போன்றவற்றைத் தொடங்கி வைத்த அவர்,அடுத்து மருத்துவக் கல்லூரியும், பெரிய பெரிய கல்வி நிறுவனங்களையும் அமைக்கப் போவதாகவும் 'பீலா' விட்டார்.

ரஞ்சிதா விவகாரத்தில் அழிந்து போன தன்னுடைய இமேஜை ஆதீனப் பதவி மூலம் உயர்த்திவிட்டதாக அவர் கருதிய நேரத்தில், ஆர்த்தி ராவ் சொன்ன செக்ஸ் புகார்கள் விஸ்வமூபம் எடுத்தன.தப்பியோடி தலைமறைவாகும் சூழ்நிலைக்கு ஆளானார் நித்தி.

அந்த பரபர நாட்கள் பற்றிய தகவல்கள் நாளை....


http://news.vikatan.com/article.php?module=news&aid=15626

Monday, March 18, 2013

Kannada groups protest against Nithyananda, "24 மணி நேரத்திற்குள் நித்யானந்தாவை வெளியேற்றுங்க!' கர்நாடக அரசுக்கு கன்னட அமைப்புகள் கெடு

மார்ச் 18,2013,02:28 IST


பெங்களூரு: "கர்நாடகாவிலிருந்து நித்யானந்தாவை, 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும்' என, வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் கெடு விதித்துள்ளன.கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்ற, நித்யானந்தாவுக்கு, எதிரான போராட்டம் வலுத்துள்ளது. தினமும், ஏதாவது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி வரும் நித்யானந்தா, கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்களின் மீது, கண் வைத்துள்ளதால், கன்னட அமைப்பினர் உட்பட, பல்வேறு மடாதிபதிகள் கடும் கோபமடைந்து உள்ளனர்."நித்யானந்தா, கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்' என, கன்னட அமைப்புகளான, நவ நிர்மாண கன்னடம், கஸ்தூரி கன்னடம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன.இந்நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர். "அவரை கர்நாடகாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்' என, மாநில அரசை வலியுறுத்தினர். பின், நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அதன் முன், இறப்பின் போது செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.போராட்டக்காரர்கள் கூறியதாவது:நித்யானந்தா, ஆன்மிகப் போர்வையில், கலாசார சீர்கேடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மிக விஷயங்களில் அக்கறை காட்டும் பெண்களை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி வருகிறார்.பிடதி தியான பீடத்தில், எந்த விதமான ஆன்மிக நிகழ்வும் நடப்பதில்லை. இந்த தியான பீடம், ஐந்து நட்சத்திர ஓட்டல் போல செயல்படுகிறது. நித்யானந்தாவை, கர்நாடகாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என, கன்னட அமைப்புகள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனாலும், எந்தப் பயனுமில்லை.கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா கண் வைத்துள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க, அரசோ, மாவட்ட நிர்வாகமோ முன்வரவில்லை. தமிழகத்தில், மதுரை ஆதீனத்தை கைப்பற்ற முயன்று தோற்றவர். அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால், கர்நாடகாவில் மடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இனிமேல், எங்களின் போராட்டம் ஆவேசமாக இருக்கும்.கர்நாடகாவிலிருந்து அவரை வெளியேற்ற, 24 மணி நேரம் அரசுக்கு "கெடு' விதிக்கிறோம். அதற்குள் நித்யானந்தாவை வெளியேற்றாவிட்டால், ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியது நேரிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த நித்யானந்தா போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இப்போராட்டங்களால் பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=669481&Print=1



நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு !

பெங்களூரூ : கர்நாடகாவில் நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு செய்து வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்றதாக நித்யானந்தா மீது புகார் எழுந்தது. இதனால் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டம் கர்நாடாவில் வலுத்து வருகின்றது.
இந்த நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.
பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர்.
பின்பு, நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அந்த படத்தின் முன்பு, இறந்தவர்களுக்கு செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.
இதனால், பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகளின் இந்த போராட்டத்திற்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
http://www.arasiyaltoday.com/archives/13183

Tuesday, February 19, 2013

TN govt challenges court order against Nithyananda

The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (HR&CE) department has challenged a single judge order quashing the government’s show-cause notice to bring Nithyananda’s ashram in Thiruvannamalai under state control, 

It may be recalled that the judge quashed the notice by the government earlier this month, stating that the authorities had not collected material particulars of the trust, including the trust deed, before sending its notice. Now the government has challenged the order. 

