நித்தியானந்தாவுக்கும் பரபரப்பு செய்திகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்போல தெரிகிறது. சிறிது நாட்கள் நிம்மதியாக இருந்த நித்தியானந்தாவுக்கு தற்போது கோர்ட் வடிவில் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பெண் சீடர் ஆர்த்தி ராவ் பிடதி காவல் நிலையத்தில் நித்தி மீது செக்ஸ் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட பிடதி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நித்தியை கைதுசெய்தனர். மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட நித்தி பின்னர் கஷ்டப்பட்டு ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
பின்னர் இந்த வழக்கிற்காக பிடதி போலீஸார் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். போலீஸாரின் மனுவை விசாரித்த ராம்நகர் நீதிமன்றம், ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. மேலும் 'நித்தியானந்தா இந்த ஆண்மை பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நித்தி, இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.
அதன்பின்னர் ராம்நகர் நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நாளில் நித்தியானந்தா மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதற்கு நித்தியானந்தா வழக்கறிஞர் முத்து மல்லையா, 'ஸ்வாமி ஆன்மிகப் பயணமாக ஹரித்வார் சென்றிருப்பதால் போலீஸார் திட்டமிட்டுள்ள நாளில் ஸ்வாமி வர இயலாது. ஆகவே அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹொசகவுடர், 'நித்தியானந்தாவுக்கு போலீஸார் திட்டமிட்ட ஆகஸ்ட் 6-ம் தேதி கண்டிப்பாக ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும். அதையடுத்து 7-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் அவரை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும். வெளியே தப்பித்துச் செல்லாமல் இருக்க பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
''பரபரப்புத் திருப்பங்களாக இருக்கிறதே!''
ஹரித்துவாரில் இருந்த நித்தி. தீர்ப்பைக் கேட்டு ஆடிப் போய்விட்டாராம் நித்தி. 'ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். என்ன செய்வீர்களோ தெரியாது, இந்தத் தீர்ப்புக்கு ஸ்டே வாங்குங்கள்’ என்றாராம். 'ஏற்கெனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் வரைக்கும் போய் ஒன்றும் ஆகவில்லை. அதனால் மறுபடியும் உயர் நீதிமன்றம் போக முடியாதே’ என்றார்களாம் வக்கீல்கள். தன்னால் ஆண்மை சோதனைக்கு ஏன் சம்மதிக்க முடியாது என்பதற்காக காரணங்களை அடுக்கினாராம் நித்தியானந்தா. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள் அவரது சட்ட சீடர்கள்!''
http://www.thedipaar.com/news/masculinity-test-nithyananda/

No comments:
Post a Comment