August 22, 2014 09:46 ISTUpdated: August 22, 2014 09:46 IST
நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த விசாரணை நீதிமன்றம் உத்தர விட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, நித்யானந்தா தரப்பில் ஆண்மை பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணைக்கு வந்தது. கர்நாடகா சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் குற்றப்பத்திரிகை குறித்த விவரங்களை நீதிபதிகள் கேட்டனர். அவர் குற்றப்பத்திரிகை விவரங் களை சரியாக தெரிவிக்காததால், கோபமான நீதிபதிகள், “வழக்கின் குற்றச்சாட்டு என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருப்பதா?” என்று அதிருப்தியை வெளியிட்டனர்.
பின்னர் கர்நாடக அரசு வழக்கறிஞர் தேடி எடுத்து நித்யானந்தா உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விவரங் களை தெரிவித்தார்.
நித்யானந்தா சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி, மருத்துவ பரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். அதை நீதிபதி கள் ஏற்க மறுத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது நடிகை ரஞ்சிதா காவி உடையில் ஆஜராகி இருந்தார். புகார்தாரர் தரப்பில் ஆர்த்திராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
நீதிபதிகள் கூறியிருப்பதாவது: ‘இந்த வழக்கில் விசாரணையே நடக்காமல் இழுத்தடிக்கப்படு வதால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்.
இந்த வழக்கை இனியும் தாம தப்படுத்தக் கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் மீது குற்றம் இல்லை என்பது நிரூபணமானால், வழக்கில் இருந்து விடுதலை பெற முடியும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
http://tamil.thehindu.com
No comments:
Post a Comment