கோவை, ஆக. 7–
கர்நாடக மாநிலம் பிடதியில் நடந்த கூட்டத்தில் நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சியினரை விமர்சித்து பேசியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் திருஞானம், மாவட்ட பொருளாளர் பூபதி உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திடீரென நித்யானந்தாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உருவ பொம் மையை கைப்பற்றினர். நித்யானந்தா வருகிற 3–ந் தேதி கோவைக்கு வர இருக்கிறார். அப்போது அவருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
http://www.maalaimalar.com/2014/08/07123325/defamation-about-communist-pro.html
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவண்ணாமலை: நித்தியானந்தாவை கண்டித்து கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, ஆக.7–
திருவண்ணாமலை கம்யூனிஸ்டு கட்சியினரை நித்தியானந்தா இழிவாக பேசியதாக அவரை கண்டித்து நேற்று திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர்கள் சுப்பிரமணி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் எம்.வீரபத்திரன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நித்தியானந்தாவை கண்டித்து பேசினர்.
இதில் சிவகுமார், பாரி, பலராமன், ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டு நித்தியானந்தாவை கண்டித்து கோஷமிட்டனர். நித்தியானந்தாவின் உருவப் படத்தையும் எரித்தனர்.
http://www.maalaimalar.com/2014/08/07151805/tiruvannamalai-communist-demon.html
No comments:
Post a Comment