A few days ago, the self-styled godman was clandestinely conferred the title of “Mahamandaleshwar” by the Panchayati Akhara Mahanirvani, a prominent akhara, during Maha Kumbh.

The title enables Nityananda to sit atop a chariot and take the holy dip in the Sangam waters. The function in which Nityananda was anointed, was a closely guarded secret and the other akharas were not informed about it. Nor were the Mahakumbh officials invited as per tradition, according to reports. 



http://www.chennaivision.com/news/2013/24506.php

Thursday, January 10, 2013

பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேற வேண்டும்: நித்யானந்தாவுக்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்

Thursday, January 10, 2013, 14:52 [IST]


பெங்களூர்: பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கன்னட அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளதால் மறுபடியும் நித்தியானந்தா வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதுரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தப் பதவியிலிருந்து நித்தியானந்தாவைத் தூக்கினார் அருணகிரிநாதர். அதன் பிறகு 


திருவண்ணாமைலையிலும், பிடதியிலுமாக கேம்ப் மாறிக் கொண்டிருக்கிறார். நேற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிடதி ஆசிரமத்திற்கு நித்தியானந்தா வந்தார். அவருடன் வழக்கம் போல ஆதரவாளர்களும் கும்பலாகப் போனார்கள். அங்கு அவர் அருளுரை என்ற பெயரில் தனது ஆதரவாளர்களிடையே பேசினார். இந்த நிலையில் நித்தியானந்தா வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும் கர்நாடக நவநிர்மான் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து நித்தியானந்தாவே வெளியேறு என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அங்கிருந்த பேனரில் இருந்த நித்தியானந்தா படத்துக்கும் கரியைப் பூசி குதூகலித்தனர். கடைசியில் போலீஸார் வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி கலைந்துபோகச்  செய்தார்கள்.

http://tamil.oneindia.in/news/2013/01/10/india-kannada-organization-protests-against-nithyanantha-167749.html

http://www.maalaimalar.com/2013/01/10132044/Compaign-aganist-Nithyananda.html

Sunday, January 6, 2013

மடத்துக்குள் நுழைய மாட்டோம்: மதுரை ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்- நித்யானந்தா கோர்ட்டில் மனு

 -

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அருணகிரி நாதர் நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளைய ஆதீனம் பதவியி லிருந்து நித்யானந்தாவை நீக்கி அருணகிரி நாதர் உத்தரவிட்டார். 

இந்நிலையில் மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்யானந்தா அவரது சீடர்களை நுழைய தடை விதிக்க வேண்டும் என்று சப்-கோர்ட்டில் அருணகிரி நாதர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்து விட்டேன். அவர் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டபோதும் ஆதீனம் சொத்துக்களை நிர்வகிக்க நானும், அவரும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளை கலைக்கப்பட்டு விட்டது. எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டதை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தர விட வேண்டும். 

மேலும் மடத்துக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு நித்யானந்தா தரப்பில் பதில் தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டு வந்த நிலையில் அவரது தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்னை இளைய ஆதீனமாக நியமித்தது மரபுப்படி சரியானது தான். ஆதீன மடத்துக்கு நானும், எனது ஆதரவாளர்களும் நுழைய மாட்டோம். எந்த தொந்தரவும் எங்களால் ஏற்படாது. எனவே மதுரை ஆதீனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்யும்படி ஆதீனம் தரப்பிற்கு நீதிபதி குருவையா உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


http://www.maalaimalar.com/2013/01/06140343/madurai-aadheenam-petition-to.html

Thursday, January 3, 2013

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் புகார்

பதிவு செய்த நேரம்: 3-1-2013 14:19

சென்னை: நித்தியானந்தா கொலை மிரட்டல் விடுத்ததாக நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் புகர் அளிக்கப்பட்டுள்ளது.   திருச்செங்கோடு ஜனனி இன்போடெக் நிறுவன அதிபர் செங்கோட்டுவேல் புகார் மனு அளித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தப்படி தமக்கு நித்தியானந்தா ரூ.35 லட்சம் தரவேண்டியுள்ளதாக புகாரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவேண்டிய ரூ.35 லட்சத்தை கேட்ட தம்மை செல்போனில் நித்தியானந்தா மிரட்டியதாக குற்றச்சாட்டியுள்ளர்.

 http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=35815

Tuesday, December 11, 2012

புதிய தம்பிரான் நியமனம் ஏன்? ஆதீனத்தில் மீண்டும் நுழையும் நித்யானந்தா முயற்சி முறியடிப்பு

மதுரை : மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா மீண்டும் நுழைவதைத் தடுக்கவே புதிதாக தம்பிரான் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா கடந்த ஏப்ரலில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் நித்யானந்தா தகுதி இல்லாதவர் எனக் கூறியது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நித்யானந்தாவை ஆதீனம் நீக்கினார்.

