புதுடெல்லி: வழக்கை வேண்டுமென்றே காலதாமதுபடுத்துவதாக நித்தியானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களுரூவை சேர்ந்த ஆர்த்திராவ் என்பவர் தொடர்ந்த பாலியல் வழக்கில் ஆண்மை பரிசோதனைக்கு தடைக்கோரி நித்தியானந்தா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சனா பிரதாப் சேதசாய் மற்றும் ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் பராஸ்வரன் பாலியல் புகார் 2004-ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக கூறினார்.
இது குறித்து 2010-ம் ஆண்டு தான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் 2014-ம் ஆண்டு தான் ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது என்றார். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று அவர் தெரிவித்தார். கர்நாடக உயர் நீதிமன்றம் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பராஸ்வரன் கூறினார்.
ஆனால் இதனை மறுத்த கர்நாடக அரசின் வழக்கறிஞர் எம்.என்.ராவ் நித்தியானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் போதிய அவகாசம் கொடுத்த நிலையில் பரிசோதனைக்கு தயார் என்று நித்தியானந்தாவே எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நித்தியானந்தா புதிய மனுக்களை தாக்கல் செய்து வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தனர்.
சரியான நேரத்தில் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யாத கர்நாடக அரசுக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தம் மீது குற்றம் இல்லை எனறால் ஆண்மை பரிசோதனைக்கு நித்தியானந்தா தயங்குவது ஏன் என்று வினவிய நீதிபதிகள் தானகவே முன்வந்து ஆஜராகி நிரபராதி என உறுதி செய்து வழக்கில் இருந்து விடுதலை ஆகலாம் என்றும் கூறினர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=105967

No comments:
Post a Comment