கருத்துகள்
பெங்களூர் : ‘நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நித்யானந்தாவுக்கு ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன் றம் எச்சரிக்கை விடுத்தது.கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள நித்யானந்த ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனையும் நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மேல்முறையீடு செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொ டர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு மீதான விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எச். எஸ்.ஹொசகவுடர் முன்னிலையில் நித்யானந்தா வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. அப்போது, நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் முத்துமலை, ‘‘நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தீர்ப்பு வெளியாகும் வரையில் இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சிஐடி போலீஸ் வக்கீல், ‘‘ஆண்மை பரிசோதனை செய்யும் முடிவு மனுதாரர்களின் மெத்தனம் காரணமாக காலதாமதமாகி வருகிறது’’ என்றார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, ‘‘நீதிமன்ற விசாரணைக்கு சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்கவில்லை என்றால் உங்களுக்கு வழங்கியுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்வதுடன், கைது செய்து விசாரணையை சந்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்து, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=106822
No comments:
Post a Comment