கம்யூனிஸ்ட் கட்சியினரை தரக்குறைவாக பேசியதாக நித்யானந்தாவை கண்டித்து கலசப்பாக்கத்தில் அவரது உருவபொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவாமி நித்யானந்தா கம்யூனிஸ்ட் கட்சியினரை தரக்குறைவாக பேசியதாக கலசப்பாக்கம், பஜார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாலுகா குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நித்யானந்தாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அங்கு மறைத்து வைத்திருந்த நித்யானந்தாவின் உருவ பொம்மையையும் எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment