நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜன், மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன் மற்றும் பலர் பேசினர். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு வகுப்புகள்
அப்போது ஏழை குழந்தைகளின் கல்விக்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1411 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையே கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு காரணம். 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்பு மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
காத்திருப்பு போராட்டம்
பெற்றோர்களிடத்தில் ஆங்கில மோகம் அதிகரித்து விட்டதால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்களை நியமிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவக் குமார், குமரேசன், பலராமன், வக்கீல் அபிராமன், ஜெயபால் மற்றும் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நுழையவிட மாட்டோம்
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் ‘நித்தியானந்தா சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவர் திருவண்ணாமலைக்கு வந்தால் அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/2014/08/01191742/Communist-Party-About-Defamation-Nithyananda-Tiruvannamalai.vpf
No comments:
Post a Comment