மதுரை: மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததற்கு மதுரை கோர்ட் விதித்த தடையை நீக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது. மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் தற்போது பதவி வகித்து வருகிறார். அந்த மடத்தின் 293-வது மடாதிபதியாக அதாவது இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை கடந்த 22.4.2012 அன்று அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இது பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பியது. மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா வந்தபோது பெரும் போராட்டங்களும் நடந்தன. இந்த நிலையில், ஆதீன மடத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் மதுரை மாவட்ட முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அருணகிரிநாதர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்தது ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள முக்கிய வழக்கு முடிவடையும் வரை மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து 26.2.2013 அன்று சப்-கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார். அதில், இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த மனுவில் என்னை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. எனது தரப்பு விளக்கத்தை கீழ்கோர்ட் கேட்கவில்லை. எனவே, கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அருணகிரிநாதர் தரப்பில் வக்கீல்கள் நாகேந்திரன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார். இறுதியில் நித்தியானந்தாவின் அப்பீல் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், மதுரை ஆதீன மடத்தின் ஆவணங்களை பார்க்கும் போது, ஒரு மடாதிபதி உயிருடன் இருக்கும்போது இன்னொருவரை மடாதிபதியாக நியமிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோன்று மடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை நித்தியானந்தா பூர்த்தி செய்யவில்லை. நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்து பிறப்பித்த உத்தரவை அருணகிரிநாதர் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதுதொடர்பான வழக்கு தனியாக உள்ளது. எனவே, கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என்று நீதிபதி கூறி விட்டார்.
http://tamil.oneindia.in/news/tamilnadu/nithyanatha-s-petition-dismissed-madurai-hc-209038.html
http://m.vikatan.com/tiny/index.php?module=news&aid=31532
http://www.tutyonline.net/view/32_73679/20140820084025.html
http://www.dailythanthi.com/News/State/2014/08/20083731/nithyanda-pettion-dismissed-in-madurai-court.vpf
மதுரை: மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக தன்னை குறிப்பிட்டு நித்யானந்தா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீன மடத்திற்குள் நான் நுழையக்கூடாது எனவும், மடத்தின் பணிகளில் ஈடுபடக்கூடாது எனவும் இந்து அறநிலையத்துறை ஆணையர் மதுரை முதன்மை சப்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சப்கோர்ட் கடந்த 26.2.2013ல் நான் மடத்துக்குள் சென்று, பணிகளில் ஈடுபட இடைக்காலத் தடை விதித்தது. சப்கோர்ட் டில் நடக்கும் வழக்கில் நான், எந்த வகையிலும் சம்பந்தப்பட்டவன் அல்ல. தற்போதைய ஆதீனம் என் பதவியை ரத்து செய்தது தொடர்பாக தனி வழக்கு நிலுவையில் உள்ளது. இதை சப்கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. என் தரப்பு விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. 293வது ஆதீனமாக நான் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும், மடத்தின் மரபுகளுக்கு எதிரானது எனவும் கீழ்கோர்ட் முடிவுக்கு வந்துள்ளது. எனவே சப்கோர்ட் டின் இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, ‘‘கீழ்கோர்ட்டின் உத்தரவு சட்ட விரோதமானது அல்ல. அதில் குறைபாடு காணமுடியாது. இதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. ஆவணங்களின் படி ஒரு மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, இன்னொருவரை மடாதிபதியாக நியமிக்க முடியாது. மேலும் மடாதிபதிகளின் தகுதிகள் குறித்தும், யார் யாரெல்லாம் மடாதிபதியாக முடியும் என்பது குறித்தும், மடத் தின் ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நித்யானந்தா இதில் எந்த தகுதியையும், நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. தற்போதுள்ள ஆதீனம், மனுதாரரது நியமனத்தை ரத்து செய்துள்ளதாக கூறியுள் ளார். நிர்வாகத்தின் தரப்பி லும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’’ என உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=105839

No comments:
Post a Comment