நித்யானந்தா அளித்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பிடதியில் ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா, அங்கிருக்கும் பெண்களை கற்பழித்துள்ளதாகவும், நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் புரிந்ததாகவும் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
கர்நாடகாவில் உள்ள பிடதியில் ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா, அங்கிருக்கும் பெண்களை கற்பழித்துள்ளதாகவும், நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் புரிந்ததாகவும் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன்பின் இவ்வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அந்த சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் நித்யானந்தாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தொடர்பான வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனை எதிர்த்தும் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ராம்நகர் நீதிமன்றத்தில் வரும் 7ம் திகதி ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
எனவே நித்யானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் அவர் 7ம் திகதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது
http://indru.todayindia.info/nithyananda-to-know-the-truth-6th/
No comments:
Post a Comment