டெல்லி: ஆண்மை சோதனை செய்து கொள்ள நித்யானந்தா ஏன் பயப்படுகிறார் என்று கேட்ட உச்ச நீதிமன்றம் பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆண்மை சோதனை செய்வது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது அவரது சீடரான ஆர்த்தி ராவ் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நித்யானந்தா தான் ஒரு ஆண்மை இல்லாத ஆள் என்று போலீசாரிடம் தெரிவித்தார். அதை நம்ப மறுத்த போலீசார் அவருக்கு ஆண்மை சோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த 5ம் தேதி தடை பெற்றார். இந்நிலையில் நித்யானந்தாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரை ஆண்மை சோதனை செய்ய வலியுறுத்தக் கூடாது என்று தெரிவித்தார். அவரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் கூறுகையில், 2010ம் ஆண்டு நித்யானந்தா மீது தொடரப்பட்ட வழக்கில் போலீசார் அவருக்கு ஏன் இன்னும் ஆண்மை சோதனை செய்யவில்லை. பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிச்சயம் ஆண்மை சோதனை செய்ய வேண்டும். அதுவும் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சோதனை மிகவும் அவசியம். நித்யானந்தா எதற்காக இந்த சோதனையை செய்ய அச்சப்பட வேண்டும்? நீங்கள் சோதனை செய்ய தயங்குவதில் இருந்து ஏதாவது நினைக்கத் தோன்றும். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/india/potency-test-accused-necessary-rape-case-supreme-court-209147.html
Read more at: http://tamil.oneindia.in/news/india/potency-test-accused-necessary-rape-case-supreme-court-209147.html
குற்றம் இல்லை என்றால் நித்யானந்தா பயப்படுவது ஏன்?
2014-08-20 22:51:41நித்தியானந்தா வேண்டுமென்றே தன் மீதான பாலியல் வழக்கை காலதாமதுபடுத்துவதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஆர்த்திராவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பாலியல் வழக்கில் தன்மீதான ஆண்மை பரிசோதனைக்கு தடை கோரி நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது ஆஜரான நித்தியானந்தாவின் வழக்கறிஞர் இந்த பாலியல் புகார் 2004ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து கடந்த 2010ம் ஆண்டு தான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2014ம் ஆண்டு தான் ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை மறுத்த கர்நாடக அரசின் வழக்கறிஞர், பரிசோதனைக்கு தயார் என்று நித்தியானந்தாவே எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நித்தியானந்தா புதிய மனுக்களை தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தன் மீது குற்றம் இல்லை என்றால் ஆண்மை பரிசோதனைக்கு நித்தியானந்தா தயங்குவது ஏன் என்றும் தானாகவே ஆஜராகி நிரபராதி என உறுதி செய்து வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
http://newtamils.com/fullview.php?id=4203
No comments:
Post a Comment