இதன் பிறகு இளைய ஆதீனப் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் நீக்கப்பட்ட நித்யானந்தாவும் அவரது சீடர்களும் மீண்டும் ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டுமென மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆதீனம் அருணகிரிநாதர் வழக்கு தொடர்ந்தார். இதில் நித்யானந்தா எதிர்மனு தாக்கல் செய்துள் ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தன்னிடம் இருந்து இளைய ஆதீனப் பதவி பறிக்கப்பட்டாலும், அந்த இடத்திற்கு தனது நெருங்கிய சீடரான சொரூபனாந்தாவை நியமிக்கும்படி ஆதீனம் அருணகிரிநாதரிடம் ஏற்கனவே நித்யானந்தா வலியுறுத்தி வந்தார். அதை ஆதீனம் ஏற்கவில்லை. நித்யானந்தாவோ அவரது சீடர்களோ எந்த ரூபத்திலும் ஆதீன மடத்தில் மீண்டும் நுழைய அனுமதிக்க கூடாது என்பதில் ஆதீனம் உறுதியாக உள்ளார். இதையடுத்து அவரது முயற்சியைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

உடனடியாக இளைய ஆதீனம் என்று நியமனம் செய்தால் ஏதாவது சிக்கல் ஏற்படும் எனக் கருதி, அதற்குப் பதிலாக புதிதாக தம்புரான் (திருக்கூட்டத்துக்கு அடியவர்) பதவி உருவாக்கி, அதில் திருச்சிற்றம்பலம் சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருவாடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தவர். 32 வயதான இவர் திருநெல்வேலி தியாகராஜ நகரைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர். சைவப் பிள்ளை சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

“நித்யானந்தா நீக்கப்பட்டு விட்டதால், தம்பிரானாக நியமிக்கப்பட் டுள்ள திருச்சிற்றம்பலசுவாமி இளைய ஆதீனமாக ஆக்கப்படுவாரா? என்று ஆதீனத்திடம் கேட்டதற்கு, “ தம்பிரான் அடுத்து இளைய ஆதீனமா? என்பது சிவபெருமான் முடிவுபடி நடக்கும். தம்பிரான் நியமனத்திற்கு பல்வேறு ஆதீனங்கள், பக்த அமைப்பினர் என்னுடன் தொடர்பு கொண்டு வரவேற்பு தெரிவித்தனர். தம்பிரானுக்கு விரைவில் மந்த்ரகாசாயம் தீட்சை அளிக்கப்பட்டு முறையான சடங்குகள் நடத்தப்படும். அப்போது ஆதீன சம்பிரதாயப்பபடி தம்பிரான் தன் முடி, தாடியை அகற்றிக் கொள்வார். நித்யானந்தா குறித்து பேசுவதற்கு இனிமேல் எதுவும் இல்லை“ என்றார்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=33592

Monday, December 10, 2012

Madurai adheenam gets new ‘thambiran’

Dec 10, 2012, 06.39AM IST TNN


MADURAI: Senior pontiff of Madurai Adheenam Arunagirinatha Desikar has appointed a new "thambiran" (chief disciple) for the mutt.

Desikar announced the appointment and introduced Thiruchitrambala Thambiran (36) to reporters at the mutt premises on Sunday. He was earlier serving as thambiran of the Thiruvavaduthurai Aadheenam. He hails from Palayamkottai in Tirunelveli district and has done a diploma in dairy management.

It is a pre-requisite that a person who is appointed as junior pontiff should be a Thambiran in the particular mutt. In fact, the sudden announcement of Nithyananda as junior pontiff in April this year, bypassing such norms, had raised a hue and cry among Hindu outfits and other mutts in the state. Eventually, Nithyananda was removed from the position after the Madurai Adheenam faced the threat of being taken over by the state government.

However, Desikar did not commit as to whether Tiruchitrambala Thambiran would be made his junior pontiff in place of Nithyananda.

Interacting with media persons here, Desikar said Thiruchitrambala Thambiran expressed his desire to serve in the Madurai Aadheenam after the demise of Thiruvavaduthurai Aadheenam, Sivaprakasa Desiga Paramachariar Swamigal recently and he was not willing to remain back in the Aadheenam anymore. "Based on his request, he has been made the Thambiran of Madurai Adheenam", he said. When asked about the prospects of him being made the next pontiff, Desikar said, "It is the will of Lord Shiva and Parvathy". 
 http://m.timesofindia.com/city/madurai/Madurai-adheenam-gets-new-thambiran/articleshow/17552102.cms
 New Chief Priest appointed for Madurai Adheenam

Madurai | Monday, Dec 10 2012 IST
 Amid raging controversy after Tamil Nadu Government moved the court to take over the millennium-old Saivite Mutt 'Madurai Adheenam,' Sri Arunagirinatha Sri Gnanasambanda Desika Paramacharya Swamigal, also called as 'Arunagirinathar' - the 292nd Pontiff, has appointed a new 'Thambiran' (Chief Disciple) for the mutt. Thiruchitrambala Thambiran (36), who had earlier served as Thambiran of another ancient Saivite mutt 'Thiruvavaduthurai Adheenam', was appointed by Arunagirinathar, based on his request after the recent demise of Thiruvavaduthurai Pontiff Sivaprakasa Desiga Paramacharya Swamigal, said mutt sources today. There are possibilities of Thiruchitrambala Thambiran being made as the next Pontiff of Madurai mutt, as there is a pre-requisite that a person, who is appointed as junior Pontiff should be a Thambiran in the particular mutt.
Madurai Mutt was in the midst of controversy, after Arunagirinathar coroneted tainted god man Nithyananda as the junior Pontiff of the mutt on June 5, last. After strong protests from various Hindu outfits and Pontiffs of other Saivite mutts over appointment of Nithyananda, who was facing several sexual abuse charges, Tamilnadu government moved a lower court in Madurai to remove Arunagirinathar from the Pontiff post and to take over the administration of the mutt. Rattled over the government's move, Arunagirinathar sacked Nithyananda from the junior Pontiff . post on October 19. UNI GSM AKM ADB1014 NNNN
-- (UNI) -- 10ms2.xml
 http://news.webindia123.com/news/Articles/India/20121210/2116459.html

 மதுரை ஆதினத்தில் தம்பிரான் நியமனம்

 திருவாவடுதுரை: திருவாவடுதுரை ஆதினத்தில் தம்பிரானாக இருந்தவர் திருசிற்றம்பலம், திருவாவடுதுரை ஆதினத்தில் அனுமதி பெற்று , மதுரை அருணகிரிநாதரை சந்தித்து தம்பிரானாக ஏற்க்கும் படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட அருணகிரிநாதர் அவரை தம்பிரானாக நியமித்தார். இவர் மதுரை ஆதினத்தின் முதல் தம்பிரான் ஆவார்.
 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602442

Friday, December 7, 2012

Nithayananda files injunction

Nithyananda has filed an injunction petition at the Principal Sub-Court here seeking to implead Hindu Religious and Charitable Endowments (HR and CE) department in an original suit filed by the Madurai Adheenam.
On November 24, Nithyananda had raised objections to the Adheenam’s suit and sought time to file an injunction petition. On Wednesday, his advocates filed the injunction petition stating that the Department of HR and CE should be included as one of the respondents in the Adheenam’s suit.
Madurai Adheenam Arunagirinathar had originally filed the suit seeking directions to the sub-registrar of Madurai South to cancel the deed of a trust he had formed in collaboration with Nithyananda.

Interim prayer

In an interim prayer, he said Nithyananda and his followers should be restrained from entering the mutt.The case has been adjourned to December 7 following Hindu Religious and Charitable Endowments department’s request to file a counter affidavit. 

 http://www.thehindu.com/news/cities/Madurai/nithayananda-files-injunction/article4167998.ece

Wednesday, November 21, 2012

திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சிலைகள் அகற்றம்

21 November 2012 10:54 PM IST  
திருவண்ணாமலை
நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் லிங்கங்கள் பீடங்களிலிருந்து அகற்றி வைக்கப்பட்டுள்ளன.
 தமிழக அரசு ஆஸ்ரமத்தை கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் நித்யானந்தா ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு, நித்யானந்தேஸ்வரர்-நித்யானந்தேஸ்வரி சுவாமி சிலைகளுடன், 1008 லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.
கையகப்படுத்த நடவடிக்கை: இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் நித்யானந்தா ஆஸ்ரமத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. சுவாமி  சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் இடமாக இருப்பதால், இதை ஏன் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்நிலையில், நித்யானந்தா ஆஸ்ரமம் அனைத்து மதத்தினரும் வழிபடும் பொது இடம்.
எனவே, இந்து சமய அறநிலயைத்துறையின் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்ரமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.




சுவாமி சிலைகள் திடீர் அகற்றம்: இதற்கிடையே, ஆஸ்ரமத்தில் இருந்த அனைத்து சிலைகளும் திங்கள்கிழமை இரவோடு, இரவாக அகற்றி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆஸ்மரத்துக்கு வெளியே "இது தனியாருக்குச் சொந்தமான இடம். அனுமதி பெற்று உள்ளே வரவும்' என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
 சிலைகள் வைக்கப்பட்டிருப்பதால்தான் இந்து சமய அறநிலையத்துறை இவ்விடத்தை கோயிலாக கணக்கிட்டு, ஆஸ்ரமத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கையை முறியடிக்கவே இந்த சிலைகள் அகற்றம் என கூறப்படுகிறது.
ஆஸ்ரமம் விளக்கம்: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை ஆஸ்ரமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை நித்யானந்தா தியான பீட ஆஸ்ரமத்தில், ஒரு சர்வமத தியான மையமும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிக பிரபஞ்சவியல் பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இதற்கான கட்டுமானப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகளுக்காக ஆஸ்ரமத்தில் இருந்த 1008 லிங்கங்கள் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளன.
 http://dinamani.com/tamilnadu/article1347512.ece

TV9 - Nithyananda Cheating Hyderabad Ashram Donor In Land : "Nithya Bhu Vanchane"

A generous soul Sujata Reddy donated to Nithyananda a beautiful & sprawling 5 acre Rajarajeshwari temple in Hyderabad. Not only land but she also donated to Nithyananda around 50 lakhs cash for running the temple, with the condition that the temple will be used for spreading Vedic traditions, starting a veda patashala, etc. Nithyananda promised to do all that, but instead turned it soon into a business proposition that earns him money. After the sex sanda in 2010, the donor Mrs. Sujata Reddy was shocked and disappointed, so she requested Nithyananda lto return the temple. In March 2010 Nithyananda returned the 50 lacks cash she had donoated, with a promise to return the temple soon. But later, he not only refused to return the temple, but also brought an injunction (court order) to prevent Sujata Reddy or any of her family members from even entering the temple. The donor died in grief that she coud not even enter the temple she had built with so much love and devotion. Now her son is continuing to fight the case in court to cancel the gift deed to Nithyananda. "Nithyananda, if he is a genuine Swami, should be gracious enough to return a gift if a donor feels unhappy. He should not wait for the court to force him to return it", says Sujata reddy's son.

Tuesday, October 23, 2012

Kannada organisations have urged the govt of Karnataka to evict Nithyanantha from the state.

ராம்நகரம்: தமிழகத்தில் கைதாவதிலிருந்து தப்பிப்பதற்காக கர்நாடகத்திற்கு வந்து விட்ட நித்தியானந்தாவை, அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்துள்ளன.
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டு சில மாத சர்ச்சைகளுக்குப் பின்னர் சில நாட்களுக்கு முன்பு அப்பதவியிலிருந்து விரட்டப்பட்டார் நித்தியானந்தா. மேலும் அவர் மீது மதுரை ஆதீனம், மதுரை போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட போலீஸார் முயலலாம் என்று செய்தி பரவியது. இதையடுத்து நித்தியானந்தா திருவண்ணாமலையிலிருந்து பிடதி ஆசிரமத்திற்கு ஓடி விட்டார்.
அவர் பிடதிக்கு வந்துள்ளதால் கர்நாடகத்தில் ஏற்கனவே அவர் மீது கடும் கோபத்தில் உள்ள கன்னட அமைப்புகள் மேலும் கோபமடைந்துள்ளன. நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி, நேற்று இரவு முதல் கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சாலையில் டயர்களைப் போட்டுக் கொளுத்தியும், நித்தியானந்தாவின் படத்துக்கு தீ வைத்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஆசிரமத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டு வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளதால், நித்தியானந்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 http://tamil.oneindia.in/news/2012/10/23/india-kannada-organisations-protest-against-nithyanantha-163605.html